*அடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி!* *ஒரே நபர் கொள்கை:* அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே போகும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்… வீட்டின் ஒவ்வொரு தேவையின்போதும் அவர் ஒருவரே வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களை அவர் உடன் அழைத்துச் செல்வதையோ, அவருக்குப் பதிலாக மற்றவர்கள் செல்வதையோ தவிர்க்க வேண்டும். *ஒரே ஆடை:* அப்படி வெளியே செல்லும் நபர், ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் ஒரே ஆடையை அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம். அது முழுமையான ஆடையாக இருக்க வேண்டும். இந்த ஆடைகளை மற்ற ஆடைகளுடன் கலந்துவிட வேண்டாம். *ஒரே வாலெட்:* வெளியே செல்லும் நபர், ஒரே வாலெட்டைப் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் பணம், மீதி சில்லறை போன்றவற்றை வீட்டில் இருக்கும் மற்ற பணம், மற்றும் சில்லறைகளுடன் கலந்துவிடக்கூடாது! *ஒரே பை:* ஒவ்வொரு முறை கடைகளுக்குச் செல்லும்போதும் ஒரே பையை எடுத்து செல்லலாம். வீட்டுக்கு வந்த பின்னர் அந்தப் பையை தனியே வைத்துவிடலாம். வீட்டுக்கு வெளியே வைப்பதற்கு வாய்ப்பு இருந்தால், அங்கேயே வைத்துவிடுவது நல்லது! *ஒரே வாகனம்:* இன்று பல வீடுகளில் ஒன்று...