#*பெருங்குளம்- செங்கோல் ஆதீனம் வரலாறு!* ————————————— *பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி (Thaamirabharani) கரை அருகே மூத்த தமிழ் இலக்கிய படைப்பாளி மாதவையா, அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி பிறந்த பெருங்குளத்தில் அமைத்துள்ள சைவ மடமாகும். இந்த ஆதீனம் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்று வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என பெயர் பெற்றது*. முற்காலத்தில் 18வது பட்டம் குருமகா சன்னிதானம் திகம்பர சித்தர் காலத்தில் சோழ மன்னரிடம் போரிட்டு வென்ற பாண்டிய மன்னர் பெருஙகுளத்தில் திகம்பர சித்தருக்கு மடம் அமைத்து அவரை வழிபாடு செய்து அவர் வழங்கிய செங்கோலை பெற்று மகிழ்ந்தான் தொடர்ந்து கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு அக்காலத்தில் செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்ற ஆதீனமாக பெருங்குளம் ஆதீனம் ஒரு காலத்தில் இருந்து வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என்ற ஒரு சிறப்புப் பெயர் அக்காலம் முதலே இருந்து வருகிறது 102ஆவது மடாதிபதியின் பூர்வாசிரமஅரசு அனுமதியுடன் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சம
Social Blog from Co1 Network