பேசுவதற்கு நேரமில்லை என்று தட்டிக் கழிப்பது... நம்மிடம் பேசுவதற்கு மனம் இல்லை என்றே பொருள்...!! பலரது அக்கறை சில்லறை உள்ளவரை... சிலரது அக்கறை மட்டுமே கல்லறை சேரும் வரை...!! மனிதனுக்குள் இருக்கும் வக்கிர புத்தியை காட்டிக் கொடுக்கும் மந்திரக் கண்ணாடிதான் சிசிடிவி கேமரா...!! நம் கெட்ட வினைதான் நமக்கு செய்வினை... நம் குறைதான் நாம் செய்யாத நல் வினை...!! எலியை துரத்த பூனையை வளா்த்து பாலை இழந்த கதைதான் பெரும்பாலான மனிதனின் மனநிலை...!! அகிம்சை இல்லை எனில் பலரது வாழ்க்கை இம்சை ஆகிவிடும்...!! "பசி" என்று வந்தவாிடம் இல்லை என்று கூறி விரட்டி விட்டு ... பின்னா் முன்னோா்கள் வந்து விட்டாா்கள் என்று காக்கைக்கு உணவு வைக்கும் வினோதமான மொட்டை மாடி உலகம் இது...!! என்று நம் உடல் நலனை கண்டறிய கருவியின் முடிவுகளை நம்பினோமோ.... அன்றே நாம் தோற்க தொடங்கி விட்டோம்...!! அப்பா அம்மா சொன்னதுக்காக அறிமுகமே இல்லாத ஆணிடம் கழுத்தை நீட்டி... கடைசி வரைக்கும் நல்லது கெட்டதில் பங்கு பெற்று... சாகிற வரைக்கும் அவனோட குப்பை கொட்டுற மனைவி நூறு தாய்க்கு சமம்...!! மதித்த...
Social Blog from Co1 Network