*முடியும்… முடியும்…* ’ *என்றே சிந்தியுங்கள்*! – நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் ஒரு துளியே! எனவே, நாம் எதைத் தீர்மானமாக விரும்புகிறோமோ அதைப் பிரபஞ்ச மனம் பெற்றுத் தந்து விடுகிறது என்பது உண்மை. எனவே, எப்போதும் மகிழ்ச்சியை, நல்லதை, வெற்றியை, ஆரோக்கியத்தையே உறுதியாகச் சிந்தித்து ‘முடியும்’ ‘முடியும்’ என்று தீர்மான முடிவுடன் வாழ ஆரம்பித்தால் போதும். நம் வாழ்க்கையில் அற்புதங்கள் அன்றாடம் நிகழ ஆரம்பிக்கும். காரணம், மனம் எதை உறுதியாக எண்ணுகிறதோ அதைப் பல மடங்கு அதிகமாகப் பிடித்துக் கொண்டு வந்து நமக்குத் தந்து விடுகிறது! எந்த ஒரு மனிதனும் மூச்சு விடுவதால் வாழ்வதில்லை. அவன் துணிந்து செய்துள்ள நற்செயல்களால் தான் வாழ விரும்புகிறான். எல்லோரிடமும் ஏதோ ஒரு கனவோ அல்லது கடமையோ இருக்கிறது. அதை நிறைவேற்ற முடியும் என்ற எழுச்சியூட்டும் நம்பிக்கையும் இருக்கிறது. அதனால்தான் இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ விரும்புகிறான். எந்த ஒரு மனிதனும், ‘என்னிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அதனால் வாழ விரும்புகிறேன்’ என்று சொல்வதில்லை. ‘எனக்கு ஒரு பெரிய கடமை, இலட்சியம், பொறுப்பு போன்றவை உள்ளன. அவ