Skip to main content

Posts

Showing posts from August, 2023

சந்திராயன் பயணம்

கடக்கும் தொலைவு  நீண்டதாக இருந்தாலும் சுங்கச் சாவடியில்லாதது தமது பயணத்தில் சுகமாக இருந்ததாய் சந்திராயன் சொன்னான் பள்ளம் மேடான சாலைகள் கூட நிலாவை அடையும் வரை எங்கும்  பார்க்கவில்லையென அவன் சொன்னது அதிசயமாய் இருந்தது சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாய் வசூலிக்கும் சாலையோர சிற்றுண்டி விடுதிகள் ஒன்றுகூட காணவில்லை என சந்திராயன் சொன்னது சரித்திர முக்கியத்துவமானது வழியில் காசு வாங்க ஒரு கடவுள் கூட உண்டியல்  வைத்திருக்கவில்லை  எனச் சொன்னது நம்ப முடியாத ஆச்சரியம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் போக்குவரத்து விதி  மீறலென போலீஸ்  பிடிக்காததை சந்திராயன் சொல்லி  சிரித்தான் செல்கிற வழிகளில் விண்வெளி  இடங்களை வீட்டு மனைகளாக்கி விலை பேசி விற்க ரியல் எஸ்டேட்  நிறுவனங்களின்  அறிவுப்பு பலகையை பார்க்காதது  சந்திராயனுக்கு ஷாக் உற்சாக பானம் அருந்திவிட்டு உருண்டு புரண்டு கிடக்கும் எந்த பரமாத்மாக்களையும் தான் செல்லும்  வழியில் பார்க்காதது சந்திராயனுக்கு சற்று சௌகரியக்குறைவுதான் நிலவின் தென்துருவத்தில் இறங்கி  வெகு நேரமாயிற்று இன்னும் கூட பாட்டி வந்தபாடில்லை பேரப்புள்ளையை ஆரத்தி எடுக்க என வருத்தம் வேறு  அவனுக்கு

பாராட்டு

ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்.. 'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'.  போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்' அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார்,இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார் போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்'என்றார் இதை