செய்வதை துணிந்து செய் சொல்கிறார் #பாரதி டிசம்பர் 11 பிறந்த நாள் • எந்தவொரு செயலை எடுத்தாலும். துணிந்து செய். • திறமை உள்ளவரிடம் பணியாளராக இருந்தாவது தொழிலை கற்றுக் கொள் • கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார். • அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்து விட்டால் இன்பம் மறைந்து விடும். • அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கி விட்டால், நரக துன்பத்தை அனுபவிக்கும்நிலை உண்டாகும். • துன்பம் வரும் போது, கட்டுப்பாடு எனும் கடிவாளத்தால் மனதை இழுத்துப் பிடித்துக் கொள். • பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படுகின்றன. • அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும். தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும். • ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவரவர் கையில் தான் இருக்கிறது. • வைரம் போல உடலை உறுதியாக மாற்று.உடல் வசப்படாவிட்டால் வாழ்வு நரகமாகி விடும். • ஒரு செயலை துவங்கும் போது அதன் பயன் இன்னதென்று தெரிந்தே செய்ய வேண்டும். • பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என மனதால் நினைத்தாலும் பாவம். • நல்லவரின் நட்பு, ஒருவனை அறியாமையில் இருந்து அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும். • கடவுள் அறிவ...