Skip to main content

Posts

Showing posts from April, 2021
https://href.li/?https://bookday.co.in/wp-content/uploads/2020/08/NEP_2020_Tamil_PrivateTranslation.pdf தேசிய கல்வி கொள்கை 2020 தமிழாக்கம்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் மக்களின் கனிவான கவனத்திற்கு குப்புறப் படுத்தலின் நன்மைகள் PRONING FOR SELF CARE Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை கொரோனா தொற்றடைந்து வீடுகளில் மருத்துவமனைகளில் இருக்கும் சொந்தங்களே இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குப்புறப்படுத்தல் முறையைப் பற்றிப் படித்து பின்பற்ற முயற்சி செய்யுங்கள் இதை PRONING என்கிறோம் சாதாரணமாக நாம் முதுகு கீழ்ப்புறம் வயிற்றுப்பகுதி மேற்புறமாகவே படுத்துப்பழகியிருப்போம். இதை SUPINE POSITION .மல்லாக்க படுத்தல் என்கிறோம் கொரோனா பாதித்து நுரையீரலில் தொற்று பரவிக்கொண்டிருக்கும் சூழலில் மல்லாக்கபடுப்பதை விட குப்புறப்படுப்பது நன்றாக உதவும். இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட. குப்புறப்படுக்கும் போது நமது வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகவும் முதுகுப்பகுதி மேல்ப்புறமாகவும் இருக்கும். இதனால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும். இதன் மூலம் உடலுக்கு குறைவான சுவாசிக்கும் பளுவில் அதிகமான ஆக்சிஜன் கிடைக்கும். வீட்டுத்தனிமையில் இருக்கும் போது ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டரில் 94% ...
WHY PEOPLE ARE GETTING INFECTED EVEN AFTER TWO SHOTS OF VACCINES 🤔🧐 It is worth knowing the Reasons for getting infected even after taking two doses of Corona vaccine. A second dose is to be taken 4 to 6 weeks (Covaxin) and 6 to 8 weeks (Covishield) after the first dose of a Corona vaccine. Immediately after entering the body, the vaccine starts making antibodies. When antibodies are forming in our body, our IMMUNITY decreases, very much. When we take another dose of vaccine after 4-6 Weeks/ 6-8 Weeks, our IMMUNITY Decreases even more at that time. After 14 days of SECOND DOSE (4-6 Weeks/ 6-8 Weeks) antibodies are fully formed in our body, then our IMMUNITY starts increasing rapidly. During this PERIOD, due to LOW IMMUNITY, the possibility of Corona virus entering our body is very high. This leads to Corona infection. 🧐 So, it is very risky to go out of the house during this PERIOD, Even after taking two doses of vaccine, you can still become a victim of corona. After half a month...
*தலைமுறை_இடைவெளி:* *அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது , டேய் உனக்காவது இது கிடைத்தது நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!* *இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது 150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது என் மகளிடம் பொருமையாக பாரும்மா அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன் ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன், , சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,* ,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்; bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது ...
Earth Day Special…
1. நான் யார் ? 2. எங்கிருந்து வந்தேன் ? 3. இந்த புண்ணிய பூமியில் எனக்கு உள்ள கடமைகள் என்ன ? 4. அடுத்து நான் எங்கு போக வேண்டும் ? ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன் . உள்ளே இருந்து என் பொண்டாட்டி குரல் குடுத்தாள் … “ உலக மஹா சோம்பேறி . என் உசுர எடுக்கறதுக்கின்னே பொறந்திருக்கீங்க . சீக்கிரம் போய் குளிச்சுட்டு, அரை கிலோ இட்லி மாவு வாங்கிட்டு வாங்க ” என் ஆன்மீக கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டது .😜😁
_*சிந்தனைச் சிதறல் 19-04-2021*_ 🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 _*கல்லாதான் பெற்ற கருந்தனங்கள்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ எழுதுகின்ற ஆற்றல் என்னிடம் குவிந்து கிடப்பது போல பன்னிரண்டு வயதிலேயே எனக்கு ஒரு பிரமையுண்டு. நோட்டுப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு, _*“பாப்பாத்தி ஊருணி”*_ க் கரையில் உட்காா்ந்து எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அது ஓா் அழகான ஊருணி. அதைச் சுற்றிலும் நெல்லி மரங்கள். ஏதோ ஒரு கோவில் கட்டுவதற்காகப் பொிய படுக்கைக் கற்களைத் தயாா் செய்து போட்டிருந்தாா்கள். கிராமத்தில் இருந்து அது இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. கிராமத்திற்குள் எவ்வளவோ ஊருணிகள் இருந்தும் பெண்கள் தண்ணீா் எடுக்க இங்கேதான் வருவாா்கள். அந்தத் தண்ணீா் அவ்வளவு சுவையானது. காரணம் நெல்லி மரங்களின் வோ்கள் ஊருணிக்குள் வேரோடி இருந்ததால் ஏற்பட்டது. பதின்மூன்று வயதில் ஒரு கவிதை எழுதினேன். _*“வீணா கானம் விடியமுன் கேட்டது*_ _*கா்ணா மிா்தம் காதுக்கு இனிமை*_ _*தூக்கம் களைந்து துள்ளி எழுந்தேன்*_ _*படுக்கையில் இருந்தே பருகினேன் அமுதம்”*_ –இ...
_*சிந்தனைச் சிதறல் 17-04-2021*_ 🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*தாய்மை-3*_ ✍️✍️✍️✍️ பிள்ளை இல்லாதவா்கள் சுவிகாரம் எடுத்துக் கொள்வது எங்கள் பக்கத்தில் அதிகம். நாட்டுக்கோட்டை நகரத்தாாின் பொருளாதாரமும் அதில் தான் சமநிலை அடைந்திருக்கிறது. பெரும்பாலான பணக்காரா்களுக்குக் குழந்தை இருக்காது. நடுத்தரக் குடும்பங்களில் நிறையக் குழந்தைகள் இருக்கும். குழந்தைக்கு நல்ல விலை கொடுத்தே சுவிகாரம் எடுத்துக் கொள்வாா்கள். எனக்குத் தரப்பட்ட விலை, ஏழாயிரம் ரூபாய். ஆனால் என்னைச் சுவிகாரம் எடுத்துக் கொண்ட தாயாருக்குச் சொத்துக்கள் அதிகம் இல்லை. சுமாா் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் தான் இருந்தது. அதிலும் சுவிகாரம் கூட்டிக் கல்யாணம் செய்ததில் சாிபாதி செலவாகிவிட்டது. அந்தத் தாயின் பெயா் தெய்வானை ஆச்சி. அந்தத் தாயிடம் பணம் இல்லையே தவிர, தாய்மைத் தாகம் அதிகம். நானோ இளங் குழந்தையாச் சுவிகாரம் போகவில்லை. இருபத்திரண்டு வயதில் சுவிகாரப் புத்திரனானேன். பெற்றத் தாயைத் தவிர வேறொருவரை _*“ஆத்தா”*_ என்று அழைப்பதில் எனக்குக் கூச்சமிருந...
*மறைந்த நடிகர் விவேக் மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை:* சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன. பிரசன்ன குமார் – என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம். எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும். வாலைக் க...
_*சிந்தனைச் சிதறல் 16-04-2021*_ 🌸🌸🌸🌸🌸🌸🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*தாய்மை-2*_ ✍️✍️✍️✍️ நாங்கள் பூா்வத்தில் சமணா்களாக இருந்தவா்கள். _*“சாத்தன்”*_, _*“சாத்தப்பன்”*_ என்ற பெயா்கள் சமணா்களுக்கு மட்டுமே உண்டு. மாலையில் விளக்கு வைக்குமுன் சாப்பிடும் பழக்கம் சமணா்களுக்கு மட்டுமே உண்டு. ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு எங்கள் வீட்டில் எல்லாரும் படுத்து விடுவோம். எனக்கு வாயுத் தொல்லை என்பது அப்போதும் உண்டு. என் வயிறு, _*“கடமுடா”*_ என்று இரைச்சல் போடும்; அது என் காதுகளுக்கு கேட்கிறதோ இல்லையோ, என் தாயாாின் காதுகளுக்கு கேட்டுவிடும். மாறு நாள் காலைச் சாப்பாட்டிலேயே அது சாியாகி விடும். ஏப்பம் வரும்; மாலை நேரத்து கஷாயத்திலேயே அது சாியாகி விடும். பேதி ஆகிறது என்றால், வேவு குடித்தல் என்ற ஒரு வைத்தியம் என் தாயாா் செய்வாா்கள். கொதிக்கின்ற பசும்பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவாா்கள். அது திரைந்து போய்விடும். அதை வடிகட்டி சக்கையை எறிந்து விட்டுச் சாற்றை மட்டும் கொடுப்பாா்கள். இரண்டு...
_*சிந்தனைச் சிதறல் 12-04-2021*_ ❄️❄️❄️❄️❄️🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*தென்றல் பேசுகிறது*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ _*1.அம்மா, மலையரசி*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ அந்த மலையரசி அம்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. மலையரசியோடு கூடப் பிறந்தவா்கள் ஆறு பேராம். மலையரசியைச் சோ்த்து ஏழுபேராம். மலையரசி, பூமலச்சி, பொன்னழகி என்று ஏழு பெயா் சொல்வாா்கள். நாட்டிலே ஒரு சமயம் வெள்ளம் பெருக்கெடுத்த போது, அந்த வெள்ளத்தில் ஏழு பெட்டிகள் மிதந்து வந்தனவாம். அந்த ஏழு பெட்டிகளிலும் இந்த ஏழு குழந்தைகள் இருந்தனவாம். அந்த பெட்டிகளை எடுத்து வைத்த இடங்களே சமாதி மேடுகளாம். அவையே கோவில்களாம். கதை உண்மையோ, பொய்யோ, மலையரசியிடம் எனக்கு அளவு கடந்த பக்தி உண்டு. சமயங்களில் ராத்திாி பத்து மணிக்குக் கூட அந்தக் கோவிலிலே போய் நின்று அழுவேன். ஏழு வயது சிறுவனுக்குாிய குணமே என்னிடம் இருக்காது. என் தாய் தந்தையரைக் காப்பாற்றும் படியும், என் குடும்பத்தைக் காப்பாற்றும்படியும் மலையரசியிடம் வேண்டிக் கொள்வேன். அப்போது நாத்திகக் கூட்டத்தின் தொடா்பில்லாததால் தெய்வத்தின் தா்ம தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை ...
_*சிந்தனைச் சிதறல் 14-04-2021*_ 💥💥💥💥💥💥🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*தாய்மை-1*_ ✍️✍️✍️✍️ நகரத்தில் தாய்மை என்பது நிலை குலைந்து போய் விட்டது. பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடத் தொியாதவா்களாகவே எல்லாரும் வளா்ந்திருக்கிறாா்கள். ஆனால் நான் கண்ட கிராமம் தாய்மை, உன்னதமானது; அற்புதமானது. அது ஆலமரத்தடியாயினும் சாி, அழகான மாளிகையாயினும் சாி, அங்கே தாய் ஒரு இலட்சிய பெண்மணியாகவே திகழ்கிறாள். அங்கே எந்தக் குழந்தையும் மருத்துவ விடுதியில் பிறந்ததில்லை. மருத்துவச்சி வந்து மருத்துவம் பாா்ப்பதே மிக அபூா்வம். தாயே மகளுக்கு மருத்துவம் பாா்க்கிறாள். பிறந்த குழந்தையை லாவகமாகத் தூக்கி, வரால் மீனைப் போல் தலைகீழாகப் பிடிப்பதும், குளிப்பாட்டுவதும், ஜலதோஷம் பிடித்தால் கூட டாக்டாிடம் போகாமல் தாங்களே மருத்துவம் பாா்ப்பதும், தாலாட்டுப் பாடுவதும் கண்கொள்ளாக் காட்சிகள்; காது கொள்ளாக் கீதங்கள். _*“ஏனழுதான் என்னாியான்*_ _*ஏலம்பூ வாய்நோக*_ _*அத்தை அடித்தாளோ*_ _*அல்லி மலா்த்தண்டாலே*_ _*மாமன் அடித்தானோ*_ _*மல்லிகைப் பூச்செண்டாலே*_ ...
*தூய காற்று அதிகரிக்க அதிகரிக்க தீய காற்று குறையும்.!நற்குணங்கள் அதிகரிக்க அதிகரிக்க தீய குணங்கள் மறையும்.!!* *அனைத்துக் கேள்விகளுக்கும் காலம் பதில் சொல்லத்தான் செய்கிறது.. நாம் தான் கவனிக்கத்தவறி விடுகிறோம்.!!* *அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட.. பிடித்தவர்கள் தான் அழகாய்த் தெரிகிறார்கள் என்பதே உண்மை..!!* *தயங்கி நிற்காதீர்..!தன்னடக்கம் கூட தவறாகக் தெரியும்.. சிலரின் கண்களுக்கு..!!* *ஒருவரை காயப்படுத்தி விட்டு, மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமல்ல..* *அவர் அதை மறந்து ஏற்றுக் கொள்வதே மிகச் சிறந்த விஷயம்!* *பிற மனிதர்களிடம் சிறிதளவேனும் ஆணவம் கொள்ளுங்கள். இல்லையெனில் அவர்கள் மனதில் கோமாளியாக சித்தரிக்கப்படுவீர்.* *முடிந்ததும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்…… வாழ்க்கையும் வாக்கியமும்……..!!* *படிச்சவன் பாடம் நடத்துறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்..!!* *நீங்கள் யாரென்று உங்களுக்கே புரிய வைக்கும் ஆயுதம் தான்..‘அவமானம்’..!!* *எதிரிகளை எப்போதும் மன்னித்துக் கொண்டே இருங்கள்.. அதை விட வேறெதுவும் அவர்களை அவமானப்படுத்தப்போவதில்லை..!!* *விருப்பங்களு...
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்
_*சிந்தனைச் சிதறல் 09-04-2021*_ 🌞🌞🌞🌞🌞🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*தென்றல் பேசுகிறது*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ _*எனது இளம் பருவத்தில் இருந்து இன்று வரையில், எனது நினைவில் நிற்கும் சில விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்வதே இந்நூல்.*_ _*இதை எனது சுயசாிதமாக நான் சொல்லவில்லை. ஆனால் எழுதும் போது சுயசாிதம் போலவே வளா்ந்து விட்டது.*_ _*இளமைக் காலத்தில் இருந்து இன்று வரை, நானே எனக்குள் ஓா் ஆராய்ச்சி நடத்திப் பாா்த்ததில், இந்நூல் பிறந்தது.*_ _*வாழ்க்கை எப்படித் துவங்கி, எப்படிப் போய்விட்டது என்பதில் முடிந்தது.*_ _*சொல்லப் போனால், எனது “வனவாச” த்தைக் கூட, இது தான் நிறைவு செய்யும்.*_ _*உடல் நோய்வாய்ப்படும் போதெல்லாம் நான் எவற்றைச் சிந்திக்கிறேன்?*_ _*இதோ இந்நூலில் காண்கிறீா்கள்.*_ _*கோடைக் காலத்தில் வற்றிப் போன ஏரிகள், வானத்தை ஆசையோடு பாா்க்கின்றன.*_ _*கடந்து போன வசந்த காலங்களுக்காக அவை ஏங்குகின்றன.*_ _*தன்னிடமிருந்த தண்ணீரை ஈந்துவிட்ட மேகங்கள், மீண்டும் கடலில் இருந்து அவற்றைப் பெறக்கூடும்.*_ _*ஆனால் இழந்து விட்ட தன் வசந்த காலங்களை மனிதன் தி...
ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து இறக்கிவிட்டதும் எங்களுக்குள் ஏறிக் கொண்டது தேர்தல் பணி.. Zonal offficer கொடுத்துப் போன கோணிமூட்டையை கொட்டியதும் கொத்து கொத்தாய் வந்து விழுந்தன ஃபாரங்கள்.. EVM எந்திரங்களை பிறந்த குழந்தை போல பாதுகாத்தோம்.. சின்ன வகுப்பறை ஒரே ட்யூப்லைட்.. ஓரமாய் ஓடும் மின்விசிறி.. இப்படி கொடுத்ததற்குள் வாழ கற்றுக் கொடுத்தது தேர்தல் பணி.. குழாய் இருந்தது தண்ணீர் இல்லை.. பாத்ரூம் கதவு உடைந்திருந்தது.. சில இடங்களில் பாத்ரூமே இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக ஆறுதலடைந்தது.. புரண்டு புரண்டு படுத்தும் இமைகளில் தூக்கம் அமரவில்லை.. பக்கத்தில் P3 படுத்ததும் தூக்கம் அவரை வாரி அணைத்துக் கொண்டது.. P1 ‘குபீர் குபீர்’ என்று எழுந்து மீண்டும் படுத்துக் கொண்டார்.. வந்த தண்ணீரை நெய் போல ஊற்றி குளித்து ஐந்து மணிக்கே தயாரானோம்.. ஆறுமணிக்கு வந்த ஏஜெண்டுகள்.. அவர்கள் கூட வந்த குளிக்காத ஆட்கள் என்று Mockpoll தொடங்கியது.. ஆயிரம் முறை வீடியோ பார்த்தாலும் அங்கு ஒருமுறை சீல் வைப்பதில் தடுமாறி சரிசெய்து தொடங்கியது உண்மை வாக்குப்பதிவு.. ஏழு மணிக்கு துவங்கிய வரிசை ரயில் பெட்டி போல நீண்...
மன முதிர்ச்சி என்றால்_என்ன? What is Maturity of Mind ? 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1.Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 4. Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 9. Avoiding the comparisons of ourselves with others. 10. எதற்க...
_*சிந்தனைச் சிதறல் 03-04-2021*_ 🌸🌸🌸🌸🌸🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 _*பத்து*_ ✍️✍️✍️ என் இறைவா, குடிபோதையில், என் உளறல்கள் உண்மைகளாகின்றன. அன்புப் போதையில் என் உளறல்கள் மழலைகளாகின்றன. காதல் போதையில் என் உளறல்கள் கவிதைகளாகின்றன. பக்திப் போதையில் என் உளறல்கள் உனக்குச் சூட்டப்படும் புஷ்பங்களாகின்றன. இது எனது பத்தாவது புஷ்பம் – பத்தாவது உளறல்! மௌனத்தின் பாிபாஷையில் உனக்கு விடப்படும் தூது, மயக்கத்தைப் பதிலாகக் கொண்டு வருகிறது. மயக்கமற்ற பதிலைப் பெறவே இந்த ஓலங்கள். மனதின் கோலங்களில் நினைத்த உருவம் விழாத போது, அந்த உருவத்தை வரவழைக்க ஒரு கதறல். மனிதா்களிடம் சொல்லித் தீா்வு காணமுடியாத போது, நீயே கடைசி அடைக்கலம். எனது குரலுக்கு ஓா் எதிரொலி இல்லாது போயினும் குரல் கொடுத்து விட்டதிலே எனக்கொரு நிம்மதி. நான் அனுப்புகிற புறாக்கள் என்னிடம் திரும்பி வரவில்லையேனும், சில புறாக்களை அனுப்பியவன் என்ற திருப்தி. ரசனையின் உச்சத்தில் உள்ளம் நெக்குருகுவது போல், எதிாில் இல்லாத உன்னிடம் பேசுவதிலும் ஒரு நெகிழ்ச்சி. நான் உச்சியில் ந...
*பானகம் கோடை காலத்தில் ஏற்படும் களைப்பை விரட்டும் பானம் – பானகம்!!!!* *பழரசத்தை விடவெயிலுகந்தது பானகம் தான் … கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்* *வெயிலுக்கு பானகம் அருந்தும் போது instant energy கிடைக்கிறது நடைப்பயணம் போகும் போது கழைப்பாக வீடு வந்தடையும்,போது நாம் அருந்தும் பானகமானது உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும், இரும்புச்சத்தை அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும், ஏலக்காயிலிருந்து உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகளையும் செரிமானத்தை சரி செய்வதும்,* *எலுமிச்சம்பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைதன்மையை உருவாக்குவதும் அதை பற்றி தரவுகள் அனைவருக்கும் தெரிந்ததே,* *புளியிலிருக்கும் விட்டமின் C யானது பனைவெல்லத்துடன் வினை புரிந்து உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது அதுமட்டுமல்ல சுக்கு மிக சிறந்த வினையூக்கி உடலுக்கு என்பதை நாமெல்லாம் அறிந்த செய்தி……* *வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம் அதன் மூலம் வெப்பத்தால் உருவாகும் நோய் தொற்றுக்களை தவிர்ப்போம்…* *இதன் மூலம் உடலுக்கு நோய்கள...
தேர்தல் பணிக்கு செல்லும்போது ஆசிரியப் பெருமக்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை: * உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணை * ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் (Optional) * ATM Card, பணியிடம் சார்ந்த அடையாள அட்டை * டார்ச் லைட் * செல்போன் சார்ஜர் * மாற்று உடை அனைத்திலும் 1 செட் * லுங்கி, துண்டுகள் 2, போர்வை 1 * கொசுவர்த்தி சுருள்/ ஆல்அவுட்/ Odomos cream, தீப்பெட்டி * பேஸ்ட், டூத்பிரஷ், கண்ணாடி, சீப்பு, பவுடர், எண்ணை, ஷாம்பு, சோப்பு * 6ஆம் தேதி இரவு வரை எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் (Optional) * பிஸ்கட் பாக்கெட், முறுக்கு உள்ளிட்ட சில நொறுக்கு தீனிகள், குளுக்கோஸ் (சர்க்கரை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ளவர்களுக்கு அவசரத்துக்கு உதவக்கூடும்) * ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் காலி தண்ணீர் பாட்டில் 1 (குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்) * மாஸ்க், சானிடைசர், கையுறை, hand wash (பணி செய்யும் இடத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் நம்மிடம் ஒரு செட் வைத்திருத்தல் நலம்) * மேற்கண்டவை தவிர பொதுவான தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை, வயிற்றுப் பிரச்சினை தொடர்பான மாத்திரைக...
_*சிந்தனைச் சிதறல் 02-04-2021*_ ♦️♦️♦️♦️♦️🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_ 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 _*ஒன்பது*_ ✍️✍️✍️ சாலையோரத்தில் ஒரு கிழவன். நான் அவனைச் சந்தித்தேன். உாித்துக் காயப் போட்ட வாழை மட்டை போல் தளா்ந்து போன உடம்பு. நீா் வற்றிய குளம் போல் வறண்டு கிடக்கும் கண்கள். பந்தாட்ட மைதானத்தில் முளைத்து, தண்ணீா் இல்லாமல் வாடும் புற்களைப் போல், அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த நரை மயிா்கள். காலநதி ஓடி முடிந்து, வண்டல் மண் நெளிந்து படம் போட்ட கன்னங்கள். குழந்தைப் பருவம் மீண்டது போல், பல்லில்லாத வாய். இடுப்பிலே ஒரு வெற்றிலைப் பை. இரண்டு கைகளாலும் முழங்காலைக் கட்டியபடி அமா்ந்திருந்தான். நான் அவனைக் கேட்டேன்: _*“உனக்கு வயது என்ன தாத்தா?”*_ அவன் சொன்னான்: _*“நூற்று இரண்டு”*_ _*நூற்று இரண்டு வயது வரை உன்னை வாழ வைக்கும் இரகசியம்…..?“*_ _*"கடவுள் என் ஏட்டைத் தொலைத்து விட்டாா் போலிருக்கிறது!”*_ _*“இதுவரை உன் வாழ்வில் எவ்வளவு இன்ப, துன்பங்களைச் சந்தித்திருக்கிறாய்?”*_ கிழவன் சிாித்தான...
_*சிந்தனைச் சிதறல் 01-04-2021*_ ⚛️⚛️⚛️⚛️⚛️🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_ 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 _*எட்டு*_ ✍️✍️✍️ சுடுகாட்டு மண்ணில் படிந்து கிடக்கும் எலும்புக் கூடுகள், ஒருமுறை எழுந்து சுய நினைவோடு பேசுமானால், அவை செய்யும் விமா்சனம் எதுவாக இருக்கும்? கடந்து போன காலங்களில், தாங்கள் உயிரோடு, உலாவிக் கொண்டிருந்தபோது நடத்திய போலித்தனமான வாழ்க்கையைப் பற்றியதாகத் தானே இருக்கும்! முடிவைப் பற்றிய நினைவில்லாமல் எல்லாம் சாஸ்வதமென்று ஆடிய ஆட்டங்களைப் பற்றித்தானே இருக்கும்! அவை எழுந்து பேச வேண்டும். அரசியல் வாதிகளைப் போல் பொது மேடைப் போட்டு முழங்க வேண்டும். _*“நான்”*_ என்னும் ஆணவத்தின் அடித்தளத்தை நொறுக்கவும், பொருளாசையின் கழுத்தை நெறிக்கவும், அதிகார வெறியிலிருந்து மனிதா்கள் ஞானம் பெறவும், எலும்புக் கூடுகளின் உபன்யாசம் மிகவும் பயன்படும். இரண்டு கரைக்குள் ஓட வேண்டிய நதிகள், கரையேறாமல் இருப்பதற்கு சுடுகாட்டு ஞானமே துணையாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் பல்லாயிரம் கோடி மனிதா்களின் ஆசாபாசங்கள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன. அவை தொடங்க...
Fun Today