🍀நான் குற்றவாளியா? 🍀 *....* கைபேசியான என்மீது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நீங்கள் குற்றம் செய்யாமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் "பேசிக்கொள்வீர்கள்" என்றுதான் நான் நினைத்தேன்! நீங்கள் "பேசியே! கொல்வீர்கள்" என்று நான் நினைக்கவே இல்லை. "பொழுதுபோக்காக" என்னில் சில இருப்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அதில் "பொழுதையே! போக்கினால்" அதற்கு நான் பொறுப்பல்ல. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று பேசுவீர்கள் அதெல்லாம் வெறும் வாய் சொல்தானா? பிள்ளைகள் விளையாட்டு விளையாடுவதால் படிப்பு கெட்டுப்போகிறது என்று குற்றங்களை என் மீது கொட்டுபவர்களே அன்று குழந்தை பருவத்தில் நிலாவைக்காட்டி மலர்களைக்காட்டி பாடிக்காட்டி ஆடிக்காட்டி பாலூம் சோறும் ஊட்டினார்கள். நீங்களோ உங்களுடைய சோம்பேறித்தனத்தால் "என்னை காட்டி " சோறும் பாலும் ஊட்டி கெட்ட பழக்க வழக்கங்களை கற்று கொடுக்கின்றீர்கள். "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பது உங்களுக்கு தெரியாதா என்ன ? என்னுடைய நன்மை...
Social Blog from Co1 Network