Skip to main content

மாதத்தின் புதிய அலகு மதி

.சூரிய நாட்காட்டி படி ஒரு மாதம் ஒரு ஆண்டின் 12இல் ஒரு பங்கு (31 அல்லது 30 நாட்கள்) ஆகும்.

சந்திர நாட்காட்டி படி ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்கள் கொண்டிருக்கும்..

ஒரு சாயன மாதம் – 27.33 நாட்கள்

ஒரு நிராயன மாதம் – 27.321661 நாட்கள் (approx 27 1/3)

ஒரு பௌர்ணமி மாதம் (புவியின் பார்வையில்) – 29.53 நாட்கள்

திருவள்ளுவர் நாட்காட்டியில் 12 மதிகள் உள்ளன.

திருவள்ளுவர் நாட்காட்டி 13 மாதங்கள் கொண்டது.ஒரு மாதம் 28 நாட்கள் ஆகும். அதை அளக்க புதிய அலகு தேவை. மதி என்ற புதிய அலகை அறிமுகப் படுத்துகிறோம்

ஒரு மதி – 28 நாட்கள்

மிகை மதி – 29 நாட்கள்

பெரு மதி – 30 நாட்கள்.

முதல்மதியான பாமதி சாதாரண ஆண்டில் 29 நாட்கள் (அதாவது மிகை மதி ஆக) இருக்கும்

மிகை ஆண்டில் (லீப் ) 30 நாட்கள் இருக்கும் (பெரு மதி).

திருவள்ளுவர் நாட்காட்டி மாதங்கள் (மதிகள்)

முதல் மதியான

பாமதிக்கு சாதாரண ஆண்டில் 29 நாட்களும் மிகை ஆண்டில் 30 நாட்களும் இருக்கும்.

பிற மதிகளுக்கு  தலா 28 நாட்கள் இருக்கும்

சிறப்புகள்:

1. இது எல்லா ஆண்டிலும் மாறாத ஒரு நிரந்தர நாட்காட்டி ஆகும்.

2. இதை எல்லா மதத்தவரும் பயன்படுத்தலாம்

3. எல்லா மாதமும் ஒரே நாளில் பிறக்கும். ஒரே மாதிரி இருக்கும்.

4. 28 நாட்கள் என்பது நிலவு பூமியைச் சுற்ற ஆகும் காலத்தின் தோராய அளவு ஆகும்.

Comments

Popular posts from this blog

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓசூரில் வேலைவாய்ப்பு

Co1+ Logo