தமிழ் சர்வதேச திருவள்ளுவர் (தசதி) நாட்காட்டி
தசதி நாட்காட்டி என்பது தமிழ் சர்வதேச திருவள்ளுவர் நாட்காட்டி என்பதன் சுருக்கம் ஆகும். தற்போதைய தமிழ் நாட்காட்டி 12 மாதங்களை கொண்டிருக்கும். அது கிரிகோரியன் நாட்காட்டியை போல் நிரந்தர மாறாத நாட்காட்டி அல்ல. தமிழில் ஒரு மாறாத நாட்காட்டி தேவைப்படுகிறது.
தசதி நாட்காட்டியில் 13 மாதங்கள் உள்ளன. ஆண்டுக்கு 365 நாட்கள். 13 மாதங்களை பிரித்தால் மாதம் ஒன்றுக்கு 28.077 நாட்கள் வரும். ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் (சரியாக 4 வாரங்கள்) வரும். முதல் மாதம் மிகை மாதம் ஆகும் (ஆங்கிலத்தில் லீப்).மிகை மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களும் மிகை ஆண்டில் 30 நாட்களும் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 முதல் நாள் ஆகவும் திருவள்ளுவர் ஆண்டை மையப்படுத்தியும் உருவாக்கப்படுகிறது.28 நாட்கள் கொண்ட மாதம் மதி என அழைக்கப்படுகிறது. முதல் மதி மிகைமதி ஆகும்.ஆகும்.திருக்குறளில் வரும் 13 இயல்களும் 13 மாதங்களாக (மதி) உள்ளது.
1. பாமதி (பாயிரவியல்) – ஜன 15
2. இல்மதி (இல்லறவியல்) – பிப் 13/14*
3. துறமதி (துறவறவியல்) – மார் 13
4. ஊழ்மதி (ஊழியல்) – ஏப் 10
5. அரசுமதி (அரசியல்) – மே 8
6. அமைச்சுமதி (அமைச்சியல்) – ஜூன் 5
7. அரண்மதி (அரணியல்) – ஜூலை 3
8. கூழ்மதி (கூழியல்) – ஜூலை 31
9. படைமதி (படையியல்) – ஆக 28
10. நட்புமதி (நட்பியல்) – செப் 25
11. குடிமதி (குடியியல்) – அக் 23
12. களமதி (களவியல்) – நவ 20
13. கற்புமதி (கற்பியல்) – டிச 18
* – மிகை ஆண்டில் நாட்காட்டி
சிறப்புகள்:
1. எல்லா மாதமும் (முதல் மாதம் நீங்கலாக)ஒ கிழமையில் பிறக்கும். ஒரே அமைப்பில் இருக்கும்
2.எல்லா ஆண்டிலும் மாறாமல் இருக்கும்.
3. திருக்குறள் 13 இயல்கள் 133 அதிகாரங்கள் 1330 குறள்கள் தசதி நாட்காட்டியில் 13 மாதங்களை சிறப்பிக்கன்றன.
4. ஆங்கில நாட்காட்டிக்கும் தசதி நாட்காட்டிக்கும் 14 (28/2) நாட்கள் வித்தியாசம் இருக்கும்.
5. திருவள்ளுவர் ஆண்டு கிமு 31. (13 என்ற எண்ணின் திருப்பிய வடிவம் ஆகும்)
Comments
Post a Comment