தற்போதைய தமிழ் நாட்காட்டி நிராயண அடிப்படையிலான ஒரு சூரிய நாட்காட்டி ஆகும். ஆண்டுகள் மற்றும் மாதங்களின் கால அளவு மாறிக்கொண்டே இருக்கும். மிக கடினமான அமைப்பைக்கொண்டுள்ளது. தமிழில் ஒரு எளிய நாட்காட்டி அனைவருக்கும் பொதுவாக பயன்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்டு:
திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் தையில் வருவதால் இந்த நாட்காட்டி தை மாதம் தொடங்குகிறது. ஜனவரி 15இல் இது நிரந்தரமாக தொடங்குகிறது. கிரிகோரியன் ஆண்டு நெட்டாண்டாக வரும் பட்சத்தில் திருவள்ளுவர் ஆண்டும் நெட்டாண்டாக வரும்.
மாதம்
நடப்பு தமிழ் நாட்காட்டியில் 12 மாதங்கள் உள்ளன. இதன் கால அளவு 29 நாட்கள் முதல் 32 நாட்கள் வரை உள்ளன. திருக்குறளில் 13 இயல்கள் வரும். அதை மாதங்களாக எடுத்துக்கொண்டால் ஒரு மாதத்தில் சராசரியாக 28.095577 நாட்கள் வரும். எல்லா மாதங்களுக்கும் 28 நாட்கள் என எடுத்துக்கொண்டால் 1.2425 நாள் கூடுதலாக வரும். இந்த கூடுதல் நாள் முதல் மாதத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஆக, முதல் மாதம் சாதாரண ஆண்டில் 29 நாட்களும் நெட்டாண்டில் 30 நாட்கள் கொண்டதாகவும் இருக்கும். மற்ற மாதங்களுக்கு எப்போதும் 28 நாட்கள் வரும்.
28 நாட்கள் கொண்ட மாதங்கள் சரியாக 4 வாரங்களை உள்ளடக்கி இருக்கும். இதனால் வார நாட்களுக்கும் தேதிக்கும் ஒரு நிரந்தர தொடர்பை உருவாக்கிவிடலாம்.
நிசதிக்குறள்
பாயில் துறவூழ் அரசமைச் சரங்கூழ்
படைநட்பு குடிகள கற்பு
வாரம்
பொதுவாக அனைத்து வகை நாட்காட்டிகளும் 7 நாட்கள் கொண்ட வாரத்தை பின்பற்றுகின்றன. இந்த நாட்காட்டியில் எல்லா மாதங்களும் 28 நாட்களை (4 வாரங்களை) கொண்டிருப்பதால் தேதிக்கும் வார நாளுக்கும் நிரந்தர தொடர்பு இருக்கும். முதல் மாதத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் கூடுதலாக வருவதால் ஒவ்வொரு ஆண்டும் வார நாட்கள் வேறுபடுகிறது.
இந்த குழப்பத்தை நீக்கும் விதமாக இரு வார நாட்கள் சேர்க்கப்படுகிறது. முதல் மாதத்தில் வரும் 29ஆம் நாள் குறுந்தினம் என்ற வார நாளில் சேர்க்கப்படுகிறது. இந்த குறுந்தினம் ஆண்டுக்கு ஒருமுறை வரும் மிகைதினம் ஆகும். நெட்டாண்டுகளில் மட்டுமே வரும் பாமதி 30ஆம் நாள் நெடுந்தினம் என்ற வார நாளில் சேர்க்கப்படுகிறது. நெடுந்தினம் 4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் (100, 200 மற்றும் 300 ஆம் ஆண்டு தவிர).
சிறப்புகள்:
1. ஆண்டு, மாதம், மற்றும் வாரநாட்கள் அனைத்தும் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளோடு தொடர்புடையது.
2. 13 மாதங்களில் 12 மாதங்கள் சமமாக 28 நாட்கள் (சரியாக 4 வாரங்களோடு) வருவதால் திட்டமிடுதல் எளிதாக இருக்கும்.
3. வார நாட்கள் நாட்களோடு தொடர்புடையதாக இருப்பதால் எல்லா ஆண்டுக்கும், ஒரே நாட்காட்டியை பயன்படுத்தலாம்.
4. ஒரு குறளில் 7 சீர்கள் வருவது போல் ஒரு வாரத்தில் 7 நாட்கள் வருகின்றன. திருக்குறளில் 13 இயல்கள் வருவதுபோல் ஆண்டில் 13 மாதங்கள் வருகின்றன. தமிழ் எழுத்துக்கள் 247ஐயும் சரியாக 13 மாதங்களில் உள்ளடக்கிவிடலாம். (247=19x 13).
5. திருவள்ளுவர் ஆண்டு சனவரி 15இல் தொடங்குகிறது (முதல் மாதம்). அதே போல் பொது ஆண்டு (கிரிகோரியன்) கற்புமதி 15இல் தொடங்குகிறது.(இறுதி மாதம்).
6. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12ம் ஆயுத எழுத்து 1ம் வரும். அதேபோல் இந்த நாட்காட்டியில் 28 நாட்கள் கொண்ட மாதங்கள் 12ம் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட மாதங்கள் 1ம் வரும்
Comments
Post a Comment