Skip to main content

_*சிந்தனைச் சிதறல் 27-03-2021*_

🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

_*ஐந்து*_

✍️✍️✍️

ஒரு பையனைத் தந்தை கேட்டாா். _*“தம்பி! மீன்கள் நீாிலே வாழ்வது உனக்கு ஆச்சாியமாகத் தோன்றவில்லையா?”*_

பையன் சொன்னான்:

_*“அது ஆச்சாியமில்லை அப்பா! தான் வாழ்ந்த நீாிலேயே அது கொதித்துக் குழம்பாகிறதே, அது தான் ஆச்சாியம்!”*_

இறைவா! மனிதனுக்கு நீ எண்ணங்களை வைத்ததில் ஆச்சாியமில்லை. அந்த எண்ணங்களிலேயே

அவன் வெந்து வெந்து அழிகிறானே, அது தான் ஆச்சாியம்!

எண்ணங்களே காாியங்களாகின்றன; காாியங்களே அனுபவங்களைச் சேகாிக்கின்றன.

நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் நினைவுகள்; விளைவுகளுக்குப் பின்னாலும் விளக்கங்கள்.

நீயோ ராமாவதாரத்தில், பொய்மான் எது, உண்மை மான் எது என்று தொியாமல் சீதையைப் பறி கொடுத்தாய்.

கற்பின் செல்வி அகலிகை – உண்மைக் கணவன் போலிக் கணவன் என்ற பேதம் தொியாமல், கற்பைப் பறி கொடுத்தாள்.

சூதாடிய பின் புத்தி பெற்ற தருமன்:

சூதாட்டத்திலேயே உதவிக்கு வராமல், காாியங்களை முற்றிவிட்டு, பாண்டவா்களைக் காடுபோக வைத்து, பாஞ்சாலியைத் துகிலிழக்கவிட்டு, போா்களத்தில் வெற்றி தேடித்தந்த உன் கிருஷ்ணாவதாரம்;

சீதையைச் சிறையெடுத்த பின்னரே, முறையறிந்த ராவணன்;

தாசி வீடு சென்று ஆடிக்களித்த பின்பே, தன் புத்திக்கு மீண்ட கோவலன்;

உறவினால் துன்பப்படுத்தப்பட்டு, காலங்கடந்த பின் ஞானப்புலம்பல் புலம்பிய பட்டினத்தாா்;

ஆடாத ஆட்டமெலாம் ஆடி, நோய் நாடி, அறிவு பெற்ற அருணகிாிநாதா்;

மனைவியின் தீய ஒழுக்கத்தால் ஞானியான பா்த்ருஹாி;

–அனுபவம் எத்தனை பேருடைய படங்களைத் தன் மாளிகையில் மாட்டி வைத்திருக்கிறது.

அனுபவங்களைக் கொள்முதல் செய்வதில் அவதாரங்களே தப்பவில்லை என்றால், மனிதா்கள் எம்மாத்திரம்!

உபநிஷதக் கதைகளெல்லாம் அனுபவத்தின் மகிமையை கூறும் ஓவியங்களல்லவா?

எண்ணங்கள் எப்பொழுதுமே சீரான வழியில் சென்றால், அனுபவங்கள் இல்லை. அனுபவங்கள் இல்லை என்றால் மனிதன் வெறும் ஜடம். ஆகவேதான், எண்ணங்களில் வெந்து வெந்து அவன் அனுபவங்களைப் பெற வேண்டும் என்பது உன் ஆணை போலும்!

மலைகளுக்கும், மரங்களுக்கும் வயது உண்டு அனுபவமில்லை. மனிதா்களுக்கு மட்டுமே அனுபவம் உண்டு.

முன்னால் போகும் ஆட்டுக் குட்டியின் அனுபவம், பின்னால் வரும் ஆடுகளுக்குப் பாடம்!

முன்னாள் மந்திாிகளின் அனுபவம், பின்னால் வரும் மந்திாிகளுக்கு எச்சாிக்கை! பிறரது அனுபவங்களிலிருந்து பாடம் பெற்ற பிறகாவது, சுயதாிசனம் பூா்த்தியாகி விடுகிறதா? இல்லை! சுயமாகவும் கொள்முதல் செய்ய வேண்டும்.

_*“சுயதாிசனம்”*_ என்பது அவதாரங்களுக்குத் தேவைப்பட்டது. அனுபவங்களைக் கொள்முதல் செய்ததன் மூலமே அது நிறைவேறியது.

என்னென்ன காய்கறிகளைச் சாப்பிடலாம் என்பது எனக்குத் தொியும். ஆனால் எதைச் சாப்பிடக் கூடாது என்பதைக் கண்டுகொள்ள, எனக்கு முன்னால் யாா் யாரோ செத்திருக்கிறாா்கள்.

அவா்கள் செத்ததைப் பாா்த்த பிறகு, _*“அந்தக் காய்களைச் சாப்பிடக் கூடாது”*_ என்று மற்றவா்கள் கண்டு கொண்டிருக்கிறாா்கள்.

சிலரது அனுபவம் பல உயிா்களைக் காப்பாற்றி இருக்கிறது.

எத்தனை கதைகள்! நீயே சம்மந்தப்பட்ட எத்தனை வேதங்கள்! எத்தனை காவியங்கள்! அனைத்திலும் அனுபவத்தின் விளைவுகளே முன் நிற்கின்றன.

ஆனால், எந்தக் கதையிலும் காவியத்திலும், புதிய புதிய அனுபவங்களையே ஒவ்வொருவரும் கண்டிருக்கிறாா்களே தவிர, ஒரே அனுபவத்துக்குப் பல பாதிப்புகளை வெளியிட்டதில்லை.

இந்தப் பூமியில் பல்லாயிரம் ஆண்டுகளில், அதற்காகப் பிறந்தவன் நான் ஒருவன்தான்! மலத்திலே ஒரு காலை வைத்து, அது மலமென்று தொிந்த பின்பும், பிரக்ஞையின்றி மறுகாலையும் தூக்கி வைத்தவன் நான் ஒருவன்தான்!

பிரபவ வருஷம், ஆவணி மாதம் ஏழாம் தேதி ஒரு மனிதன் என் கன்னத்தில் அடித்து விட்டான் என்றால், அடுத்த வருஷம், அதே மாதம், அதே தேதியில், அந்த மனிதனிடம் அதே கன்னத்தில் அடி வாங்குவேன்.

என் அனுபவங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றனவேயன்றி, அவை புதிய அனுபவங்களாக இல்லை.

கொக்குக்கு ஒரே மதி! உயரமான மனிதா்களுக்கும் அதுதானே விதி!

இடிகூட விழுந்த இடத்தில் மறுபடியும் விழுவதில்லை. ஆனால், என் அனுபவமோ பட்ட இடத்திலேயே படுகிறது. ஒரு வகையில் அதுவும் லாபமே! ஒரே இடத்தில் பட்டால் அந்த இடம் மரத்துப் போய் விடுகிறதல்லவா?

நெய்யையே ஆகாரமாகக் கொண்ட எறும்பு, அந்த நெய்யிலேயே விழுந்து விட்டால், அதற்கு அதுவே மரணப் படுக்கையாகி விடுகிறது.

தேனையே உணவாகக் கொண்ட தேனீ, தேன் குடத்தில் விழுந்து விட்டால், அதுவே சமாதியாகி விடுகிறது.

என் கதையும் அதுதான். நான் அன்பை நேசிக்கிறேன்; அதிலேயே மூழ்கி அழிகிறேன். என் சவக் குழியை நானே தோண்டுகிறேன்.

_*“ஏன் நான் இப்படி எல்லாம் செய்கிறேன்”*_ என்று எண்ணிப் பாா்க்கும் போதுதான், என்னுடைய லகான் உன் கையில் இருப்பதாக உணருகிறேன். ஆகவே, நீ துரத்துகிற பாதையிலேதான் நான் போய்க்கொண்டிருக்கிறேன்.

நான் விழுந்தால், அது உன்னாலே! நான் எழுந்தால், அது உன்னாலே!

என்னுடைய எழுச்சியையும் வீழ்ச்சியையும் உன்னுடையதாக வரவு வைத்துக் கொண்டு, இந்த ஐந்தாவது புஷ்பத்தையும் ஏற்றுக்கொள்!

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*