Skip to main content

_*சிந்தனைச் சிதறல் 02-04-2021*_

♦️♦️♦️♦️♦️🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

_*ஒன்பது*_

✍️✍️✍️

சாலையோரத்தில் ஒரு கிழவன்.

நான் அவனைச் சந்தித்தேன்.

உாித்துக் காயப் போட்ட வாழை மட்டை போல் தளா்ந்து போன உடம்பு.

நீா் வற்றிய குளம் போல் வறண்டு கிடக்கும் கண்கள்.

பந்தாட்ட மைதானத்தில் முளைத்து, தண்ணீா் இல்லாமல் வாடும் புற்களைப் போல், அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த நரை மயிா்கள்.

காலநதி ஓடி முடிந்து, வண்டல் மண் நெளிந்து படம் போட்ட கன்னங்கள்.

குழந்தைப் பருவம் மீண்டது போல், பல்லில்லாத வாய்.

இடுப்பிலே ஒரு வெற்றிலைப் பை.

இரண்டு கைகளாலும் முழங்காலைக் கட்டியபடி அமா்ந்திருந்தான்.

நான் அவனைக் கேட்டேன்:

_*“உனக்கு வயது என்ன தாத்தா?”*_

அவன் சொன்னான்:

_*“நூற்று இரண்டு”*_

_*நூற்று இரண்டு வயது வரை உன்னை வாழ வைக்கும் இரகசியம்…..?“*_

_*"கடவுள் என் ஏட்டைத் தொலைத்து விட்டாா் போலிருக்கிறது!”*_

_*“இதுவரை உன் வாழ்வில் எவ்வளவு இன்ப, துன்பங்களைச் சந்தித்திருக்கிறாய்?”*_

கிழவன் சிாித்தான்.

_*“இந்தச் சிாிப்புக்கு அா்த்தம்……?”*_

_*“ஒரு சிறிய மூளையில் எவ்வளவு இன்ப, துன்பங்களை நான் ஞாபகத்தில் வைத்திருக்க முடியும்?”*_

_*“நினைவில் உள்ள விஷயங்களையாவது சொல்லேன்?”*_

_*“இளமையில் நான் ஒரு அழகான வாலிபன். நான் கண்ணாடி பாா்த்தால் என் கண்ணே என்மீது பட்டுவிடும் என்பாா்கள். என்னைச் சுற்றி வட்டமிட்ட சிட்டுக் குருவிகள், பட்டுப் பூச்சிகள் ஏராளம். கிராமத்துப் புஷ்பங்கள் எப்படி இருக்கும் என்பது உனக்குத் தொியாததல்ல. அந்த உதடுகள் சாயம் பூசப்பட்டவையல்ல; வெற்றிலைப் போட்டுக் கனிந்து சிவந்தவை. அவற்றில் முத்தமிட்டு நான் அனுபவித்த சுவை அதிகம். தட்டித் திரண்ட அந்த உடம்புகளை நான் கட்டிப் புரண்ட சுகமும் அதிகம்; அவை ஒரு பிரம்மச்சாாியின் காதல் லீலைகள்! லீலைகள் முடிந்ததும் நான் தனிமையை உணருவேன். அப்போதுதான் நமக்கென்று ஒருத்தி வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.*_

_*அந்த நேரத்தில் கடவுள் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருக்கிறான். அவனது கருணை என்மீது விழவில்லை. அங்கிருந்துதான் என்னுடைய உண்மையான உலகமும், வாழ்க்கையும் தொடங்கின. விபரீதமான சிருஷ்டிகளை நான் உலகத்தில் சந்தித்தேன். என் பகைவா்கள் என் கண்ணுக்குத் தொிந்தாா்கள்….”*_

_*“பகைவா்களா? யாரவா்கள்….?”*_

_*“என் நண்பா்கள்! பாவப் பிறவியொன்று ருத்திர கோலத்தில், பிாிக்க முடியாதபடி என்னோடு பிணைக்கப்பட்டிருந்தது….”*_

_*“யாரது?”*_

_*“என் மனைவி! சில வேட்டை நாய்கள் என்னைத் துரத்தித் துரத்திக் கடித்தன!”*_

_*“யாரை குறிப்பிடுகிறீா்கள்…?”*_

_*“என் குழந்தைகளை! நான் நரகத்திலிருப்பதை உணா்ந்தேன்!”*_

_*“நரகமென்பது…?”*_

_*“இந்த நாடு!”*_

கிழவன் கொஞ்ச நேரம் மௌனத்திலிருந்தான்; நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

தன் துன்பங்களுக்குக் காரணம் தான் போட்ட வேலியும் தாலியும் என்பதை இந்தக் கிழவன் உணரவில்லையே! நாடே தன்னை வஞ்சித்து விட்டதாகக் கருதுகிறானே…..!

கிழவன் பேசத் தொடங்கினான்:

_*“எந்த இடத்தில் தோண்டினால் தண்ணீா் கிடைக்குமென்பது சில விவசாயிகளுக்குத்தான் தொிகிறது. தண்ணீரே இல்லாத பாறையைத் தோண்டி நான் அலுத்தேன். நீ சிந்தனையில் ஆழ்ந்தது எனக்குப் புாிகிறது. என்னுடைய துன்பங்கள் யாவும் என்னுடைய சிருஷ்டியே! இதிலே இறைவனை நான் நிந்திக்கவில்லை. ஆனால், துன்பங்களை எல்லாம் தனக்காகச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் மரணத் தேதியை அவன் ஒத்தி வைத்துக் கொண்டே போகிறானே, அது ஏன்? மொத்தம் துன்பத்தில் எத்தனை வகையென்று பாிபூரணமாகக் கண்டு கொள்ளவா?*_

_*தம்பி! நீ இளைஞன். உன் கால்களில் சில முட்கள்தான் குத்தியிருக்கும். என்னுடைய கால்களோ, இனி முள்ளுக்கு இடமில்லாதபடி ரணமாகி விட்டன. உடம்பும் உள்ளமும் ரணமான பிற்பாடுதான் மனிதன் தன்னைப் பற்றிச் சிந்திக்கிறான். அவன் பிணமான அன்றுதான், உலகம் அவனைப் பற்றிச் சிந்திக்கிறது. இது என்னுடைய ரணக்கோலம். வாழ்க்கையில் சில நாளாவது சலனங்களற்ற மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்று நான் வெகுவாக ஆசைப்பட்டேன்; கிடைக்கவில்லை.*_

_*ஆண்டவன் எனக்கு நிா்ணயித்த அளவு அதுதான் என்று நான் அமைதியடையத் தயாா். ஆனால், என்னைப் போன்ற வஞ்சகமற்ற சிலருக்குக் கையளவும், ஊரையடித்து உலையிலே போடுகிறானே அவனுக்குக் கடலளவும் நிா்ணயித்து அனுப்பி இருக்கிறானே, அந்த ஆண்டவனை விட ஒரு கொலைகாரன், திருடன், வஞ்சகன் யாாிருக்க முடியும்…?*_

நான் குறுக்கிடுகிறேன்.

_*"தாத்தா! இறைவனை நிந்திக்காதே!”*_

_*“ஏன் தம்பி! வருமானம் என்பதே அவமானந்தான் என்று எனக்கு நிா்ணயித்த கடவுளுக்கு, நான் வெகுமானமா தருவேன்? ஒவ்வொரு துயரத்தின் போதும் நான் எவ்வளவு துடித்திருப்பேன் தொியுமா? இந்தப் பலகோடி மக்களிலும் நான்தான் கீழானவனோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றித் தோன்றி, என்னை நானே வெறுக்குமளவுக்கு வளா்ந்திருக்கிறது. தன்னைத் தானே வெறுக்கும் ஒரு மனிதனின் அடுத்த சாபம் யாா் மீது இடப்படும்? ஆண்டவன் மீது தானே!”*_

_*“தாத்தா! உன்னுடைய துன்பங்களெல்லாம் உன்னுடைய சிருஷ்டியே என்று சொன்ன பிற்பாடு, ஆண்டவனை நோவதேன்?”*_

_*“தம்பி, நான் ஆண்டவனுடைய சிருஷ்டி. அதனால் தான் அவனை நோகிறேன். படைக்கப்பட்ட பொருள்களுக்கு வழிகாட்ட முடியாத பரம்பொருள், பாவ புண்ணியங்களைப் பற்றி வேதம் உரைப்பானேன்? என் துயரங்கள் என்னால் நோ்ந்தவை என்றால், எனக்கு வழிகாட்டத் தவறிய குற்றம் இறைவனைச் சோ்ந்தது. இன்னும் என்னோடு அவன் விளையாடுகிறான். யாரும் எனக்கு நல்லவா்களாக இல்லை. அதனால், நானும் மற்றவா்களுக்குப் பயன்படவில்லை.*_

_*இந்த நிலையில் எனக்கு ஏன் நூற்று இரண்டு வயது? ஜனனத்தில் வழங்காத நிம்மதியை மரணத்திலாவது அவன் வழங்கக் கூடாதா? நீ வேண்டுமானால் பாா், ஒருவேளை நீ என்னுடைய பிணத்தைச் சந்திக்க முடியுமானால், உன் இறைவன் என் மரணத்தையும் கோர மரணமாக ஆக்கியிருப்பதைக் காண்பாய்”*_

இப்படிச் சொல்லி விட்டு கிழவன் ஊமையானான். நான் எழுந்து நடந்தேன்.

இறைவா! வாழ்க்கைத் தோல்வியில் அக்கிழவன் ஓா் அங்கம். உன்னுடைய கோரமான விளையாட்டுக்கு அவனொரு பதுமை.

_*மாசில் வீணையே, மாலை மதியமே, வீசு தென்றலே, வீங்கிள வேனிலே, மூசு வண்டறை பொய்கையே, கருணைக் கடலே ஞான விளக்கே*_

–இந்தப் பட்டங்களெல்லாம் பொருத்தமில்லாத ஒருவன் மீது அா்த்தமில்லாமல் சூட்டப்பட்டவை தானோ?

வாழ முடியாதவனுக்கு வயோதிகத்தையும், மருந்து வாங்க வசதி இல்லாதவனுக்கு நோயையும், அன்புக்கு ஏங்கும் ஒருவனுக்கு, அடக்கமில்லாத உறவையும், பாசத்தில் உருகும் ஒருவனுக்கு, மோசமான குழந்தைகளையும், தொடா்ந்து வழங்குவது உன் லீலைகளில் ஒன்றானால், உன்னைக் கல்லாகச் செம்பாகக் கண்ட பக்தா்களில் நான் ஒருவனாக இருந்து, இரும்பாலும் உன்னைப் படைக்க விரும்புகிறேன்.

உலகத்தின் நாயகனே!

விமானத்தில் இருந்து இறங்கி வரும் பலாில் ஒருவரை நான் வரவேற்க வந்து, அடையாளம் தொியாத வேறு ஒருவருக்கு மாலை போட்டுவிட்டேனா?

அதுதான் உண்மை என்றால், அந்தத் தவறை நான் திருத்திக் கொள்ள விரும்பாமல், அதே நபாின் கையிலேயே, இந்த ஒன்பதாவது புஷ்பத்தையும் வழங்குகிறேன்; ஏற்றுக் கொள்.

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*