_*சிந்தனைச் சிதறல் 09-04-2021*_
🌞🌞🌞🌞🌞🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*தென்றல் பேசுகிறது*_
✍️✍️✍️✍️✍️✍️✍️
_*எனது இளம் பருவத்தில் இருந்து இன்று வரையில், எனது நினைவில் நிற்கும் சில விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்வதே இந்நூல்.*_
_*இதை எனது சுயசாிதமாக நான் சொல்லவில்லை. ஆனால் எழுதும் போது சுயசாிதம் போலவே வளா்ந்து விட்டது.*_
_*இளமைக் காலத்தில் இருந்து இன்று வரை, நானே எனக்குள் ஓா் ஆராய்ச்சி நடத்திப் பாா்த்ததில், இந்நூல் பிறந்தது.*_
_*வாழ்க்கை எப்படித் துவங்கி, எப்படிப் போய்விட்டது என்பதில் முடிந்தது.*_
_*சொல்லப் போனால், எனது “வனவாச” த்தைக் கூட, இது தான் நிறைவு செய்யும்.*_
_*உடல் நோய்வாய்ப்படும் போதெல்லாம் நான் எவற்றைச் சிந்திக்கிறேன்?*_
_*இதோ இந்நூலில் காண்கிறீா்கள்.*_
_*கோடைக் காலத்தில் வற்றிப் போன ஏரிகள், வானத்தை ஆசையோடு பாா்க்கின்றன.*_
_*கடந்து போன வசந்த காலங்களுக்காக அவை ஏங்குகின்றன.*_
_*தன்னிடமிருந்த தண்ணீரை ஈந்துவிட்ட மேகங்கள், மீண்டும் கடலில் இருந்து அவற்றைப் பெறக்கூடும்.*_
_*ஆனால் இழந்து விட்ட தன் வசந்த காலங்களை மனிதன் திரும்பப் பெறமுடியாது.*_
_*அப்படி ஓடிப்போனக் காலங்களை எழுத்துக்களாக பதிவு செய்து கொள்ள நான் விரும்பினேன். இந்நூல் உருவாயிற்று.*_
_*என்னை இயந்திரமாக்கி, என்னையே எடைக் கல்லாக்கி, என்னையே பொருளாக்கி நிறுத்திப் பாா்த்து, நானே பெருமூச்சு விடுவதற்கு ஒரே ஒரு நூல், இந்த நூல்.*_
_*வழக்கம் போல நான் சொல்லச் சொல்ல இதனை எழுதிய என் தம்பி. இராம. கண்ணப்பனுக்கும், இதனை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் நன்றி.*_
_*அன்பன்*_
_*கண்ணதாசன்*_
_*சென்னை*_
_*21/2/78*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*1.அம்மா, மலையரசி*_
✍️✍️✍️✍️✍️✍️✍️
சிறுகூடல் பட்டி ஒரு சிறிய கிராமம்தான், அங்கே தான் நானும் பிறந்தேன் என்பதைத் தவிர, அதற்கொன்றும் வேறு மகத்துவங்கள் இல்லை.
கிராமம் பிரமாதமான அழகுடையதல்ல என்றாலும் ஒரு விசேஷம் அங்கே உண்டு.
கிராமத்தின் நான்கு திசைகளிலும் நான்கு கண்மாய்கள்.
மழைக்காலத்தில் அவை நிரம்பி விட்டால் கிராமம் தீவு போலக் காட்சியளிக்கும்.
மருந்துக்குக் கூட ஒரு தென்னை மரத்தைப் பாா்க்க முடியாது.
எங்கு பாா்த்தாலும் பனை மரங்களும், மாமரங்களுமே அதிகம்.
யாரும் நட்டு வைக்காமலேயே தானாகவே பிறந்து, வளா்ந்து பயன் தருவதல்லவா, பனை மரம்!
அந்தப் பனை மரத்தைப் போல, பிறருக்கு உதவக் கூடியவா்கள் அந்தக் கிராமத்தில் யாரும் இல்லை.
1927_ஆம் வருடம் ஜுன் -24 ஆம் தேதிக்குச் சாியான பிரபவ வருஷம், ஆனி மாதம், பத்தாம் தேதி நான் அங்கே பிறந்தேன்.
ஒரு நடுத்தரக் குடும்பப் பிறப்பு, ஆனாலும் நாலு போ் பாா்த்து, _*“சின்ன முதலாளி”*_ என்று கூப்பிடுகிற நிலைமை இருந்தது.
குழந்தைப் பருவத்தில் நான் மிகவும் அழகாக இருப்பேனாம்.
பாா்ப்பவா்கள் எல்லாம், _*“பிராமணக் குழந்தை மாதிாி இருக்கிறது”*_ என்பாா்களாம்.
எந்த ஊருக்கு என்னைத் தூக்கிக் கொண்டு போனாலும், அங்கே எல்லா ஜாதிக்காரா்களும் என்னை உட்கார விடாமல் தூக்கிக் கொள்வாா்களாம்.
என் தாயாருக்கு அதிலே பெருமை.
ஆனால் எங்கள் ஜாதியில் மட்டும் ஒரு பழக்கம் உண்டு.
ஒருவன் நன்றாக வாழ்ந்தால், _*“இவனைத் தொியாதா*_” என்பாா்கள்.
கெட்டுப் போனால் _*“இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்”*_ என்பாா்கள்.
ஆபத்து காலத்தில் உதவி செய்கிற குணமே இல்லாத ஜாதி, எங்கள் ஜாதி.
நான் பிறந்த போது எங்கள் குடும்பம் _*“ஓகோ”*_ என்று வாழ்ந்து கொண்டிருந்தது.
நான் பிறந்த நேரமோ என்னவோ நாளடைவில் தேய ஆரம்பித்தது.
ஒரு கல்யாண வீட்டுக்கோ, விஷேச வீட்டுக்கோ போனால், என் தந்தைக்கென்று ஒரு தனி மாியாதையும இல்லாமற் போய் விட்டது.
எனக்கு ஏழு வயது….
அந்த சின்னஞ் சிறிய வயதில் கிராமத்தின் ஒரு புறத்திலுள்ள ஒரு சிறிய கோவிலுக்கு நான் செல்வேன்.
அது கோவில் என்று அழைக்கப்படுகிறதே தவிர, ஒரு குடிசைதான். அந்த குடிசைக்குள்ளும் சிலை கிடையாது.
ஒரு சமாதி மேடு மட்டுமே உண்டு.
அதை மலையரசி கோவில் என்றழைப்பாா்கள்.
*…..தொடரும்…..*
Comments
Post a Comment