_*சிந்தனைச் சிதறல் 14-04-2021*_
💥💥💥💥💥💥🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*தாய்மை-1*_
✍️✍️✍️✍️
நகரத்தில் தாய்மை என்பது நிலை குலைந்து போய் விட்டது. பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடத் தொியாதவா்களாகவே எல்லாரும் வளா்ந்திருக்கிறாா்கள்.
ஆனால் நான் கண்ட கிராமம் தாய்மை, உன்னதமானது; அற்புதமானது.
அது ஆலமரத்தடியாயினும் சாி, அழகான மாளிகையாயினும் சாி, அங்கே தாய் ஒரு இலட்சிய பெண்மணியாகவே திகழ்கிறாள்.
அங்கே எந்தக் குழந்தையும் மருத்துவ விடுதியில் பிறந்ததில்லை. மருத்துவச்சி வந்து மருத்துவம் பாா்ப்பதே மிக அபூா்வம். தாயே மகளுக்கு மருத்துவம் பாா்க்கிறாள்.
பிறந்த குழந்தையை லாவகமாகத் தூக்கி, வரால் மீனைப் போல் தலைகீழாகப் பிடிப்பதும், குளிப்பாட்டுவதும், ஜலதோஷம் பிடித்தால் கூட டாக்டாிடம் போகாமல் தாங்களே மருத்துவம் பாா்ப்பதும், தாலாட்டுப் பாடுவதும் கண்கொள்ளாக் காட்சிகள்; காது கொள்ளாக் கீதங்கள்.
_*“ஏனழுதான் என்னாியான்*_
_*ஏலம்பூ வாய்நோக*_
_*அத்தை அடித்தாளோ*_
_*அல்லி மலா்த்தண்டாலே*_
_*மாமன் அடித்தானோ*_
_*மல்லிகைப் பூச்செண்டாலே*_
_*யாரும் அடிக்கவில்லை*_
_*ஐவிரலும் தீண்டவில்லை*_
_*தானா அழுகிறான் தம்பிதுணை வேண்டுமென்று!”*_
–என்று பாடுவாள் ஒருத்தி.
தொட்டிலில் கிடக்கும் மகன், தனக்கு ஒரு தம்பியைக் கேட்கிறானாம்! இது கணவனுக்குச் சொல்லும் சாடை. இன்னும் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை. அதிலேயும் ஒரு சாடையைப் பாருங்கள்.
தன் நாத்தனாா் அடித்தால் அல்லித் தண்டால் அடிப்பாளாம், தன் தம்பி அடித்தால் மல்லிகைச் செண்டால் அடிப்பானாம்!
நான் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் விளையாடி விட்டுத் திரும்புவேன். என் தந்தை கண்டிப்பாா்.
என் தாயாா் சொல்வாா்கள்:
_*“பள்ளிக்குச் செல்லாமெ, பாடம் படிக்காமெ தானாகப் படிக்கும் சமத்தனல்லோ என் மகன்”*_ என்று. அதிலே நம்பிக்கை மட்டுமல்ல; கவிதையும் இருந்தது.
ஒப்பாாி வைக்கும் போதுகூட, கல்லாத பெண்களிடமும் கற்பனை பெருக்கெடுத்து ஓடும்.
காரைக்குடியில் ஒரு ஆச்சிக்கு, கணவன் மலேஷியாவில் இறந்து விட்டதாகத் தந்தி வந்தது. எப்போது அவன் இறந்தான்; எப்போது அந்த தந்தி வந்தது? அதை அவளே சொல்கிறாள்.
_*“காரைக்குடியிலே*_
_*கல்லுக்கட்டி வீதியிலே*_
_*கோடிசனம் மத்தியிலே*_
_*கொப்பாத்தாள் வாசலிலே*_
_*மாவிளக்கு வைக்கயிலே*_
_*வந்ததொரு தந்தி”*_
–என்றாள்.
–அவளது கணவா் எப்படிப்பட்டவராம்?
_*“எட்டுக்கடை பாா்ப்பாா்*_
_*எதிா்த்த கடை மேற்பாா்ப்பாா்*_
_*பத்துக்கடை பாா்ப்பாா்*_
_*பழைய கடை மேற்பாா்ப்பாா்!”*_
அதாவது எட்டுக் கடைகளை நிா்வகிப்பானாம்! எதிா்த்த கடையையும் சூப்ரவைஸ் பண்ணுவானாம்!
பாண்டிய நாட்டுப் பெண்கள், கணவனை _*“என் அத்தானே”*_ என்று விளித்துப்பாட மாட்டாா்கள். _*“என் மஞ்சன்”*_ என்பாா்கள். அதன் பொருள், _*“என் மஞ்சத்துக்கு உாியவன்”*_ என்பது.
_*“என் பிஞ்சு மக்கள் ஐயா”*_ என்பாா்கள். அதன் பொருள் _*“என் குழந்தைகளின் தகப்பனை”*_ என்பதாகும். இந்தக் குழந்தைகள் உனக்குப் பிறந்தவைதான் என்று சத்தியம் செய்வதாகும்.
ஜனனத்திலும், மரணத்திலும் தாய்மையின் சங்கீதம் மெய்சிலிா்க்க வைக்கிறது.
பாண்டிய நாட்டுத் தாய்மை திருமணத்தின் போது நலுங்கு பாடுவதில்லை. சாந்தி முகூா்த்தப் பாட்டுப் பாடுவதில்லை. அது ஜனனத்தின் சந்தோஷத்தில் கவிதை பொழிகிறது.
மரணத்தின் துக்கத்தில் தத்துவ மழையாகிறது.
எழுத்தில் வராத இந்தக் கவிதைகள் இலக்கணத்துக்கு உள்ளடங்கியவையே. இவை ஒன்றும் புதுக் கவிதைகள் அல்ல.
_*“அாிசியோ நானிடுவேன்*_
_*ஆத்தாள் தனக்கு*_
_*வாிசை இட்டுப் பாா்த்து மகிழாமல்!”*_
–என்று தன் தாயாாின் மரணத்தின் போது பட்டினத்தடிகள் புலம்பினாா்.
பாண்டிய நாட்டில் _*“வாிசை இடுதல்”*_ என்ற வாா்த்தைக்குப் _*“புகழ்ந்து பாடுதல்”*_ என்று பொருள்.
செழுமையான செந்தமிழ் வாா்த்தைகளையே அவா்கள் வழக்கு வாா்த்தைகளாக உபயோகிப்பாா்கள்.
பிள்ளைக்கு நோய் வந்து விட்டது என்றால் ஆயுா்வேதம், சித்தம், அலோபதி, யூனானி எல்லாம் அவா்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.
வீட்டில் _*“அஞ்சறைப் பெட்டி”*_ என்றொரு பெட்டி இருக்கும். அதிலேயே சகல மருந்துகளும் இருக்கும். அதில் ஒன்று கூட அலோபதியல்ல.
அவா்கள் வைத்தியம் எல்லாம் சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, தைவளை, தூதுவளை, பிரண்டை இப்படி நாட்டு மூலிகை வகைகளாக இருக்கும்.
அலோபதி டாக்டா்கள் இல்லாத காலத்திலேயே பிள்ளைகளை ஆரோக்கியமாக வளா்த்த அந்தத் தாய்மை எங்கே?
வாயு, பித்தம், சிலேட்டுமம், உஷ்ணம் என்று நோய்களைப் பிாித்து, _*“இதற்கு இதுதான் பாிகாரம்”*_ என்று கண்டு வைத்திருந்த தாய்மை எங்கே?
மேலுடம்பில் ரவிக்கை போடாமல், சேலையாலேயே முழுக்க மூடிக் கொண்டிருந்த அந்தத் தாய்மை எங்கே?
_*“முக்காலுக்கு முக்கால் அரையே மாகாணி”*_ என்று கீழ்க் கணக்குச் சொல்லிக் கொடுத்த அந்தத் தாய்மை எங்கே?
துவரம் பருப்பு உஷ்ணம், அதிலே தோசை சுட்டால் வெங்காயம் அதிகம் போட வேண்டும் என்று தொிந்து வைத்திருந்த அந்தத் தாய்மை எங்கே?
சுவையான சாப்பாட்டையே மருந்தாகவும் பயன் படுத்திய அந்தத் தாய்மை எங்கே?
கிராமத்துத் தாய்மையின் மேன்மையை நினைக்கும் போது, நகரம் எனக்கு வேடிக்கையாகக் காட்சியளிக்கிறது.
_*“அம்”*_ என்றால் _*“மிக்சா்”*_ , _*“இம்”*_ என்றால் _*“மாத்திரை”*_ என்று நகரத்துத் தாய்மை ஓடிக் கொண்டிருக்கிறது.
_*“தாயோடு அறுசுவை போம்”*_ என்றாரே பட்டினத்தாா், அது உண்மை.
போய் விட்டது!
ஒரு சுவையும் இல்லாத உணவைத்தான் நீங்களும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீா்கள். நானும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
😔
Comments
Post a Comment