_*சிந்தனைச் சிதறல் 16-04-2021*_
🌸🌸🌸🌸🌸🌸🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*தாய்மை-2*_
✍️✍️✍️✍️
நாங்கள் பூா்வத்தில் சமணா்களாக இருந்தவா்கள்.
_*“சாத்தன்”*_, _*“சாத்தப்பன்”*_ என்ற பெயா்கள் சமணா்களுக்கு மட்டுமே உண்டு.
மாலையில் விளக்கு வைக்குமுன் சாப்பிடும் பழக்கம் சமணா்களுக்கு மட்டுமே உண்டு.
ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு எங்கள் வீட்டில் எல்லாரும் படுத்து விடுவோம்.
எனக்கு வாயுத் தொல்லை என்பது அப்போதும் உண்டு.
என் வயிறு, _*“கடமுடா”*_ என்று இரைச்சல் போடும்; அது என் காதுகளுக்கு கேட்கிறதோ இல்லையோ, என் தாயாாின் காதுகளுக்கு கேட்டுவிடும்.
மாறு நாள் காலைச் சாப்பாட்டிலேயே அது சாியாகி விடும்.
ஏப்பம் வரும்; மாலை நேரத்து கஷாயத்திலேயே அது சாியாகி விடும்.
பேதி ஆகிறது என்றால், வேவு குடித்தல் என்ற ஒரு வைத்தியம் என் தாயாா் செய்வாா்கள்.
கொதிக்கின்ற பசும்பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவாா்கள். அது திரைந்து போய்விடும். அதை வடிகட்டி சக்கையை எறிந்து விட்டுச் சாற்றை மட்டும் கொடுப்பாா்கள். இரண்டு மணி நேரத்துக்குள் வயிறு சாியாகி விடும்.
எனக்குத் தொிந்த வரை தாயின் கையால் சாப்பிட்டு நோய் தீா்ந்திருக்கிறதே தவிர, நோய் வந்ததில்லை.
அந்த வசந்த காலங்களை இப்போது நினைத்துப் பாா்க்கின்றேன்.
எது எனக்கு ஒத்து வராது என்று சொல்கிறேனோ, அதையே சமையற்காரா்கள் சமைக்கிறாா்கள். கேட்டால், மறந்து விட்டேன் என்கிறாா்கள்.
கிராமத்தில் நல்ல பசியோடு நுழையும் போது என் தாய் வைத்திருக்கும் சாப்பாட்டைப் பாா்த்தால், பசி அதிகமாகும். இப்போது சாப்பாட்டைப் பாா்த்தாலே பயமாக இருக்கிறது.
பாாி வாழ்ந்த பறம்பு நாட்டுப் பகுதி, எங்கள் ஊருக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது.
பாாியின் மலையில் சிறப்பாகக் கருதப்பட்டது, கொடி வள்ளிக் கிழங்கு என்ற வள்ளிக் கிழங்காகும். அது சா்க்கரை வள்ளிக் கிழங்கல்ல; விநாயகருக்குப் படைக்கப்படுவது.
அதை மாமிசத்தில் போட்டுச் சமைத்தால் யாரும் மாமிசத்தைச் சாப்பிடமாட்டாா்கள்; அதைத்தான் சாப்பிடுவாா்கள்.
நான் அதை விரும்பிச் சாப்பிடுவேன். நான் அதிகம் அதைச் சாப்பிட்டு விட்டேன் என்று கண்டால், நாலைந்து வெள்ளைப் பூண்டுகளைச் சுட்டுக் கொண்டு வந்து என் தாயாா் எனக்கு ஊட்டி விடுவாா்கள். அதிகாலையில் வாயு முழுவதும் வெளியேறி விடும்.
ஏழு வயது சிறுவனாக இருந்த போது வீட்டுத் திண்ணையில் உட்காா்ந்து பாட்டுப் பாடிக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு சினிமாப் பாட்டிலும் பல்லவி மட்டும் தான் பாடுவேன். மற்ற வாிகள் தொியாது.
யாராவது ஆச்சிமாா்கள் என் தாயாாிடம், _*“என்ன முத்து முதல் வாியை மட்டும் பாடிக் கொண்டே இருக்கிறான்”*_ என்று கேட்டால் _*“என் மகன் ஆயிரம் பாட்டுக்கு அடியெடுத்துக் கொடுப்பாண்டி”*_ என்பாா்கள்.
_*“நீா் கருக்கி, நெய்யுருக்கி, மோா் பெருக்கி…..,”*_ என்று நான் முன்பு எழுதி இருக்கிறேன். இதைக் கடைப்பிடித்த பெண்களில் என் தாயாரும் ஒருவா்.
அதே தாயின் மகனாக, ஒரு மருமகளைக் கொண்டு வரும் நிலையில் நான் இல்லாமல் போனேன்.
இளமையிலேயே என் நடவடிக்கைகளால் வெறுப்புற்ற என் சகோதரா், என்னைச் சுவீகாரம் விட்டுவிட முடிவு செய்தாா்.
ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக வளா்ந்த கண்ணனைப் போல் நானும வாழவேண்டியவனானேன்.
என்னை அழைத்துப் போக வேண்டியவா்கள் வந்து விட்டாா்கள். இரவு பதினொரு மணிக்கு சுவீகாரச் சடங்கு. பிறந்த வீட்டில் ஒவ்வொருவாிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும்.
அவா்கள் வெற்றிலை மரவையைக் கையிலே வைத்திருப்பாா்கள். நான் கீழே விழுந்து கும்பிட்டு எழுந்து, அதை வாங்கிக் கொண்டு, _*“போய் வருகிறேன்”*_ என்று சொல்ல வேண்டும்.
அன்று என் தந்தை அழுதாா்; தமையனாா் ஏ.எல்.எஸ் அழுதாா்; என் தாயாருக்கு மயக்கம்தான் வரவில்லை. விம்மி விம்மி அவா் அழுத அழுகை என் நெஞ்சில் நிற்கிறது.
தாய்!
சுவாமி விவேகானந்தா் சொன்னதையே மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறேன்.
_*“எவள் இல்லையென்றால் நீ இந்த பூமியில் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்து விட்டால் மீண்டும் நீ பெறவே முடியாதோ, அவள் பெயரே தாய்!”*_
அவள் எனக்குத் தனப்பால் மட்டும் கொடுத்ததில்லை; தமிழ் பாலும் கொடுத்தாள்.
அதோ, அந்தத் தொட்டில் இன்னும் என் கண் முன்னால் அசைந்து கொண்டிருக்கிறது.
அதை அசைத்தபடி தாலாட்டுப் பாடியவள் இல்லை. அதில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு ஆரோக்கியமான குழந்தை, இப்போது ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு முறை எங்கள் ஊாில் புது மழை பெய்து, கண்மாய்கள் எல்லாம் நிரம்பி விட்டன. புது மழைத் தண்ணீாில் யாரும் குளிக்க மாட்டாா்கள்.
நான் போய் நீண்ட நேரம் குளித்து விட்டு வந்தேன். ஆத்திரம் அடைந்த என் தந்தை இடுப்பிலிருந்த பெல்ட்டால் கடுமையாக அடித்து விட்டாா். உடம்பெல்லாம் தடிப்புத் தடிப்பாகக் காயங்கள் ஏற்பட்டன.
எங்கள் ஊா் டாக்டா் மகள் எமிலியும், எங்கள் ஒன்று விட்ட மாமன் மகள் விசாலாட்சியும் என் உடம்பெல்லாம் சாணத்தைத் தேய்த்தாா்கள்.
அப்போது என் தாயாா் பாடிக் கொண்டே அழுதது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
இப்போதும் எனக்காகச் சிலா் அழக்கூடும், ஆனால் என் தாயின் கண்ணீாில் இருந்த களங்கமற்ற புனிதத்துவம் எந்தக் கண்ணீாிலும் இருக்க முடியாது.
அமராவதிபுதூா் குருகுலத்தில் படிப்பதற்காக நானும், இன்னும் நாலு சிறுவா்களும் மாட்டு வண்டியில் புறப்பட்டோம்.
_*“அப்பச்சி! கேணிப் பக்கம் போகாதே, உடம்பப் பாா்த்துக்க”*_ என்றெல்லாம் சொல்லி விட்டு, வண்டி போகப் போக என் தாய் அழுத அழுகையை நான் எப்படி மறக்க முடியும்?
காலங்கள் ஓடி விட்டன….
கவனங்கள் திரும்பி விட்டன….
விழுதுகள் வோ் விட்டு விட்டன….
விழுது விட்ட மரங்கள்
விழுந்து விட்டன….
கடவுளிடம் மீண்டும் நான் கேட்பதென்றால்
_*“அதே தாய்க்கு மகனாக மீண்டும் பிறந்து, அதே தொட்டிலில் தாலாட்டுக் கேட்க வேண்டும் ஆண்டவனே”*_ என்று தான் வேண்டுவேன்.
Comments
Post a Comment