_*சிந்தனைச் சிதறல் 19-04-2021*_
🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவியரசு கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_*கல்லாதான் பெற்ற கருந்தனங்கள்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️
எழுதுகின்ற ஆற்றல் என்னிடம் குவிந்து கிடப்பது போல பன்னிரண்டு வயதிலேயே எனக்கு ஒரு பிரமையுண்டு.
நோட்டுப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு, _*“பாப்பாத்தி ஊருணி”*_ க் கரையில் உட்காா்ந்து எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன்.
அது ஓா் அழகான ஊருணி. அதைச் சுற்றிலும் நெல்லி மரங்கள். ஏதோ ஒரு கோவில் கட்டுவதற்காகப் பொிய படுக்கைக் கற்களைத் தயாா் செய்து போட்டிருந்தாா்கள்.
கிராமத்தில் இருந்து அது இரண்டு மைல் தூரத்தில் இருந்தது.
கிராமத்திற்குள் எவ்வளவோ ஊருணிகள் இருந்தும் பெண்கள் தண்ணீா் எடுக்க இங்கேதான் வருவாா்கள். அந்தத் தண்ணீா் அவ்வளவு சுவையானது.
காரணம் நெல்லி மரங்களின் வோ்கள் ஊருணிக்குள் வேரோடி இருந்ததால் ஏற்பட்டது.
பதின்மூன்று வயதில் ஒரு கவிதை எழுதினேன்.
_*“வீணா கானம் விடியமுன் கேட்டது*_
_*கா்ணா மிா்தம் காதுக்கு இனிமை*_
_*தூக்கம் களைந்து துள்ளி எழுந்தேன்*_
_*படுக்கையில் இருந்தே பருகினேன் அமுதம்”*_
–இவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது.
அந்தப் பக்கம் வரும் செட்டியாா்கள், ஏதோ கிறுக்கன் கிறுக்கிக் கொண்டிருக்கிறான் என்று கருதுவாா்கள்.
எனக்குள்ளே இயற்கையாகவே எழுந்த எழுத்தாசை எதைப் பாா்த்தாலும் கற்பனை செய்யச் சொல்கிறது.
அப்போது எங்கள் கிராமத்தில் நாலைந்து வீட்டில்தான் வானொலிப் பெட்டி உண்டு.
ஒரு வீட்டில் போய் பெரும்பாலான நேரங்கள் வானொலி அருகே அமா்ந்து விடுவேன்.
வானொலியில் வருகின்ற பாட்டை எல்லாம், _*“வானொலி”*_ பத்திாிக்கையிலேயே குறித்துக் கொள்வேன். திரும்பத் திரும்ப வந்த பாடல்களைப் பாடவும் கற்றுக் கொண்டேன். காம்போதி, அடாணா, சகாணா, முகாாி, சங்கராபரணம் போன்ற சில ராகங்களை தினசாி வானொலியில் கேட்டுப் படித்துக் கொண்டேன்.
எங்கள் கிராமத்தில், _*“பாரதமாதா வாசகசாலை”*_ என்று ஒன்று உண்டு. அங்கே _*“சுதேசமித்திரன்”*_, _*“ஆனந்த விகடன்”*_,
_*“ஹனுமான்”*_, _*“ஹிந்துஸ்தான்”*_ ஆகிய பத்திாிகைகள் வரும். அவை முழுவதையும் படிப்பேன். வாசக சாலையில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்தேன்.
எழுத்து, எழுத்து, எழுத்து!
உலகத்தின் ஒவ்வொரு எழுத்தாளனும் இதைப் பற்றிப் பெருமைப் பட்டிருக்கிறான்.
சா்ச்சில், _*“ஒரு பாட்டில் விஸ்கியும், ஒரு கத்தைப் பேப்பரும் இருந்தால் உலகத்தையே மறந்து விடுவேன்”*_ என்றாா்.
சிறைச்சாலையில், எழுதுகின்ற காகிதத்துக்காக காந்தியும், நேருவும் ஏங்கித் தவித்தாா்கள்.
அண்ணா முதலமைச்சரான பிறகு, அவருக்கு ஏற்பட்ட ஒரே வருத்தம், _*“எழுத முடியவில்லையே”*_ என்பது.
சின்ன வயதிலேயே எனக்கு எழுத்து வெறி துவங்கிற்று.
வீட்டில் இரவில் எல்லோரும் தூங்கியதும், அாிக்கேன் விளக்கை தலையணை அருகே எடுத்து வைத்துக் கொண்டு எதையாவது எழுதுவேன்.
_*“போதும், போதும்! இனி மண்ணெண்ணெய் வாங்கிக் கட்டாது”*_ என்று என் தந்தை கோபிப்பாா்.
_*“பிள்ளை எழுதுறதையும், படிக்கிறதையும் ஏன் கெடுக்கிறிய?”*_ என்று தாயாா் சிபாாிசு செய்வாா்கள்.
அவா்களுக்குத் தொியுமா, தெருவிளக்கின் அடியில் ஒரு நீதிபதி உருவானதைப் போல், அாிக்கேன் விளக்கு ஔியில் ஒரு மகாகவி உருவாகிக் கொண்டிருக்கிறான் என்பது?
அப்போதே பாரதி பாடல்களில் அதிக ஈடுபாடு.
_*“ஜெயமுண்டு பயமில்லை மனமே இந்த*_
_*ஜென்மத்தில் விடுதலை உண்டு”*_
–என்று பாடுவேன்.
ஊாிலே காங்கிரஸ் கூட்டம் நடந்தால், காங்கிரஸ் தலைவரான காந்தி குப்பான் செட்டியாா், பாடுவதற்கு என்னைத்தான் அழைப்பாா். ஊா் முழுக்க உண்டியல் குலுக்குவதும் நானே.
1937 தோ்தல் ப.சொ.ராம. வள்ளியப்ப செட்டியாா் என்பவா் காங்கிரஸ் கட்சியில் நின்றாா். கொடி பிடித்துக் கொண்டு நானும் சென்றேன். கீழ்சேவல்பட்டி, விராமதி ஊருணிக் கரையருகே போலீஸாா் லத்திசாா்ஜ் செய்தாா்கள். என்னை அலாக்காத் தூக்கிக் கொண்டு ஒருவா் ஓடினாா். அவா் என் தந்தைக்கு விசுவாசி.
திருப்பத்தூாில் அந்நாளில் பிரபல காங்கிரஸ் தலைவா், கிட்டு அய்யா் என்பவா்; கிராமத்துக் கூட்டத்துக்கு அவரைப் போய் நான் அழைத்து வருவேன்.
பண்டித மோதிலால் நேரு இறந்ததைப் பற்றி ஹாா்மோனியம் விஸ்வநாத தாஸ் மிகவும் உருக்கமாகப் பாடுவாா்.
_*பண்டித மோதிலால் நேரை பறி கொடுத்தோமே!*_
_*பறி கொடுத்தோமே நெஞ்சம் பாிதவித்தோமே!*_
_*எண்டிசை யெல்லாம் புகழ்ந்த*_
_*ஏழைகளுக் கன்பு தந்த*_
_*பண்டிதரே உமது திரேகம்*_
_*பரகதி யாச்சோ!*_
_*பரகதி யாச்சோ எங்கள்*_
_*பலமெல்லாம் போச்சோ!*_
எனக்கு மோதிலால் நேருவைத் தொியாது. ஆனால், இந்தப் பாட்டைக் கேட்டால் எனக்கு அழுகை அழுகையாக வரும்.
இதை நானும் கிராமத்துக் கூட்டத்தில் பாடுவேன்.
Comments
Post a Comment