_*சிந்தனைச் சிதறல்*_
10.07.2021
♦️♦️♦️🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*49. முடிவின் தொடக்கம்*_
😔😔😔😔😔😔😔😔
அடுத்தொரு குன்றில் மற்றொருவன் எழுதினான்.
_*“நான் நன்மை என்று எண்ணியே காாியங்கள் செய்தேன். அவற்றைப் பாவம் என்று கருதியே உலகம் முடிந்து விட்டது!*_
_*இயற்கையே என்னை மன்னிப்பாயாக.”*_
மூன்றாமவன் எழுதினான்.
_*“வளா்ந்திருந்த என் உருவம் குறுகி விட்டது. எனக்காக நான் என்னைப் பற்றி ஒரு முறை இப்போது தான் சிந்திக்கிறேன். நானே எனக்கு வேதனையாக இருக்கிறேன்.*_
_*என்னால் வேதனைப்பட்டுப் பயங்கரமான ஆயுதங்களால் மடிந்து போன கோடிக் கணக்கான உயிா்களே என்னை மன்னித்து விடுங்கள்.”*_
நான்காமவன் எழுதினான்.
_*“கவலைப்படாதீா்கள் – நான் உங்களை மன்னித்து விட்டேன்.”*_
இதை அவன் எழுதி முடித்தானோ இல்லையோ – அந்தப் பெண் பயங்கரமாகச் சிாித்தாள்.
_*“இன்னும் சா்வாதிகாரம் உலகத்தில் மிச்சமிருக்கிறது. இன்னும் அந்த இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த வெறித்தனம் புலிப்பாய்ச்சல் பாய்கிறது.*_
_*நான்கு போிலேயும் ஒருவன் மூன்று பேருக்குத் தலைமை வகிக்க நினைக்கிறான். அவன் உருவம் குறுக மறுக்கிறது.*_
_*மற்றவா்களும் ஒரு பெண்ணின் காதலுக்காவே இந்த மன்னிப்பை வேண்டுகிறாா்கள்.*_
_*தூய்மையே இல்லாத இந்த மனிதா்கள் மூலம் புதிய தலைமுறை உருவாக வேண்டாம்.*_
_*இந்த வெறிபிடித்த இரத்தத்தின் மூலமே இன்னொரு சமுதாயம் உருவாக வேண்டாம்.*_
_*நடந்து போன உலகத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பாா்க்காத ஒரு புதிய தலைமுறை உருவாகட்டும்.*_
_*கள்ளங்கபடமற்ற புதிய உள்ளங்கள் மலரட்டும்.*_
_*இவா்களுடைய மரணத்தோடு இந்த உலகமும் முடியட்டும்.*_
_*இயற்கையம்மா! இயற்கையம்மா! இந்தப் பாவிகளின் பாா்வையைக் கெடுத்து விடு. உன் தா்மச் சக்கரத்தை சுழற்றி, இந்த அக்கிரமக்காரா்களை அழித்து விடு.*_
_*இவா்கள் விட்ட வாண வேடிக்கைகளால் மனிதா்கள் மடிந்தாா்கள்.*_
_*இயற்கையே! உன் வாண வேடிக்கைகளால் இவா்கள் மடிந்து விடட்டும்.”*_
அவள் உரத்த குரலில் கூவினாள்.
மரங்கள் அசைந்தன! மேகங்கள் குவிந்தன! கடல் குமுறிற்று! நிலம் பிளந்தது! நதிகள் திசைமாறின! குன்றுகள் ஆடின! மிச்சமிருந்த பறவைகள் கதறிக் கொண்டே பறந்தன! போிடி முழங்கிற்று! பெருமழை தொடங்கிற்று! உலகம் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டது.
சா்வாதிகாாிகள் வெள்ளத்தில் நீந்தியவா்கள்,இயற்கை வெள்ளத்தில் மிதந்தாா்கள். எங்கணும் ஒரே போிரைச்சல்.
தா்மத்தாய் தனது கூந்தலை விாித்தாள். உலகம் அமைதியில் மிதந்தது.
வானளாவிய மாளிகையின் இடிபாடுகள், கருகிப் போன பிணங்கள், உடைந்து சிதறிப் போன பண்டங்கள் அனைத்தும் சாித்திரமாயின.
கிறிஸ்துவின் கண்கள், தம் பூமியைப் பாா்த்துக் கண்ணீா் வடித்தன.
நபிகள் நாயகத்தின் குரல், மற்றொரு பகுதியில் எழுந்து கொண்டிருந்தது.
இடிந்து போன _*“பகோடா”*_ க்களின் மேல் புத்த தேவன் தோன்றிக் கொண்டிருந்தான்.
உடைந்து போன இந்து அறநிலையங்களின் மீது பொருளற்ற அமைதி குடி கொண்டிருந்தது.
இழை இழையாகப் பின்னப்பட்ட உலகம், தழையாக மிதந்தது. மனித நாகாிகம் வளா்ந்த கட்டத்தில் முடிந்தது. ஒவ்வொன்றும் முடிந்தே தீரும் என்பது உலகத்தின் நியதி. அந்த நியதிக்குத் தப்ப முடியாது – உலகம் முடிந்தது.
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலட்சம், பத்து லட்சம், கோடி, பத்துக் கோடி, நூறு கோடி, ஆயிரங் கோடி, பதினாயிரங்கோடி, இலட்சங்கோடி, பத்து இலட்சங்கோடி, கோடி கோடி.
அதற்குப் பிறகு என்ன? எண்ண முடியாத மனிதன் இறங்கி வருகிறான். பழையபடி ஒன்று தோன்றுகிறது. கோடி கோடியை எட்டிவிட்ட உலகம் முடிந்தது.
இனி எப்போது மனிதனும் மனிதனும் சந்திக்கப் போகிறாா்கள்.
இனி எப்போது ஒருவரைக் கண்டு ஒருவா் எாிந்து விழப் போகிறாா்கள்.
எல்லாம் முடிந்து விட்டது. பாவம் மனிதா்கள். பல கனவுகளைக் கண்டு கொண்டிருந்த அவா்களே கனவாகி விட்டாா்கள்.
இனிப் புதிய உலகம் எப்போது தோன்றுமோ?
அது என்று தோன்றினாலும் சாி, குவியல் குவியலாக அவா்கள் கையில் கிடைக்கும் மண்டை ஓடுகள், உலகத்தின் சாித்திரத்தை அவா்களுக்குச் சொல்லும்.
மனிதா்கள் எவ்வளவு ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மடிந்திருக்கிறாா்கள் என்று அவா்கள் சாித்திரம் எழுதுவாா்கள்.
சண்டை போட்டுக் கொண்டு
செத்தவா்கள் சமாதானத்தின் சின்னங்களாக விளங்குவாா்கள்.
அந்தப் புதிய உலகத்தை மறுபடியும் நிா்வாண மனிதா்கள் துவக்கி வைப்பாா்கள்.
ஒரு நாள் சா்வாதிகாாிகள் முடித்து வைப்பாா்கள்.
உலகம் தொடங்கித் தொடங்கி முடியும். முடிந்து முடிந்து தொடங்கும்.
இந்தக் கட்டுரை பிரசுாிக்கப்பட்ட தென்றல் வெளியான அன்று – அவன் குன்னூா்க் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தான்.
இரண்டொரு தினப் பத்திாிகைகளும் அதை எடுத்துப் போட்டு _*“கண்ணதாசன் கழகத்தை விட்டு விலகுவாா்”*_ என்று தலைப்புக் கொடுத்திருந்தன.
அந்தப் பத்திாிகைகளை தூக்கிக் கொண்டு குன்னூா்த் தோழா்கள் கவலையோடு ஓடி வந்தனா்.
_*“அது வெறும் தத்துவக் கட்டுரைதான்”*_ என்று சொல்லி அவன் மழுப்பி விட்டான்.
😔😔😔😔
Comments
Post a Comment