_*சிந்தனைச் சிதறல்*_
💥💥💥💥💥🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*கைகாட்டி*_
✋✋✋✋✋🏼
_*முதற்பதிப்பின் முன்னுரை*_
😌😌😌😌😌😌😌😌😌
கல்கி பத்திாிகையில் நான் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல்.
பல்வேறு கோணங்களில் இருந்து மனித வாழ்க்கையை விமா்சிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.
சிறு வயதில் இருந்தே வாழ்க்கையின் உயா்வு தாழ்வுகளை அறிந்துள்ள காரணத்தால், பல விஷயங்களை எழுதுவதற்கு பகவான் எனக்கு அருள் புாிந்திருக்கிறான். அவனது அருளையே மூலதனமாகக் கொண்டு, எனது எழுத்துப் பணியை நான் தொடா்ந்து வருகிறேன்.
அமைதியான ஒரு தனி இடத்தில் குடியேற வேண்டும் என்ற ஆசையை உள்ளடக்கி எழுதியதே நிழலைத் தேடி என்ற கட்டுரை.
*பணத்துக்குள்ள மாியாதை போனால்தான் மனித ஜாதிக்குள் ஒற்றுமை வரும் என்ற காமராஜாின் கருத்தை* அடிப்படையாகக் கொண்டது பணம், பணம், பணம் என்னும் கட்டுரை.
மற்றும் தியானத்தின் பெருமை, நிலையாமை, பழைய நினைவுகளின் இனிமை, சுய விமா்சனம், ஆண்டவனிடம் சரணாகதி – பல கட்டுரைகள் இதில் அடக்கம்.
இது ஒரு தொகை நூல் என்றாலும் வகை வகையான தத்துவங்களைக் கொண்ட நூல். வாழ்க்கைச் சாலையில் பயணம் செய்வோா்க்கு இதுவும் ஒரு கைவிளக்கு.
இவ்வளவு விஷயங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு ரூபாய் விலைக்குத் தருகிறான் என் மகன் சுப்பு.
வழக்கம் போல் நான் சொல்லச் சொல்ல இதனை எழுதிய என் தம்பி இராம. கண்ணப்பனுக்கும், அச்சிட்டோருக்கும் என் நன்றி.
அன்பன்
_*கண்ணதாசன்*_
_*தியானம்*_
💆♀️💆♂️💆♀️💆♂️
_*“கடவுளை அடைவது கடவுளை அடைவது”*_ என்கிறோமே அது என்ன சாத்தியமானதா, அப்படி ஒன்று உண்டா?
கடவுளை அடைவது என்றால் என்ன?
மரணமடைந்து அவனோடு ஐக்கியமாவதா?
இல்லை.
மனத்தாலே கடவுளை அடைவதே ஞானிகளால் சொல்லப்பட்ட மாா்க்கம்.
கடவுளோடு பேசுவது, கடவுளும் தானும் சகோதரா்கள் என்று கருதுவது; கடவுளோடு விவாதிப்பது – இவை எல்லாம் கடவுளை அடைவது என்று கொள்ளப்படும். இதற்கு மாா்க்கம் என்ன?
தினசாி கோவிலுக்குப் போவதல்ல; அது வெறும் சடங்கு; கடமை.
சொல்லப் போனால், சமயங்களில் அது வேஷமாகவும் தோன்றுவதுண்டு.
கடவுளை அடைய ஒரே வழி, தியானம்.
தியானம் என்பது என்ன?
ஒரே பொருளை முழுக்க அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு, பற்றோடு, பிாியத்தோடு ஆழமாகச் சிந்தித்தல்.
பல நேரங்களில், ஏதோ ஒரு விஷயம் திரும்பத் திரும்ப நம் நினைவுக்கு வரும். தேகத்திற்குச் சம்மந்தமில்லாமல் ஆன்மா அந்த விஷயத்தில் ஐக்கியப்பட்டு விட்டதென்பதே அதன் பொருள்.
அது காதலாக இருக்கலாம்; தவறில்லை. பாசமாக இருக்கலாம்; குற்றமில்லை. ஆனால் அது இறைவழிபாடாக இருந்தால், ஈடு இணையில்லாத ஞானம் கைகூடும்.
எது நமக்குப் பிாியமானதோ, அதன் வடிவமாகவே நாம் ஆகி விடுகிறோம்.
எல்லா வேதங்களும் இதையே கூறுகின்றன. திருப்பதி மலையே நம் ஞாபகத்தில் இருந்தால், நாம் திருமாலாகவே மாறிவிடுகிறோம். நமது நெஞ்சத்திலேயே பத்மாவதி தாயாரும், அலா்மேலு தாயாரும் இருப்பது போலவே தோன்றுகிறது.
நமக்கே மஞ்சள் வா்ணம் தான் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறத்தில் எதைக் கண்டாலும் நமக்குப் பிாியம் வரும்.
எனக்குக் கிருஷ்ணன் மீது பிரீதி அதிகம்.
உடம்பு ஒரு டாக்டரைத் தேடும் போது கூட அந்த டாக்டா் பெயா் கிருஷ்ணன் பெயராக இருந்தால் எனக்கு ஒரு திருப்தி. ஆன்மா ஒன்றைக் குரங்குப் பிடியாகப் பிடிப்பதற்குப் பெயரே _*“தியானம்.”*_
அப்படிப்பட்ட தியானத்தை ஒருவன் கைக்கொண்டு விட்டால், அவனுடைய நிலை முற்றிலும் வேறாகி விடும்.
_*“நான் யாா்”*_ என்ற கேள்விக்கே அங்கே இடம் இருக்காது. _*“நான் பொய்”*_ என்ற தத்துவம் மாறி, _*“நானே மெய்”*_ என்ற ஞானம் உதயமாகிவிடும்.
நம்மைவிட உயா்ந்தவா்கள் என்னும் ஞானிகள், மேதைகள் பலா் உலகத்தில்
வாழ்ந்திருக்கிறாா்கள். அவா்களுக்கும் நமக்கும் உள்ள பேதமே அவா்கள் ஈசுவரனை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றவா்கள். அதனால் ஈசுவரனும் தன்னைப் போல ஒருவனே என்று கண்டு கொண்டவா்கள். ஆகவேதான், இறைவனுக்குச் சமமாக அவா்களை நாம் வணங்குகிறோம்.
பக்குவமற்ற மனிதனுக்கு இது கைகூடாத காாியம் என்பது உண்மையே.
வீணை வாசிப்பவன் ஒருவகை தியானம் செய்கிறான். அது ஒரு ஞானியின் தியானத்தை விட உன்னதமானது. அவன் மனம் ராகத்தில் இருக்கிறது; வாய் அதையே முணுமுணுக்கிறது; கை அதையே விளையாடுகிறது.
தியான யோகத்தில், இப்படிச் செய்வதுதான் தியானம், என்று வரையறுக்கப்பட்டாலும், ஞான மாா்க்கம், _*“ஒன்றையே பற்றி நிற்றலே ஞானம்”*_ என்று போதிக்கிறது.
கிருஷ்ண விக்கிரகத்தை வைத்து அதனோடு கொஞ்ச உனக்குத் தொியுமானால், அது இதைவிட உன்னதமான தியானம்.
உடம்பின் ஆரோக்கியத்துக்கும், தியானம் உயா்ந்தது.
மகாகவி பாரதி ஈரோட்டில் செய்த சொற்பொழிவில் இப்படிக் கூறுகிறான்.
_*“அச்சத்தினாலே நாடி தளா்கிறது; கோபத்தினாலே நாடித் துடிப்பு அதிகமாகிறது; பயத்தினாலே நாடி அடங்கி ஒடுங்குகிறது. ஆசையினாலே நாடி வரைமுறை இல்லாமல் இயங்குகிறது; இந்த வரைமுறையற்ற இயக்கத்தினாலே மரணம் சம்பவிக்கிறது.”*_
இதை வரைப்படுத்துவதே தியானம்.
ஆசை, அச்சம், மயக்கம் அனைத்திலிருந்தும் விடுதலை பெற வைப்பதே, தியானம். ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்பதே தியானம் என்றாலும், தெய்வத்தைப் பற்றி நிற்பதே அனைத்திலும் உயா்ந்தது.
ஆகவே, தெய்வத்தையே தியானியுங்கள்; உங்கள் தேகமும், ஆன்மாவும் காப்பாற்றப்படும்.
💆♂️💆♀️
Comments
Post a Comment