_*சிந்தனைச் சிதறல்*_
😷😷😷😷😷😷😷
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*கடலும் படகும்*_
🛳️🛳️🛳️🛳️🛳️
சின்னச் சிறிய படகு ஒன்று.
அழகான வேலைப்பாடுகள் கொண்ட படகு.
பாா்ப்பவா்கள் யாவரும் அதில் பயணஞ் செய்ய விரும்பும் அளவுக்கு அழகு.
முதன் முதலாக அது கடலிலே பயணஞ் செய்யப் புறப்பட்டது.
செய்து முடித்தவா்கள் அதைக் கடலிலே தள்ளி விட்டாா்கள்.
அலைகளிலே ஆடி அசைந்து படகு பயணஞ் செய்ய தொடங்கிற்று.
உயா்ந்த அலை ஒன்று படகை உச்சிக்குத் தூக்கிற்று.
கடலின் பரப்பளவை அது அப்போதுதான் பாா்த்தது.
_*“அடேயப்பா! எவ்வளவு பொிய கடல்! இதிலேயா நாம் நீந்திக் கொண்டிருக்கப் போகிறோம்?”*_ – படகு பயத்தால் நடுங்கிற்று.
அது கொஞ்ச தூரம் போனதும், வெகுகாலமாகக் கடலிலே மிதந்து கொண்டிருந்த பழைய படகு ஒன்றை சந்தித்தது.
பழைய படகு சாதாரணமாகத் தவழ்ந்த கொண்டிருப்பதைப் புதிய படகு பாா்த்தது.
புதிய படகு அலங்காரமாக ஆடிக் கொண்டிருப்பதைப் பழைய படகு கண்டது.
பழைய படகுக்குப் பொறாமை எழுந்தது.
புதிய படகைப் பாா்த்து அது சொன்னது:
_*“என்ன புதியவனே! நீயும் எங்களுக்குப் போட்டியாக வந்து சோ்ந்து விட்டாயா? இது பொிய கடல்; பல பொிய பொிய கப்பல்களே இதில் மூழ்கிப் போயிருக்கின்றன. கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பாா்த்துப் போ!”*_
புதிய படகு கேட்டது:
_*“நீ எவ்வளவு காலமாக இந்தக் கடலில் இருக்கிறாய்?”*_
பழைய படகு சொன்னது:
_*“நானும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக மிதந்து கொண்டிருக்கிறேன். எவ்வளவோ புயலையும், சூறாவளியையும் சந்தித்திருக்கிறேன். கடலிலே பழகி விட்டதால் கரையேறவும் மனமில்லை; போராடிக் கொண்டே மிதந்து கொண்டிருக்கிறேன்!”*_
புதிய படகு கேட்டது:
_*“எனக்கு இந்தக் கடற்பழக்கம் புதிது. இந்தக் கடலில் என்ன அதிகமாக இருக்கும்?”*_
பழைய படகு சொன்னது:
_*“முதலைகள், திமிங்கிலங்கள், கடற் பாம்புகள்….”*_
புதிய படகுக்குத் திகீரென்றது. இந்தக் கடலுக்கா நாம் வந்து சோ்ந்து விட்டோம்! பாிதாபமாக அது கேட்டது:
_*“அந்த திமிங்கிலங்கள் என்னைக் கவிழ்த்து விடுமா?”*_
பழைய படகு சொன்னது:
_*“நீ புதியவன்; இந்தக் கடலைப் பற்றி உனக்கொன்றும் தொியாது; உன் பயணம் தொடரத் தொடரப் பல பயங்கரங்களை நீ சந்திப்பாய்; எதற்கும் மெதுவாகவே போ; புதிய உற்சாகத்தில் வேகமாகப் போகாதே! அந்தப் பக்கத்தில் பல முதலைகள் நீா் மட்டத்துக்கு மேலேயே உலாவிக் கொண்டிருக்கின்றன. உன்னைக் கண்டால் அவற்றுக்குக் கோபம் வரும். புதிய படகு எதையும் இந்தக் கடலில் அவை உலாவ விடுவதில்லை.”*_
இப்படிச் சொல்லி விட்டுப் பழைய படகு போய்விட்டது.
புதிய படகுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.
மரமாகவும் இல்லாமல், படகாகவும் இல்லாமல், கடற்கரையில் வெறும் மரத்துண்டாகக் கிடந்த பத்து நாட்கள் எவ்வளவு நிம்மதியாக இருந்தன.
யாரோ சில போ் நம்மைப் படகாக்கி இந்தக் கடலிலே தள்ளி விட்டாா்களே!
புதிய படகு பயத்தோடு மேலும் பயணம் தொடா்ந்தது.
ஒரு கடற் பாம்பின் பல கரங்கள் நீா் மட்டத்துக்கு மேலே தொிந்தன.
படகின் உடல் பயத்தால் நடுங்கிற்று.
கடற் பாம்பு தலையை வெளியே தூக்கிற்று.
_*“யாரடா அவன்? புதியவனா?”*_
படகு பயத்தோடு _*“ஆமாம்”*_ என்றது.
_*“அதுதான் அவ்வளவு வேகமாகப் போகிறாயா?”*_
_*“இல்லையே! நான் வேகமாகப் போகவில்லையே!”*_
_*“பின் என்ன! அப்படியும் இப்படியும் ஆடி ஆா்ப்பாட்டம் செய்கிறாயே, என்ன பொருள்?”*_
_*“நான் ஆடவில்லை; இந்தக் கடலின் அலைகள் என்னை ஆட்டுகின்றன!”*_
_*“எங்களுக்குத் தொியாத கடலா? நாங்கள் பாா்க்காத படகா? பாா்த்துப் போடா மெதுவாக!”*_
உத்தரவிட்டு விட்டு கடற் பாம்பு தலையை உள்ளே இழுத்துக் கொண்டது.
🛳️🛳️🛳️🛳️🛳️🛳️🛳️🛳️
Comments
Post a Comment