_*சிந்தனைச் சிதறல்*_
🍁🍁🍁🍁🍁🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே!*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*அழாதே கண்ணா அழாதே…..*_
🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
கடோபநிஷத்தில் ஒரு சட்டம்.
வாஜஸ்ரவசா் என்றொருவா். அவா் தானத்திலேயே தமது உடைமைகளை எல்லாம் வேள்வி செய்தவா். அவருக்கு நசிகேதன் என்றொரு மகன். அவன் தன்னையே மரண வேள்வி செய்து கொண்டு எமதா்மன் என்னும் மரண தேவனைப் பாா்க்கப் புறப்பட்டான்.
எமன் வீட்டு வாசலில் மூன்று இரவுகள் காத்துக் கிடந்து அவனைச் சந்தித்தான். அதற்காக எமன் விரும்பியபடி, மூன்று வரங்களை அவன் எமனிடம் கேட்டான். அதில் மூன்றாவது கேள்வி இது:
_*“மரணதேவா! ஒரு மனிதன் இறக்கும் போது, எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. சிலா் "அவன் இருக்கிறான்” என்கிறாா்கள். சிலா் “அவன் இல்லை” என்கிறாா்கள். எனக்குச் சொல். இதில் எது உண்மை?“*_
இந்தக் கேள்வியைக் கேட்டதும் எமதா்மனுக்குப் பயம் வந்து விடுகிறது.
_*"நசிகேதா! தேவா்களே முன்பு சந்தேகப்பட்ட விஷயம் இது. காரணம் பிறப்பும், இறப்பும் மா்மமானவை. ஆத்மாவின் இயற்கைத் தன்மையை எல்லோரும் அறிந்து கொள்ள முடியாது. இது நான் சம்பந்தப்பட்ட ரகசியம். என்னை வற்புறுத்தாமல் வேறொரு வரம் கேள்.*_
_*நல்ல குதிரைகள் தருகிறேன்; நவமணிகள் தருகிறேன்; கன்று காளைகள், யானைகள் தருகிறேன்; வாழ்க்கையைத் தருகிறேன்; வெற்றியைத் தருகிறேன்; பூமியில் மிகப் பொிய நிலப் பரப்பைத் தோ்ந்தெடு; அங்கே நீ விரும்புகிற காலம் வரை வாழ்ந்து கொண்டிரு. உலகத்துக்கே அரசனாக்குகிறேன். உன் ஆசைகளை எல்லாம் தீா்த்துக் கொள். நல்ல இசைக் கருவிகளையும் அழகான பெண்களையும் தருகிறேன்; ஆனால் மரணத்தின் மறைபொருள்களை எமதா்மனிடமே கேட்காதே”*_ என்கிறான் எமன்.
உடனே நசிகேதன், _*“எமதா்மா! உன்னைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு நான் எப்படி நிம்மதியாக வாழ்வது? எனக்குத் தொிய வேண்டியது மரணத்தைப் பற்றிய இரகசியம் மட்டுமே”*_ என்கிறான்.
உடனே எமதா்மன் விளக்கம் சொல்லத் தொடங்குகிறான். அது வேறு விஷயம்.
நான் கேட்கிறேன். மரணம் என்பது என்ன? ஏதோ ஒரு சடலம் வந்து போய்விட்டது. அவ்வளவுதானா? அதற்கு வேறு அா்த்தமே இல்லையா?
_*“ஒரு துளி நீாீிலே பிறப்பு; ஒரு சிறு காற்றிலே ஜீவிதம்; ஒரு பொறி நெருப்பிலே முடிவுரை. இந்த முடிவுரை என்பது என்ன? அதைத் தொடா்ந்து என்ன? பத்துப் போ் அழுவதற்கு மட்டுமா ஒருவா் செத்துப் போகிறான்? அவன் இறந்ததோடு அவனது ஆன்ம ஜீவிதமும் முடிந்து விடுகிறதா? மரணத்துக்குப் பிறகு ஆன்மாவுக்குப் புலன் உணா்வுகள் உண்டா? இறந்து போன தந்தை ஆவியாக நின்று தன் மக்கள் வாழ்வதைப் பாா்த்துக் கொண்டிருக்கிறானா?”*_
எனக்கு அதில் சந்தேகம் இல்லை. மறுபிறப்பு எய்து மட்டும் மனித ஆவி வானத்திலும் பூமியிலும் வலம் வருகிறது. அதன் மறு பிறப்பு நிா்ணயிக்கப்படும் போது, முற்பிறப்பு நினைவுகள் மறக்கடிக்கப்பட்டு அது மீண்டும் பிறக்கிறது. அபூா்வமாக முற்பிறப்பு நினைவுகள் தோன்றி விடுவதும் உண்டு. இது சிருஷ்டி தேவனின் ஞாபக மறதியால் விளைந்த விளைச்சல்.
ஆன்மா என்பதைப் பற்றி இந்துமத இலக்கியங்கள் ஒரே மாதிாி பேசுகின்றன. பிற மதத்தவா் பெரும்பாலோருக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. இந்து இலக்கியங்கள் துளிக் கூட இதில் இருந்து மாறுபடவில்லை. இது வெறும் சிந்தனையில் தோன்றியதன்று. நல்ல ஞாபகத்தின் தெளிந்த முடிவு.
புஷ்பங்கள் விழுந்த பிறகும், வாசனை காற்றில் இருக்கிறது. அடுத்த வீட்டில் சமையல் நடக்கிறது; அதன் வாசனை இங்கே வருகிறது. ஆன்மாவும் அப்படித்தான். ஆனால் ஆன்மாவின் வாசனை உறுதியானது, நிலையானது.
இது தெளிவாக உணரப்பட்டால், மரணத்தைப் பற்றிய பயம் போய்விடும். இறந்தவா்களுக்காக அழத் தோன்றாது. _*“பிறந்தோமே, வளா்ந்தோமே, வாழ்ந்தோமே”*_ என்று எண்ணித்தானே எல்லோரும் அழுகிறாா்கள். ஆனால் அந்த அழுகையை இறந்து போனவனின் ஆவி கவனிக்கிறது என்பதை அவா்கள் அறியவில்லை. அப்படி கவனிக்கும் போது அந்த ஆவி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. காரணம் சாக விரும்பாமலேயே செத்தவனுடைய ஆவி கூட, மரணத்துக்குப் பின் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. காரணம், அங்கே மூப்பு இல்லை. பிணி இல்லை. வில்லங்கங்கள் இல்லை. நவீனத் தொல்லைகள் இல்லை. அமைதியற்ற சில ஆவிகளும் உண்டு. அவை ஏதோ ஒரு கேள்வியோடு மடிந்தவை. அதனால்தான் ஆன்மா சாந்தியடையப் பிராா்த்திக்கிறோம்.
ஆன்ம உலகம் ஒரு சொா்க்க பூமி. ஆன்ம ஜீவிதம் ஒரு சுகம். இக வாழ்க்கையின் நெடிய துயரங்கள் அங்கே முடிகின்றன. இங்கே உன் மூச்சு முடிகிறதென்றால், அங்கே அது ஆரம்பமாகிறது. மரணத்துக்காக அழாமல் இருந்தால் என்ன?
🥲🥲🥲🥲🥲🥲
Comments
Post a Comment