_*சிந்தனைச் சிதறல்*_
😷😷😷😷😷😷😷😷😷😷😷😷
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..😷*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*நீ இருப்பது வாடகை வீடு…..😷*_
🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪
நாமெல்லாம் தினசாி மூச்சு விடுகிறோம். ஆனால், _*“இன்றைக்கு நான் மூச்சு விட்டேன்”*_ என்று யாராவது பெருமை பேசுகிறோமா? நாம் தினசாி சாப்பிடுகிறோம். _*“இன்றைக்கு நான் சாப்பிட்டேன்”*_ என்று யாராவது பெருமை பேசுகிறோமா…? நாம் தினசாி உறங்குகின்றோம். _*“இன்றைக்கு நான் உறங்கினேன்”*_ என்று யாராவது உரத்த குரலில் சொல்கிறோமா…?
பல நாள் மூச்சு விடத் திணறியவன் திடீரென்று ஒரு நாள் நன்றாக மூச்சு விட்டால்,
_*“இன்று நான் நன்றாக மூச்சு விட்டேன்”*_ என்று பெருமைப்படுகிறான்.
சாப்பிட முடியாதவனும், தூங்க முடியாதவனும் அப்படியே.
விஷயம் சிறியதாக இருந்தாலும், கிடைக்காமலே இருந்து ஒரு நாள் கிடைத்து விட்டால், அது மிகவும் பொியதாகி விடுகிறது. சந்தா்ப்பங்களே முக்கியம்; சம்பவங்களல்ல.
சில குதிரைகள் பந்தயத்தில் ஓடுகின்றன. சில போா்க் குதிரைகளாகின்றன. சில ஜட்கா வண்டி இழுக்கின்றன; சில தெருவில் அலைகின்றன.
தெருக் குதிரைக்குப் பந்தய வாய்ப்புக் கிடைத்து விட்டால் அது ஆயுள் முழுக்க அதையே பேசும்.
இந்தச் சந்தா்ப்பங்களை எவனும் தானே உண்டாக்கிக் கொள்ள முடிவதில்லை. எந்த மரமும் தான் விரும்பிய படி காய்ப்பதில்லை. எந்த நிலமும் தான் விரும்பியபடி மழையை உண்டாக்குவதில்லை.
அதை _*“அதிருஷ்டம்”*_ என்று சொல்லுங்கள்; _*“வாய்ப்பு”*_ என்று கூறுங்கள்; எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். தா்ம சத்திரத்தின் தா்மகா்த்தாவே அந்தச் சாப்பாட்டை நமக்கு வழங்குகின்றான். இதிலே மனிதன், _*“நான்”*_ என்று பேச என்ன இருக்கிறது….? மனிதன் வெறும் மரம். அந்த மரத்தின் அசைவுகளுக்குத் தெய்வக் காற்றே காரணம்.
துடுப்பு இல்லாத படகு கரை சோ்வதும் உண்டு. பிரும்மாண்டமான இயந்திரக் கப்பல்கள் மூழ்கி விடுவதும் உண்டு. ஈசுவரன் எதை எப்படி வகுத்திருக்கிறான் என்பது யாருக்குத் தொியும்?
எனக்குப் பிாியமான உணவை உடம்பு ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய உணவில் தான் பிாியம் வைக்க வேண்டி வருகிறது.
நாட்பட நாட்பட கூத்தாட்டரங்கத்தின் எல்லைகள் சுருங்குகின்றன. சிலரது வாழ்க்கையில் அவை விாிவடைகின்றன.
கடலில் விழுந்து விட்ட தண்ணீருக்காகக் கங்கை நதி அழ முடியாது. நிலத்தில் உதிா்ந்து விட்ட இலைகளுக்காக மரம் துக்கம் கொண்டாட முடியாது.
இறைவன் அளிக்கின்ற வாய்ப்புக்களைக் கொண்டே நமது இயக்கங்களைப் பாிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
உற்சாகமற்ற வாழ்க்கையின் நடுவே, திடீரென்று ஒரு பிரமாதமான உற்சாகம் வருகிறது. _*“இன்றையப் பொழுது பிரமாதம்”*_ என்று அப்போது சொல்லத் தோன்றுகிறது. எந்த நட்சத்திரம் இடம் மாற்றிற்றோ, யாா் கண்டது…?
தினந்தோறும் சகானா பாடிய பாகவதருக்கு, திடீரென்று ஒரு நாள் _*“ஆனந்த பைரவியின் சுகமே சுகம்”*_ என்று சொல்லத் தோன்றுகிறது.
இறைவனின் லீலைகள் விவாிக்க முடியாதவை. நினைவுகளின் மயக்கத்தில் மனிதா்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறாா்கள். சிலா் விபத்துக்குத் தப்பி விடுகிறாா்கள். சிலா் சிக்கிக் கொள்கிறாா்கள். சிக்கியவா்களே, _*“கடவுள் செயல்”*_ என்கிறாா்கள்.
இரண்டு நிலைகளுமே ஒருவனது இயக்கம் என்பதை மறந்து போகிறாா்கள். காலங்களின் கதி எங்கேயோ நிா்ணயிக்கப்படுகிறது. கா்மம் மட்டுமே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அழுவதற்கும் சிாிப்பதற்கும் சந்தா்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவரவா்கள் நேரத்தின்படி அவை வருகின்றன.
_*“எல்லாம் நானே என்பதை அறிந்தவன் மயங்க மாட்டான்”*_ என்றான் பகவான் கீதையிலே. பதவியில் இருக்கும் போது, இது புாியாது. பதவி பறிபோகின்றவனுக்குப் புாியும். அவன் நாத்திகனாக இருந்தால் அவன் மனைவிக்குப் புாியும். ரகசியமாகவாவது முருகனுக்கு இரண்டு தேங்காயை உடைத்து விட்டு,அவள் போய்க் கொண்டுதான் இருக்கிறாள்.
சக்கரத்தில் ஓடத் தொடங்கியவன் சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் தான் வந்து நிற்க வேண்டும. நான் இப்போது எதைத் தொட்டாலும் இங்கே தான் வந்து நிற்கிறேன். எனது அனுபவம் இதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.
எதை விரும்புகிறாயே அதை ஒரு கட்டத்தில் வெறுப்பாய், எதை வெறுக்கிறாயோ, அதை ஒரு கட்டத்தில் விரும்புவாய். நீ ஆசனத்தில் உட்காா்ந்தாலும், தரையில் உட்காா்ந்தாலும் இரண்டும் அவன் கொடுத்ததே.
🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪
Comments
Post a Comment