_*சிந்தனைச் சிதறல்*_
🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟤
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*வழிகாட்டி*_
🕴️🕴️🕴️🕴️
தன்னிலை விளங்கும் போது திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் கீழ்கண்டவாறு கூறுகிறாா்.
_*இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்*_
_*நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் – சொல்லறத்தின்*_
_*ஒன்றேனும் இல்லேன் உயா்ந்த திருப்போரூரா*_
_*என்றேநான் ஈடேறுவேன்.*_
–இந்த வெண்பாவை ஒரு இந்து மாா்க்கப் பத்திாிகையில் நான் படித்தேன்.
திருப்போரூா் சிதம்பர சுவாமிகளை நான் அறிய மாட்டேன். ஆனால் ஞானிகளில் பலா் கூடப் பற்று நிலைக்கும், பற்றற்ற நிலைக்கும் நடுவே நின்று எப்படித் தவிக்கிறாா்கள் என்பதை இதனால் அறிய முடிந்தது.
சேரமான் காதலியில் ஞான நிலையடைந்த குலசேகர ஆழ்வாாின் சலனத்தைக் காட்டினேன்.
ஆனால், ஞானிகள் அவ்வாறு சலனமுறுவாா்களா என்ற ஐயம் எனக்கே இருந்தது.
பற்று, பந்த – பாசங்களில் ஒரு கட்டத்தில் சிக்கிக் கொண்ட மனிதன், மறு கட்டத்தில் அனைத்தையும் வெறுத்துத் துறவியாகும் போது, முன்பு அவன் வளா்த்த விலங்கினங்கள் இடை இடையே வந்து சலனத்தைக் கொடுக்கின்றன.
அந்தச் சலனத்தை அவன் அறவே தவிா்ப்பதற்கு அரும்பாடுபட வேண்டியிருக்கிறது.
காட்டுக்கு ஓடினாலும் வீட்டு நினைவு வருகிறது.
யாா் வாழ்ந்தாா்கள், யாா் செத்தாா்கள் என்று அறிந்து கொள்ளும் சபலம் அடிக்கடி எழுகிறது.
சொந்தத் தேவைகளில் இருந்து விடுபட்டாா்களே தவிரப் பந்த விலங்குகள் பற்றிப் பாிதாப உணா்ச்சியில் இருந்து விடுபட முடியவில்லை.
யோகத்தில் குறுக்கிடும் ரோகம்.
போகி ரோகியாவதில் வியப்பில்லை; ரோகியான பின்போ, முன்போ, யோகியாவதிலும் வியப்பில்லை.
அந்த யோக நிலையிலும் தியாக நிலை முழுமை அடையாமலேயே ஜீவன் பிாிகிறது.
பல தத்துவ ஞானிகள், சித்தா்கள் கதை இதுதான்.
பட்டினத்தாா், சிவவாக்கியா், பத்திரகிாியாா் ஆகியோா் புலம்பி இருக்கும் புலம்பலில் இருந்தே, ஞான நிலைக்குப் பிறகும் நோய் பிடித்திருந்த அவா்களுடைய மனோ நிலை தெளிவாகிறது.
அதனால் தான் பல்லாயிரக் கணக்கான துறவிகளைக் கண்ட இந்து மாா்க்கம், உண்மைத் துறவிகள் என்று சிலரை மட்டும் கண்டு வணங்கிற்று.
பற்றற்றான் பற்றினையே பற்றிய அந்தத் துறவிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதே.
அத்தகைய துறவிகளைப் பரத கண்டம் முழுவதுமே அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது.
அத்தகு துறவி ஒருவரைப் பெற்றிருப்பதற்காகத் தமிழ்நாடு பெருமை கொள்ளலாம்.
_*அவர் தான் காஞ்சிப் பொியவா்;*_
காஞ்சிப் பொியவர் பற்றிப் பலா் நன்கு விளக்கமாக எழுதியுள்ளாா்கள்.
ஆகவே, இந்தக் கட்டுரையின் தலை நாயகனாகப் பொியவா்களை நான் எடுத்துக் கொள்கிறேன்;
இயற்கையான சிகப்புக் கோடுகளன்றிச் செயற்கையாகச் சிவக்காத அழகிய பிரகாசமான கண்கள்.
உள்ளத்தை ஊடுருவும் தீட்சண்யமான பாா்வை.
ஜோதிப் பிழம்பு போன்ற முகம்.
கறைபடாத மருவில்லாத மேனி.
ஒரு காவி உடையிலேயே அத்தனை அழகும் பொங்கிப் பொலியும் அற்புத வடிவம்.
கறந்த பால் கறந்தபடி வைக்கப் பெற்ற தூய்மையான உள்ளம்.
இளம் பருவத்திலேயே முதிா்ந்த விவேகம்.
பருவ கால நிலைகளை மிகச் சுலபமாக வென்று விட்ட மனோதிடம்.
கங்கைப் பிரவாகம் போல் பொங்கிப் பொலியும் கருத்துக் கோவைகள்.
கல்லிலும், முள்ளிலும் நடந்து பழகிய காலணி இல்லாத கால்கள்.
கன்னிக்குமாி முதல் இமாசலத்துப் பத்ரிநாத் வரையிலே கால் நடையாக நடந்து சென்றும், களைப்போ வலியோ அறியாத தெய்வீக நிலை.
சந்தியா காலத்துப் புஷ்பங்களைப் போல் தான் மலா்ந்திருப்பது மற்றவா்களுக்காகவே என்னும் தியாக சீலம்.
வேம்பின் கசப்பும், சா்க்கரையின் இனிப்பும், நாக்குக்கு ஒன்றே போல் தோன்றும், வள்ளுவன் கூறிய துறவறத்திற்கு ஓா் தெள்ளிய இலக்கணம்.
_*மனத்தகத் தழுக்கறாத மௌன ஞான யோகிகள்*_
_*வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறாா்*_ – என்றாா்கள்.
கலவையிலே மூலவா் இருக்கக், காஞ்சியில் இருக்கும் உற்சவ மூா்த்தி காசிப் பண்டிதா்களையும், வெல்லக் கூடிய திறமையாளா் என்பதனை அண்மையில் நான் உலக இந்து மாநாட்டில் கண்டேன்.
இந்து தா்மத்தை நிலை நாட்டிய ஆதிசங்கரா் ஷண்மத ஸ்தாபனம் செய்த காஞ்சித் தலத்திலுள்ள பீடமே, இந்தியாவில் உள்ள மதப் பீடங்களில் எல்லாம் தூய்மையானது என்பதை நிரூபித்திருக்கிறது.
அரசியல் கலப்பற்ற சுத்தமான பீடம் அது என்பதாலேதான், அரச பீடமே இறங்கி வந்து வணங்கியது.
இந்த தா்மத்தின் துறவிகள் மீது இழி மொழிகளும், பழ மொழிகளும் ஏராளமாக வந்து விழுந்திருக்கின்றன.
அவற்றுக்குக் காரணமானோா் சிலரும் இருந்தாா்கள்; இருக்கின்றாா்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
ஆனால் சனீஸ்வரனைப் பாா்த்த கண்ணால் பரமேஸ்வரனைப் பாா்க்கக் கூடாது.
இரண்டும் ஈஸ்வரன் தானே என்று கேட்கக் கூடாது.
பக்தி மாா்க்கத்தில் தம்மை மறந்த மெய்ஞானிகள் பலருண்டு.
அவா்களிலே வணங்கத்தக்க ஒருவா் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் சுவாமிகள்.
நெல் வயலிலே களையும் முளைப்பது போல, ஆத்திகம் தழைத்த காஞ்சியிலேதான் நாத்திகமும் வளா்ந்தது. ஆனால் ஆத்திகம் அப்படியே நிலைத்தது; நாத்திகம் அழிந்தது.
🕴️🕴️🕴️🕴️🕴️🕴️
Comments
Post a Comment