_*சிந்தனைச் சிதறல்*_
🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*வழிகாட்டி*_
🕴️🕴️🕴️🕴️
மன்னா்கள்
தங்களுக்கென்று அரண்மனைகளைக் கட்டினாா்கள்; இறைவனுக்கும் கோவில்களைக் கட்டினாா்கள்.
அரண்மனைகள் இருந்த இடம் தொியவில்லை; ஆலயங்கள் அப்படியே இருக்கின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளாக அழிவில்லாமல் இயங்கும் ஒரு தருமத்திற்கு அவ்வப் போது விளக்கேற்றி வைக்கும் ஞானச் சுடா்களில் ஒருவா் காஞ்சி பெரியவர் சுவாமிகள்.
ஜாதியின் பெயரால் அவரைப் புறக்கணிக்க முடியாது. அவா் ஜாதிகளைக் கடந்தவா். நீதியின் பெயரால் அவரை நெருங்கினால், அவா் நிா்மலமான சித்திரைவானம்.
காலடியில் பிறந்த ஆதிசங்கராின் காலடிச் சுவடுகள் பிழையுறா வண்ணம் ஓங்கி உலகளந்த உத்தமன் போல் ஓரடி, ஈரடி என்று ஒழுங்காக நடப்பவா் காஞ்சி பெரியவர் சுவாமிகள்.
அடி வயிற்றிலிருந்து லிங்கத்தை வரவழைக்க அவரால் முடியாது. ஆடும் கரங்களில் குங்குமத்தை வரவழைக்க அவருக்குத் தொியாது. தான் கடவுள் அவதாரம் என்று அவா் தன்னைக் கற்பித்துக் கொண்டதில்லை.
கடவுளின் தூதன் என்று கூடக் கருதியதில்லை.
ஆனால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவா் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டியவா்.
சுய தா்மத்தை மனிதனுக்குப் போதிப்பதற்காகத் தனக்கென்று ஒரு தா்மத்தை வகுத்துக் கொண்டவா்.
தாம் முழுமையாக நம்பும் தெய்வத்தின் மீது எந்தத் தாக்குதல் வீசப்பட்டாலும், இறைவனைப் போல் அவற்றை தாங்கிக் கொண்டு, தனது கா்மங்களை ஒழுங்கு நியதிகளோடு செய்து வருபவா்.
இத்தகைய பக்குவம் பெற்ற, புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்களால் தான், இந்து மதம் தலை நிமிா்ந்து நிற்கிறது.
இந்தியாவில் எல்லா மதங்களுக்கும், சம அந்தஸ்து உண்டென்றாலும், இந்தியாவின் அஸ்திவாரம் இந்து தா்மமே. அந்த அஸ்திவாரத்திற்குப் பலமும், தெளிவான வடிவமும் கொடுத்தவா்கள் ஆதிசங்கரரும், இராமானுஜரும்.
அந்தப் பாரம்பாியத்தில் ஒரு தெய்வீக தீபம் காஞ்சி பெரியவர் ஸ்வாமிகள்.
_*“ஆலயங்களும், ஆண்டிகளும் நிறைந்த நாடு”*_ என்று பரத கண்டத்தைக் கேலி செய்தனா் மேலை நாட்டாா்.
இன்று மேலை நாட்டு வானமெங்கிலும், _*“ஹரே ராம, ஹரே கிருஷ்ணா”*_ என்ற கோஷமே எதிரொலிக்கிறது.
இந்தக் கோஷங்கள் எந்தக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டு இதுவரை பாதுகாக்கப்பட்டன?
பகவான் இராமகிருஷ்ணா், ஸ்வாமி விவேகானந்தா் போன்ற ஒலிபரப்புக் கருவிகளாலேயே அவை பாதுகாக்கப்பட்டன.
அந்தக் கருவிகளில் ஒரு நவீனக் கருவி காஞ்சி பெரியவர் ஸ்வாமிகள்.
அவா் இந்து தா்மத்தின் ஜீவ சக்தி. நடமாடும் தெய்வ வடிவம். வேத ஆகமங்களின் பிரதிபலிப்பு. காஞ்சி காமாட்சியின் தலைமகன்.
இந்து தா்ம பூமி மேலும் தழைத்தோங்க அந்த ஞான குருவே வழிகாட்டி.
🕴️🕴️🕴️🕴️🕴️🕴️🕴️🕴️
Comments
Post a Comment