*“உள்ளுணர்வு சொல்வதை..”*
அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள். உங்களுக்குப் பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்களாம்.
ஊருக்குச் செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக் கொள்வார்கள். எந்த ஊருக்குப் போக வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..,.
அது போல ஏதோ சோற்றுப் பாட்டிற்கு வேலை என்று, ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எல்லாம் சரி தான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர்.
வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையைக் கேட்டுப் பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த உலகம் நம் காதுபட சதா சொல்லி கொண்டு இருக்கிறது. அரசாங்க வேலைக்குப் போ…. நிறைய சம்பளத்துடன் மற்ற வகையில் நிறைய கிம்பளம் கிடைக்கும் என்று..
நல்ல இடத்தில் இருந்து பெண் கொடுப்பார்கள். சொந்தத் தொழில் இறங்கு. ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். நமக்கோ வாலிப வயசு, அனுபவமோ இல்லை. பெரியவர்களைச் சார்ந்தே பழகி இருக்கிறோம்.
எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்துக் கொள்கிறோம்.
பின் கொஞ்ச நாளில் நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன், இங்கே என்ற கேள்வி ஆத்ம சோதனை ஆக எழுகிறது. என்ன சாதிக்கிறேன், இதில் என்ற கேள்விக்குறி நம்மை வாட்டுகிறது.
இந்த செக்கு மாட்டு வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை, என் மனம் இதில் இல்லை. என் திறமைக்கு இங்கு வழி இல்லை என்ற எண்ணம் கோபமாக எழுகிறது.
உள்ளுணர்வால் உந்தப்பட்டு தன் வாழ்நாளில் தன் துறையைத் தேர்ந்தே எடுத்துக் கொள்பவர்கள், ஆத்ம திருப்தியை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
தன்னை நம்புகிறார்கள், தன் காலில் நிற்கிறார்கள். தன்னால் சாதிக்க முடியும் என்ற பெருமையில் வாழ்கிறார்கள்.
தனக்கும், பிறருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன்படுகிறார்கள். அவர்கள் சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை.
சவால்களும், சோதனைகளும் தான் மனிதனது முழுத் திறமையை வெளியே கொண்டு வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.
*ஆம்,நண்பர்களே,*
*நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்.உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு அதன்படி நடங்கள்.*
*உங்கள் உள் மனம் கூறுவதைக் கவனியுங்கள்.*
*எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உங்களை எவ்வழியில் செல்ல உந்துகிறதோ அதன்படி நடங்கள்.,.🌺🙏🏻🌹*
Comments
Post a Comment