*உங்கள் பூஜையறையில் கற்பூரம் ஏற்றுவதுண்டா? இறைவனுக்காக காட்டப்படும் கற்பூர ஆராதனையை, முறைப்படி இப்படி காட்டினால் மட்டுமே முழுமையான பலன்!*
*இறைவனுக்காக படைக்கப்படும் எல்லாப் பொருளும் இறைவனை முழுமையாக சென்றடைவது இல்லை. அதாவது இறைவனுக்கு படைத்துவிட்டு, அதன் பின்பு அதை நாம்தான் பயன்படுத்திக் கொள்கிறோம். பிரசாதமாக இருந்தாலும், வெற்றிலை, பாக்கு, பழம் எதுவாக இருந்தாலும் சரி. ஊதுவத்தியில் கூட சாம்பல் மிச்சம் இருக்கிறது. ஆனால் கற்பூரம் ஒன்று மட்டுமே அக்கினியில் எரிந்து கரைந்து, இறைவனை முழுமையாக சென்று அடைகின்றது. இப்படி இருக்க, இந்த கற்பூர ஆராதனையை முறைப்படி, நாம் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?*
*கற்பூர ஆராதனையை முறைப்படி எப்படி செய்தால், வீட்டில் சுபிட்சம் உண்டாகும்,* *வீட்டிலுள்ள தரித்திரம் அனைத்தும் நீங்கும், என்பதை பற்றியும், அந்த இறைவனின் அருளை முழுமையாக பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.*
*சில பேரது வீட்டில், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை கற்பூர ஆராதனை இறைவனுக்காக காண்பிப்பார்கள். சில வீடுகளில் தினம்தோறும் கற்பூர ஆராதனையை அந்த இறைவனுக்காக காட்டப்படும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். எப்படி இருந்தாலும் சரி. முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் கற்பூர தீபத்தை ஏற்ற வேண்டும். அதன் பின்பு பூஜை அறைக்குள் இருக்கும் இறைவனின் திருவுருவப் படத்திற்கு ஆரத்தியை காண்பித்து விட்டு, அதன் பின்பு உங்கள் வீட்டு சமையலறைக்கு காண்பிக்க வேண்டும்.(கேஸ் பக்கத்தில் கற்பூர ஆரத்தியை கொண்டு போய் விடாதீர்கள்.)*
*🌹பக்தியுடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்*
*அதன் பின்பு உங்கள் வீட்டில் எத்தனை அத்தனை அறைகள் உள்ளதோ, அவை அனைத்திற்கும், கற்பூர தீபத்தை காண்பிப்பது தான் சரியான முறை. இறுதியாக உங்கள் வீட்டு நில வாசற் படிக்கு வெளியில் சென்று நின்று, வீட்டின் உள் பக்கம் பார்த்தவாறு, உங்கள் நில வாசற்படிக்கு மூன்று முறை ஆரத்தியை காட்டி, சூரியபகவானுக்கும் மூன்று முறை கற்பூர ஆரத்தி காட்டி, அதன் பின்பு வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் திரும்பவும் மூன்று முறை ஆரத்தி காட்டி உங்களது தீப ஆராதனையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.*
*இறுதியாக, எந்த இடத்தில் எல்லாம் தீப ஆராதனை காட்டி வந்தீர்களோ அந்த இடங்களில்* *எல்லாம், தீர்த்தம் விட வேண்டும். இதுதான் சரியான முறை. இதேபோல் சிலருக்கு இந்த கற்பூர ஆரத்தியை வீட்டிற்கு வெளியில் கொண்டுபோய் காமிக்கும் போது, காற்றினால் தீபம் அணைந்து விடும். இதை அபசகுணம் என்று கருதவேண்டாம்.*
*காற்றில் தீபம் அனைவது இயற்கை தான். இதில் வறுத்த படுவதற்கு எதுவும் இல்லை என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனதார தவறு செய்யாத எவர் ஒருவரையும் அந்த கடவுள் எதற்காகவும் தண்டிக்க மாட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த முறைப்படி வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டி வருவதன் மூலம் வீட்டில் எந்த இடத்திலும் கெட்ட சக்தி தங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடைய வீட்டில் லட்சுமி தேவிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கான முக்கியத்துவத்தை அன்னலட்சுமிக்கும் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.*
*🌹பக்தியுடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்*
*இதேபோல் சிலருக்கு மந்திரத்தை உச்சரித்துவிட்டு, கற்பூர ஆரத்தி காட்ட வேண்டுமா? அல்லது கற்பூர ஆரத்தியை காண்பித்த பின்பு மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமா? எந்த சந்தேகமும் இருந்து வருகிறது. முதலில் மேல் குறிப்பிட்டுள்ள முறைப்படி கற்பூர ஆரத்தியை காட்டி முடித்து விட்டு, அதன் பின்பு அமர்ந்து மந்திரத்தை உச்சரியுங்கள். இறுதியாக ஒருமுறை கற்பூரத்தை ஏற்றி உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்திற்கு மட்டும் தீபத்தை காண்பித்து பூஜையை நிறைவேற்றி கொள்வதே சரியான முறை.*
Comments
Post a Comment