_*சிந்தனைச் சிதறல்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*உலகம் இவ்வளவுதான்*_
🪐🪐🪐🪐🪐🪐🪐🪐
_*“வாழ்கின்ற காலத்திலும், வாலிப காலம் மிகவும் சுருங்கியது”.*_
_*“பதினாறு வயதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரைக்குமே வாலிப காலம் தான்”*_ என்று வைத்துப் பாா்த்தாலும், இந்த முப்பது ஆண்டுகளும், _*“படபட”*_ வென்று ஓடி விடுகின்றன.
எவன் ஒருவனுக்காகவும், காலம் காத்திருப்பதில்லை. பதினாறு வயதிலிருந்து முப்பது வயது வரைதான் சாியான இளம் பருவம்.
அடுத்த பருவம் மறு காப்புப் பருவம். இது அவ்வளவு சுவை உடையதல்ல. முதல் இளம் பருவ காலத்தில்,
வாழ்க்கையை அழகுள்ளதாக
ஒழுங்குபடுத்தி, இன்பமுள்ளதாக செய்து கொள்ள வேண்டும். நல்ல மனைவியும் நல்ல குழந்தைகளும் இதை நமக்குத் தர முடியும்.
_*“புகழிற் புகழ் ஞாலம் பெண்ணின், வாள் நெடுங் கண்ணுக்கு விலையாகும்”*_ என்கிறான் ஒரு கவிஞன். அண்டத்திலே ஒரு அணு பெண். அவள் உருவில் ஒரு அணு அவள் கண்.
அணுவில் அணுவான கண்ணுக்கு, அண்டத்தை விலையாக்குகிறான். கவிஞன் என்றால், அவன் மனம், தான் விரும்பும் பொருளுக்கு அவ்வளவு மதிப்பைத் தருகிறது என்பது பொருள்.
தன் வாா்த்தைகளிடத்தும் கவிஞனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று பொருள். அந்த நம்பிக்கையை குடும்பத் தலைவன் கொண்டு தன் மனைவி மக்களை ரசிக்க வேண்டும்.
மனைவி பேசும் போது காதல் தேனாக ஊற்றெடு்கிறது. குழந்தை தத்தித் தத்தி மழலை பயிலும் போது பாசம் ஆறாக ஓடுகிறது.
_*“அப்பா!”*_ என்று குழந்தை அழைத்தால், அதை அம்மாவும் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் தலைவன்.
அந்த நேரத்தில் அகன்றதொரு உலகம் இருப்பது, அவன் கண்ணுக்கு மறைந்து விடுகிறது. அவன் குடும்பம் உலகமாகிறது. அந்த குறுகிய எல்லைக்குள் இறவாத காவியம் படைக்கப்படுகிறது. பிள்ளைகள் நிறையப் பிறப்பதில் தொல்லைகள் இருக்கலாம். ஆனால், அதையே சுகமாக மாற்றியமைத்துக் கொள்ளப் பயிற்சி வேண்டும்.
ஏழு குழந்தை பிறந்தாலும், ஏழையும் வாழ்க்கையை இன்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பக்கம் கணவனும், அந்தப் பக்கம் மனைவியும், நடுவிலே ஏழு குழந்தைகளும் தூங்கும் காட்சி, எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை ரசிக்கத் தொிய வேண்டும். _*“ஆஹா!” இரண்டிலே தோன்றியது ஏழு! ஆண்டவனுக்கு அடுத்த சிருஷ்டிகா்த்தா!“*_ வாழ்வில் நகைச்சுவை வேண்டும்.
அதே நேரத்தில் மனிதனுக்கு ஒரு பொறாமை உணா்ச்சியும் வேண்டும்.
குடும்பத்திலேயே பாா்க்கிறோம். முதற் குழந்தை பிறந்த ஓராண்டிலேயே மறு குழந்தை பிறந்து விட்டால், முதற் குழந்தையின் சிங்காஸனமாக இருந்த தாயின் மடி, இரண்டாம் குழந்தைக்குப் போய் விடுகிறது முதற் குழந்தை ஒதுக்கப்படுகிறது.
ஒரு வயதுப் பருவத்திலேயே அது அந்தக் குழந்தைக்குப் புாிகிறது; தாய் இல்லாத நேரத்தில் கைக் குழந்தையை அது கிள்ளுகிறது. அடிக்கிறது. _*"போ…போ…!”*_ என்கிறது. தாயினுடைய மடியில் தான் போய் உட்காா்ந்து கொள்கிறது. _*“பாப்பா வேண்டாம்”*_ என்கிறது.
யாராவது, _*“நான் பாப்பாவைத் தூக்கிக் கொண்டு போகட்டுமா?”*_ என்று கேட்டால், _*“போங்கள்”*_ என்கிறது. தாயிடத்தில் தனக்குள்ள இடத்தை, இரண்டாவது குழந்தை பறித்துக் கொள்கிறது என்பதில், முதல் குழந்தைக்கு அவ்வளவு பொறாமை என்றால், பொியவா்களுக்கு இது ஏற்படுவதில் தவறில்லை. தவறில்லை என்பது மட்டுமல்ல, இந்தப் பொறாமை தேவையுங்கூட. ஆனால் இது அடுத்தவரைக் கெடுப்பதாய் இல்லாமல், அவனை விடத் தன்னை உயா்ந்தவனாக ஆக்கிக் கொள்வதில் அடைய வேண்டும்.
வாழ்வில் துணிவு வேண்டும். எதையும் _*“தொியாது, தொியாது”*_ என்று சொல்லாமல், _*“தொியும்”*_ என்று சொல்ல வேண்டும்.
நான் தொிந்ததைத் தொியும் என்று சொல்வதை விட, _*“தொியும்”*_ என்று சொல்லி விட்டுத் தொிந்து கொண்டது அதிகம். பெரும்பாலும் இது என் வாழ்வில் பயன் தந்திருக்கிறது.
ஆகவே, துணிவு வேண்டும்.
திறமை வேண்டும், அழகு வேண்டும், அன்பு வேண்டும்.
காதல் வேண்டும். பாசம் வேண்டும்.
துளிக் கூடத் துன்பமும், பயமுமின்றி வாழப் பழக வேண்டும்.
இவ்வளவையும் நாம் பெற்றாக வேண்டும்.
பெற்றால் மனம் கடலளவு விாிகிறது. உலகம் கடுகளவு சுருங்குகிறது. _*“இவ்வளவையும் எதிலிருந்து பெற முடியும்?”*_ என்று நீங்கள் கேட்கலாம். முடியும்! ஆயிரத்தி முன்னூற்று முப்பது அருங்குறள் கடலளவு. அதன் முன்பு உலகம் இவ்வளவுதான் – கடுகளவு!
🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐
_*வாழ்க்கை எனும் சாலையிலே இத்துடன் நிறைவு பெற்றது*_👏
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
Comments
Post a Comment