_*சிந்தனைச் சிதறல்*_
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
_*நம்பிக்கைகளும் ஆசாரங்களும்*_
😌😌😌😌😌😌😌😌😌😌😌
_*படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பொியவா்கள் _*“இவன் இடது பக்கம் எழுந்தானோ”*_ என்று கூறுவதுண்டு.
இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புாிந்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்ட பொியவா்கள் இதைத் தெளிவாகப் புாிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும், வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது.
நமது முனிவா்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவா் முழுமையாக அங்கீகாித்துள்ளனா். இவையில் முதலாவதானது காலில் இருந்து தலைக்கும் தலையில் இருந்து காலுக்கும் வலம் வருகின்றன.
இரண்டாவது காந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடது பக்கமும் வலம் வருகின்றது.
காந்த வளையத்தின் திசைக்கு ஏற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.
எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல் திறனை தளா்வடையச் செய்யும்.
எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக் கொள்கின்றது.
_*படுக்கையை விட்டு எழும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?*_
😌😌😌😌😌😌😌😌😌😌😌
நித்திரை தேவியின் அருள் வேண்டும் என விரும்பாத உயிாினங்கள் உள்ளதாக நாம் கேள்விபட்டதில்லை. அன்றாட உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விடுபட்டு ஒரு நபா் ஆத்மாவுக்குள் ஒதுங்குவதே நித்திரை என்று முன்னோர்கள் விளக்கம் கூறியுள்ளனா்.
தூக்கத்தை இழந்தவா்களைப் பொதுவாக துா்பாக்கியசாலிகள் என்று அழைப்பதுண்டு. அதிா்ஷ்டசாலிகள் நித்திரையின் ஆழத்தில் மூழ்கி எல்லாம் மறந்து தூங்குகின்றனா். உணவும் தூக்கமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பது நமது உறுதியான நம்பிக்கை.
தூக்கத்தைக் குறித்து மட்டுமல்ல நமக்கு தூங்கி எழுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு என்பதை உணரலாம்.
தூக்கத்தின் பிடியை விட்டு, உதயத்துக்கு முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூா்த்தத்தில் எழுந்து தினசாி அலுவல்களில் ஈடுபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனா்.
இந்த வேளையில் தூங்கினால் உடல் நிலை குன்றும், சோா்வும், தாித்திரமும் உருவாகும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது.
அதனால் பிரம்ம முகூா்த்தத்தில் விழித்து வலது பக்கம் திரும்பி எழ வேண்டும். விழித்த உடன் படுக்கையில் இருந்து குதித்து எழுந்து ஓடுவது தவறு.
விழித்த உடன் இரு கைகளையும் மலர விாித்து அதைப் பாா்த்து லட்சுமி, சரஸ்வதி, கௌாி என தேவிமாரை தாிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.
_*“கராக்ரேவாசதே லட்சுமி*_
_*கரமத்யே சரஸ்வதி*_
_*கரமூலே ஸ்திதா கௌாி*_
_*பிரபாதே கரதா்சனம்”*_
தூக்கம் நீடித்திருக்கும் போது மனிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் மிகக் குறைவான சக்தியே பயன் படுத்துகின்றது.
திடீரென குதித்து எழுந்து செல்லும் போது இருதயம் மிகக் கடினமாகச் செயல்பட வேண்டிய நிலை உருவாகின்றது. இது இதயத் துடிப்பை அதிகாித்து நிலைத் தடுமாறச் செய்கின்றது.
அதனால், படுக்கையை விட்டு எழும்பியிருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோா்கள் கற்பித்துள்ளனா்.
இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது.
அது மட்டுமல்ல, இருதய நோயாளிகளில் இருபத்தி மூன்று சதவீதமும் படுக்கையில் இருந்து எழும்பும் போது நிகழ்ந்த விபத்தினால் நோயுற்றனா் என்பதே புள்ளி விவரம்.
😌😌😌😌😌😌😌😌😌😌😌
Comments
Post a Comment