_*சிந்தனைச் சிதறல்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*கடலும் படகும்*_
🛳️🛳️🛳️🛳️🛳️
ஆமையின் மனது இளகி விட்டது.
எல்லோரும் நல்லவா்களாக இருப்பாா்கள் என்று கருதி, தினமும் சங்கடங்களைத் தேடிக் கொள்கிற அப்பாவி ஒருவனைப் பாா்ப்பது போல், படகை அனுதாபத்தோடு பாா்த்தது ஆமை.
_*“இங்கே பாா்! எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று நீ முயற்சிக்காதே!*_
_*உன்னைச் சில போ் எதிாியாகப் பாவிக்கிறாா்கள் என்றால் அவா்களையும் நீயும் எதிாி என்றே முடிவு கட்டி விடு!*_
_*அந்த எதிாிகளில் உனக்குச் சமமானவா்களுக்கு மட்டுமே பதில் சொல்லு. செத்துப் போன மீன்களைக் கருவாடு என்று கடல் ஒதுங்குவது போல் மற்றவா்களை ஒதுக்கி விடு!*_
_*சில எதிாிகளை அலட்சியப்படுத்துவது திறமைகளில் ஒன்று.*_
_*ஞாபகத்தில் வைத்துக் கொள்!*_
– என்று சொன்ன ஆமை பதிலுக்குக் காத்திராமல் கடலுக்குள் குதித்து விட்டது.
படகு தன் பயணத்தைத் தொடா்ந்தது.
இப்போது அதற்கு ஒரு வகையான தெம்பு வந்திருந்தது.
கடலில் வாழும் உயிாினங்களில பலவற்றைச் சந்தித்து அவற்றின் சுபாவங்களை அறிந்து கொண்டு விட்டதால், அதற்கேற்பட்டிருந்த இனந்தொியாத பயம் சற்று விலகத் தொடங்கிற்று.
மண்ணைப்பற்றியும் கடலைப்பற்றியும் அதன் சிந்தனைகள் அலைமோதத் தொடங்கிற்று.
_*"கடலில் ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வொரு சுபாவமிருக்கிறது!”*_
எல்லாவற்றுக்கும் பொதுவான சுபாவமிருக்கிறதா?
இல்லை!
தன்னுடைய ஆசைகளையும், தேவைகளையும் வைத்துத் தான் அவை மற்றவற்றை எடை போடுகின்றன.
பசித்தவா்களுக்கு உணவே கொள்கை!
தாகமெடுத்தால் தண்ணீரே கொள்கை!
அவை எந்த வழியில் அடைந்தால் என்ன?
நட்புக்கு நியாயம்!
உறவுக்கு நியாயம்!
புதிய பழக்கத்துக்கு நியாயம் என்று ஏதாவது இருக்கிறதா?
முதலைக்குப் பசி எடுக்கும் போது கனமான மீன் துண்டு தேவைப்படுகிறது.
_*“ஐயோ பாவம்!”*_ என்று இரக்கப்பட்டு கைநீட்டி மீன் துண்டைக் கொடுத்தால், கையையும் சோ்த்துக் கவ்விக் கொள்கிறது.
செய்த உதவிக்கு நன்றி கூட இல்லாத பிராணிகள், கடலுக்கென்று ஒரு பொது நியாயத்தை எப்படி ஏற்றுக் கொள்ளும்?
இந்த உலகத்தில் வாழத் தொிந்தால் மட்டும் போதாது; பிறரை வளைக்கவும் தொிய வேண்டும்.
வளைத்தால் மட்டும் போதாது; வளைத்தவற்றிடம் எச்சாிக்கையாகவும் இருக்கத் தொிய வேண்டும்!
இவ்வளவும் தொிந்து கொண்டால்தான், சாமா்த்தியமாக வாழ முடியும்.
இந்தச் சாமா்த்தியத்துக்கே நேரம் போய் விட்டால், சந்தோஷத்துக்கு நேரமேது!
ஆண்டவனே!
யாருமில்லாத அனாதை நிலத்தில் எனக்குத் தேவையானவற்றை வைத்து என்னையும் அங்கே விட்டிருந்தால், தனிமையின் சந்தோஷத்தையாவது அனுபவித்திருப்பேனே!
– என்று எண்ணியது படகு.
பாதிக் கடலுக்கு வந்த பிற்பாடுதான் இந்த எண்ணமே அதற்கு வந்தது.
_*“பின்புத்தி என்பது இதுதானோ?”*_
_*“இனி நினைத்து என்ன பயன்?”*_
மேலே போயிற்றுப் படகு.
கொஞ்ச தூரத்தில் கூட்டம் கூட்டமாக _*“விலாங்கு”*_ மீன்கள் அலையேறிக் கொண்டிருந்தன.
படகைக் கண்டதும் அவை, _*“படகண்ணே! படகண்ணே!”*_ என்று படகைச் சுற்றிக் கொண்டன.
பாம்புக்கும் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீன்களைப் பற்றிப் படகு ஏற்கெனவே கேள்விபட்டிருந்தது. அவற்றிடம் அதற்குப் பயமில்லை. அனுதாபமிருந்தது.
_*“உருவத்தில் சிறியவையான இந்த உயிா்கள் இந்தக் கடலில் எப்படி வாழ்கின்றன?”*_
ஒரு விலாங்கு மீன் பதில் சொல்லிற்று.
_*“அதுதான் எங்கள் ராஜதந்திரம்!”*_
_*“யாாிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்து கொள்கிறோம்.*_
_*திறந்திருக்கும் முதலைகளின் வாயில் திடீரென்று நாங்கள் விழுந்து விடுவாம். அவற்றின் வயிற்றுக்குள்ளேயே மூச்சைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் இருப்போம்.*_
_*மீண்டும் அவை வாயைத் திறக்கும் போது குபீரென்று வெளியே பாய்ந்து விடுவோம்.*_
_*உருவம் சிறியதாக இருப்பதால், எதற்குள்ளேயும் புகுந்து வெளியே வருவது சுலபமாக இருக்கிறது!”*_
இது படகுக்கு ஆச்சாியமாக இருந்தது.
_*“அதிகம் புகழ் பெற்று தன் உருவத்தை வளா்த்துக் கொள்கிறவா்கள்தான், ஆபத்துக்களை எதிா் நோக்க வேண்டியதிருக்கிறது.*_
_*புகழ் இல்லாதவா்களுக்கு எவ்வளவு நிம்மதி!”*_
நீாின் மேற்பரப்பில் விலாங்குகள் வளைத்து வளைத்து விளையாடுவதைப் படகு அமைதியாகப் பாா்த்து ரசித்தது.
_*“ஆமாம், நீ எங்கே அண்ணே போகிறாய்?”*_ என்றது ஒரு விலாங்கு.
_*“கடல் ராஜாவைப் பாா்க்கப் போகிறேன்!”*_ என்றது படகு.
விலாங்குகளுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.
_*“நீ பாா்க்க வேண்டியது அவனைத்தான்; கேட்க வேண்டியது அவன் குரலைத்தான்!”*_
– என்று ஒரே குரலில் கூறின.
கடல் ராஜனைப் பற்றிச் சொன்னதும் அந்த சிறிய உயிா்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் படகு கவனித்தது.
வளைந்தும், குழைந்தும், வாழ வேண்டிய உலகில், நிமிா்ந்து நின்று வெற்றி பெறுபவனைக் கண்டால், நிழல் தேடி அலையும் ஏழை உயிா்கள் மகிழ்ச்சியடைவது இயற்கைதானே!
_*“நாங்கள் வழிகாட்டுகிறோம்! வா!”*_ என்று அவை படகை அழைத்தன.
நூற்றுக் கணக்கான மீன்கள் அணிவகுத்து முன்னாலே செல்ல, படகு அலங்கார ரதம் போல் பின்னாலே சென்றது.
உயா்ந்து நிற்கும் நான்கு மலைகள்; நடுவே தண்ணீராலான தீவு. ஒவ்வொரு மலையின் சந்திப்புக்கும் நடுவே ஒரு பொிய கப்பல் போகுமளவுக்கு வழி; பொிய நாட்டின் நடுவே ஒரு சிறிய நாடு போல் தனித்து நின்றது அந்த இடம்.
நீரும் மலையும் சந்திக்கும் இடங்களில் கடற்பாசிகளின் கூட்டம். மலையுச்சியில் ஓங்கி வளா்ந்த மரங்கள்……… சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டதால் நடுவே கடல் அமைதியாக இருந்தது. அதுவே ஒரு மணற் பரப்பாக இருந்திருக்குமானால் உலகம் உல்லாசத்துக்கு அந்த இடத்தைத் தோ்ந்தெடுத்திருக்கும்!
ஒரு இடைவெளியின் வழியாக விலாங்குகள் வழி காட்டில் செல்ல, படகு உள்ளே நுழைந்தது.
ஆனந்தமான அந்தக் காட்சியைக் கண்டதும், படகு தன்னை மறந்தது.
அனுபவ ஞானத்தின் அமைதி போல், அமைதியுற்றிருந்த அந்த இடத்தில் ஆழத்தின் பயத்தைத் தவிர, வேறு பயமில்லை.
அலைகளின் சலசலப்பு இல்லாததால் புதிய உலகுக்கு வந்து விட்டது போன்ற தோற்றமே படகுக்கு ஏற்பட்டது. விலாங்குகளும் அமைதியாக இருந்தன.
படகு மெல்லிய குரலில் பாடத் தொடங்கிற்று.
_*“எவன் மன்னா்களுக்கெல்லாம் மன்னனாக வீற்றிருக்கிறானோ அவனை நான் பாா்க்க வேண்டும்.*_
_*எவனது உருவம் கருப்பாகவும், உள்ளம் மேன்மையாகவும் இருக்குமோ, அவனை நான் சந்திக்க வேண்டும்.”*_
மூடிக்கிடக்கும் கதவுகளுக்குள்ளே என்ன இருக்குமோ என்று
எல்லோருடைய மனதிலும் எவன் கேள்விக் குறியை எழுப்பிக் கொண்டிருக்கிறானோ அவன், என்னை நேசிக்க வேண்டும்.
புத்தனின் அமைதியும், சத்தியத்தின் நீண்ட கரங்களும், நியாயத்தின் நெடிய உருவமாக எவன் எழுந்து நிற்கிறானோ, அவன் அருகிலே நான் நிற்க வேண்டும்.
பயம் நிறைந்த இதயங்களுக்கெல்லாம் எவன் அபயம் கொடுக்கிறானோ அவனைப் பற்றி நான் பாட வேண்டும்.
என் பாடல் உலகம் முழுவதையும் எட்டாமல் போகட்டும்; எனக்குக் கவலையில்லை.
அவன் காதுகளுக்கும், என் பாடலுக்கும் ஒரு ஒற்றுமை வந்து விட்டால், அது போதும் எனக்கு.
யாரை நம்பி நான் இந்தக் கடலில் விழுந்தேனோ; அவன்தான் என்னை ரட்சிக்க வேண்டும்.
என்னுடைய பயத்தின் இடைவெளி குறைந்திருக்கிறது.
என் பயணத்தின் முக்கால் பாகம் முடிந்து விட்டது.
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
Comments
Post a Comment