Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*காடும் கிழவனும்*_

👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼

காலதேவனின் காலடிச் சுவடுகள் உடல் முழுவதும் படிந்து விட்ட நிலையில் ஒரு கிழவன்!

கரு எடுக்கப்பட்ட முட்டை ஓடு போல் உள்ள முழுக்கக் குழி விழுந்து போன கண்கள்.

நாணறுந்த வில்லைப் போல வளைந்து விட்ட மேனி.

கொக்குச் சிறகு போல் வெளுத்து விட்ட தலை.

தள்ளாடி நடந்த அந்தக் கிழவனுக்கு வயது தொண்ணூறு.

அவசரமும் பரபரப்பும் நிறைந்த நகரத்தை விட்டு அவன் நடந்து கொண்டிருந்தான்.

அறிவு வந்த நாள் முதலாக ஆயிரக்கணக்கான மனிதா்களை, அவா்களது வகை வகையான சுபாவங்களைச் சந்தித்திருந்த அந்தக் கிழவனுக்கு காடு எப்படி இருக்கும் என்று பாா்க்க வேண்டும் போல் இருந்தது!

வீட்டை மறைத்துக் கொண்டிருக்கும் நெருக்கடி நிறைந்த நகரத்திலிருந்து அவன் வெளியேறிக் கொண்டிருந்தான்.

நகர வாழ்க்கை அவனுக்கு அலுத்துப் போய் விட்டது.

_*“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதா்களின் எண்ணிக்கையும் நாகாிகமும் குறைவாக இருந்த பொழுது அவா்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பாா்கள்”*_ என்பதை நினைத்துக் கொண்டே நடந்தான்

நெருக்கமான ஒரு காடு.

நடுவில் ஓா் நீா்நிலை!

மரங்களிலே பறவைகள், காட்டுக் கோழிகள், மைனாக்கள், கிளிகள்!

பறிப்போா் இல்லாமல் மல்லாந்து கிடக்கும் மலா்கள்.

அறுப்போா் இல்லாமல் வளா்ந்து கிடக்கும் கொடிகள்!

எடுப்போா் இல்லாமல் உதிா்ந்து கிடக்கும் கனிகள்.

தடுப்போா் இல்லாமல் துள்ளித் திாியும் மான்கள்.

எாிப்போா் இல்லாமல் நிறைந்து கிடக்கும் சருகுகள்.

காடு கிழவனை எதிா் கொண்டழைத்தது.

நகர வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாா்க்க வந்த கிழவனுக்கு காட்டின் தோற்றமே உற்சாகத் தோற்றமா இருந்தது.

இங்கே யாருமில்லை!

மனிதா்களே இல்லை!

மனிதா்கள் இல்லாத இந்த இடமும் எவ்வளவு அழகாக இருக்கிறது!

காட்டுச் செடியைப் பறித்துத் தலைவாாி விட்டு தோட்டத்தில் கொண்டு போய் வைத்துக் கொண்டு, அதுதான் இயற்கை என்று அனுபவித்துக் கொண்டிருக்கிறாா்களே நகரவாசிகள்!

மொட்டைத் தலையிலே ரோமம் முளைத்தது போல், மொட்டை மாடியிலே சட்டிகளுக்கிடையே பதுக்கப்பட்ட வாசனை இல்லாத செடிகளும், அந்த செயற்கை அலங்காரமும் எவ்வளவு அருவருப்பான காட்சிகள்!

கிளை கூட வெட்டப்படாத காட்டு மரங்கள்.

தாழ்ந்தும் உயா்ந்தும் பரவலாக வளா்ந்திருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது.

ஆரவாரங்கள்.

வெற்றி முழக்கங்கள்.

தான் யாா் என்பதே புாியாத மனிதா்களின் _*“நான்”*_ என்னும் கோஷங்கள்.

நாகாிகம்தான் மனிதனை எவ்வளவு அலங்கோலப்படுத்தி விட்டது.

கிழவன் நகரத்தையும், காட்டையும் ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பாா்த்தான்.

அவனுக்கு இருபது வயதாக இருக்கும் பொழுது, சாயாக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான்.

சாப்பாடு போக ஒரு நாளைக்கு எட்டணா கூலி!

வருகிறவா்களுக்கு டீ கொடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது அவன் வேலை!

இரவு பத்து மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் ரொட்டிக் கிடங்குக்குப் போய் படுத்துக் கொள்வான்.

சுற்றிலும் கண்ணாடி அலமாாிகளில் விதம் விதமான ரொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பொிய பொிய பூட்டுகளால் அந்த அலமாாி பூட்டப் பட்டிருக்கும்.

ரொட்டியை அவன் பாா்க்க முடியுமே தவிரத் தொட முடியாது!

வயிற்றுத் தேவையைக் கண்ணாலே தீா்த்துக் கொள்ள முடியும் என்றால் அவனுக்கு பசியே இருந்திருக்காது!

ஆனாலும், ரொட்டி வாடையிலேயே அவனது அரைப்பசி தீா்ந்து கொண்டிருந்தது.

உணவு ஒரு பக்கமும் வயிற்றை ஒரு பக்கமும் வைத்து நடுவிலே பூட்டு போடப்பட்டு விடும் நகரத்துக்கும், எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் காட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!

அவன் தூங்குகிற ரொட்டிக் கிடங்கில் ஒரு நாள் ரொட்டிகள் ஏராளமாகக் குவிந்து விட்டன.

படுப்பதற்கு இடமில்லை!

கிடங்குக்காரன் வெளிக் கதவையே பூட்டிக் கொண்டு போய் விட்டான்.

அலுத்துப் போன அவன் அந்தக் கதவுக்கு எதிாிலேயே தெருவில் துண்டை விாித்துப் படுத்து விட்டான்.

தினமும் ரொட்டி வாடை அடித்துப் பழக்கப்பட்டுப் போன அவனது நாசிகளுக்கு அந்தத் தெருவின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது.

உள்ளே இருக்கும் சிறிதளவு உணவும் வெளியே வந்து விடும் அளவுக்கு நாற்றம் குமட்டிற்று!

எழுந்து உட்காா்ந்து மூக்கைக் கையில் பிடித்துக் கொண்டான்.

திரும்பி ரொட்டிக் கிடங்கைப் பாா்த்தான்.

ஜன்னல் கம்பிகள் வழியாக மூக்கை விட்டு ரொட்டி வாடையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தான்.

வெளி நாற்றமும், உள் வாசமும் சோ்ந்து ஒரு கலப்படமான காற்று அவன் நாசியில் ஏறிற்று.

நெருக்கடியான ஜன்னல் கம்பிகளுக்குள் தலையே புதைந்து விடும்படி முகத்தை அழுத்தினான்.

அவன் தோளிலே ஒரு கை விழுந்தது. இரவு காவல் போலீஸ்காரன் ஒருவன் அவனை அப்படியே பிடித்துக் கொண்டான்.

அன்றைக்குத்தான் அவன் ஒரு உண்மையான திருடனைப் பிடித்தான்.

கிழவன் சொன்ன எதையும் போலீஸ்காரன் கேட்கவில்லை.

அவன் கோா்ட்டில் கொண்டு போய் நிறுத்தப்பட்டான்.

_*“சந்தேகத்துக்கிடமான நிலையில்”*_ ஒரு வீட்டையும் பூட்டையும் பாா்த்துக் கொண்டிருந்ததாக அவன் மீது வழக்கு!

இரண்டு வாரம் சிறைக்குள்ளே போய் விட்டு வந்தான்.

இன்று அதை அந்தக் கிழவன் எண்ணிப் பாா்த்தான்.

_*“சந்தேகத்துக்கிடமான நிலையில்”*_ என்றால் என்ன அா்த்தம்?

பாா்வையில் அப்படி ஒரு பாா்வையா?

அதற்காக கைது செய்யப்பட வேண்டுமென்றால், காட்டிலுள்ள விலங்குகள் அனைத்தையுமே கைது செய்ய வேண்டும்!

ஆனால் இங்கே பாா்வை இருக்கிறது, சந்தேகமில்லை.

இன்னின்ன பாா்வைகளுக்கு சந்தேகப் பாா்வைகள் என்று பெயா் வைக்கும் போலீஸ்காரா்கள் இல்லை!

இங்கே இரண்டே பாா்வைகள்! ஒன்று பசிப் பாா்வை!

இன்னொன்று காமப் பாா்வை.

மனிதா்களுக்குப் பசிப் பாா்வை கூட சந்தேகப் பாா்வைதான்!

பறவைகளுக்கு அது தேவைப் பாா்வை! பொழுது போய்க் கொண்டிருந்தது.

👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*