Skip to main content

*செப்டம்பர் -05:*

*வ.உ.சி. பிறந்த நாள்.*

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!

அதிலும் கோவை சிறைதான், வ.உ.சி.க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே… கை, கால்களைக் கட்டி தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர்..!

வ.உசி.க்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தம் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வ.உ.சி.யை அடைத்துவைத்தனர்..!

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்துப் போயிருந்தது.. சில சமயம் அந்தக் கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வ.உ.சி.. அதற்காக 3 நாளைக்கு, அந்தக் கூழைக்கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வ.உ.சி.க்கு தரப்பட்ட முதல் வேலை… அப்படி செய்ததால், வ.உ.சி.யின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதைப் பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்..

ஆனால் அந்தக் கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்… பிறகு, கையால் செய்யும் வேலைகளைத் தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்குப் பதில் வ.உ.சி.யை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கிக் கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!

வ.உ.சி.யின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்குமேல் 2 கைகளையும் கூப்பி “வணக்கம் ஐயா” என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

வ.உ.சி. விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸை பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசிக் கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்குப் போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக்கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!

அரை வயிற்று கஞ்சிக்குக்கூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்…!

இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வ.உ.சி. கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வ.உ.சி..!

வ.உ.சி. குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்.. “எப்படியாவது வ.உ.சி.யிடம் இந்த பணத்தைச் சேர்த்துவிடுங்கள்” என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தனர்..!

ஆனால் அந்தப் பணத்தை காந்தி, வ.உ.சி.க்குத் தரவே இல்லையாம்.. “காந்தி கணக்கு” என்று நாம் சொல்கிறோமே.. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்தப் பணத்தை வ.உ.சி.க்குப் பெற்று தந்தது தனிக் கதை)

வ.உ.சி.க்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்தக் கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது.. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும்கூட… அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!

உண்மையைச் சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்தக் கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வ.உ.சி..!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வ.உ.சி.க்குதான் உண்டு..!

இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்கக் கூடியவர் வ.உ.சி.. ஆனால், வ.உ.சி.யின் வரலாற்றை மறைத்துவிட்டு வாஞ்சிநாதனை பிரதானப்படுத்த காரணம் என்ன?

1806-ல் வேலூர் புரட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, 1857-ல் வந்த சிப்பாய்க் கலகத்தை பெரிதுபடுத்த காரணம் என்ன?

ஒன்று மட்டும் விளங்குகிறது.. எப்பேர்ப்பட்ட தியாகத்தையே செய்திருந்தாலும், அதைத் தீர்மானிப்பது இந்திய அரசியலின் “சாதி” தான்..!

இனியாகிலும் “வ.உ.சி. கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்” என்பதை மட்டுமே சொல்லிச் சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதிக் கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்பச் செய்ய வேண்டும்..!

தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!

– ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*