உடம்பின் நடுப்பகுதி வயிறு.
அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.
இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.
😊
தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும்.
😊
ஒரு மனிதன்
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த நாற்பது.
😊
நிறைய வேலை செய்வதால்
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.
😊
என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான்
மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.
😊
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை
சீராக நிறைவேற்றுங்கள்.
😊
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
😊
தினசரி மத்தியானம்
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.
😊
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.
😊
ஆண்டவனை நினையுங்கள்.
இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.
நான் தப்பு பண்ண விடாதே அப்பா.“
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
😊
முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.
😊
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
பென்ஷன் வாங்கலாம்.
😊
ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.
😊
அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் .
Comments
Post a Comment