Skip to main content

*தமிழுக்கு தேன் என்றொரு பெயர் உண்டு.*

*காரணம் ஏன் தெரியுமா?*

*தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து,

நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார்.

அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை…

ஐயா நீங்கள்

கூறியதை நினைத் *தேன்*

கொல்லிமலைக்கு நடந் *தேன்*

பல இடங்களில் அலைந் *தேன்*

ஓரிடத்தில் பார்த் *தேன்*

உயரத்தில் பாறைத் *தேன்*

எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*

கொம் பொன்று ஒடித் *தேன்*

ஒரு கொடியைப் பிடித் *தேன்*

ஏறிச்சென்று கலைத் *தேன்*

பாத்திரத்தில் பிழிந் *தேன்*

வீட்டுக்கு வந் *தேன்*

கொண்டு வந்ததை வடித் *தேன்*

கண்டு நான் மகிழ்ந் *தேன்*

ஆசையால் சிறிது குடித் *தேன்*

மீண்டும் சுவைத் *தேன்*

உள்ளம் களித் *தேன்*

உடல் களைத் *தேன்*

உடனே படுத் *தேன்*

கண் அயர்ந் *தேன்*

அதனால் மறந் *தேன்*

காலையில் கண்விழித் *தேன்*

அப்படியே எழுந் *தேன்*

உங்களை நினைத் *தேன்*

தேனை எடுத் *தேன்*

அங்கிருந்து விரைந் *தேன்*

வேகமாக நடந் *தேன்*

இவ்விடம் சேர்ந் *தேன்*

தங்கள் வீட்டை அடைந் *தேன்*

உங்களிடம் கொடுத் *தேன்*

என் பணியை முடித் *தேன்*

என்றார்..!

அதற்கு …*தேன்* பெற்றவர்

தேனினும், இனிமையாக உள்ளது உமது விடை..

இதனால் தான்

நம் முன்னோர்கள் தமிழைத்

தமிழ்த் *தேன்* என்று உரைத்தரோ… எனக் கூறி மகிழ்ந் *தேன்* என்றார்.

படித் *தேன்..*

படித்ததில் சுவைத் *தேன்*

உடனே

பகிர்ந் *தேன்*

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*