செய்வதை துணிந்து செய்
சொல்கிறார் #பாரதி
டிசம்பர் 11 பிறந்த நாள்
• எந்தவொரு செயலை எடுத்தாலும். துணிந்து செய்.
• திறமை உள்ளவரிடம் பணியாளராக இருந்தாவது தொழிலை கற்றுக் கொள்
• கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.
• அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்து விட்டால் இன்பம் மறைந்து விடும்.
• அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கி விட்டால், நரக துன்பத்தை அனுபவிக்கும்நிலை உண்டாகும்.
• துன்பம் வரும் போது, கட்டுப்பாடு எனும் கடிவாளத்தால் மனதை இழுத்துப் பிடித்துக் கொள்.
• பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.
• அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும். தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும்.
• ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவரவர் கையில் தான் இருக்கிறது.
• வைரம் போல உடலை உறுதியாக மாற்று.உடல் வசப்படாவிட்டால் வாழ்வு நரகமாகி விடும்.
• ஒரு செயலை துவங்கும் போது அதன் பயன் இன்னதென்று தெரிந்தே செய்ய வேண்டும்.
• பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என மனதால் நினைத்தாலும் பாவம்.
• நல்லவரின் நட்பு, ஒருவனை அறியாமையில் இருந்து அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
• கடவுள் அறிவுக் கடலாக இருக்கிறார். அக்கடலில் நாம் ஒரு நீர்த்துளியாக இருக்கிறோம்.
******
அச்சம் தவிர்-நய்யப் புடை
மானம் போற்று-ரவுத்திரம் பழகு
ஆண்மை தவறேல்- தாழ்ந்து நடவேல்
சூரரை போற்று- தீயோர்க்கு அஞ்சேல்
ஓய்தல் ஒழி-நேர்பட பேசு
தாழ்ந்து நடவேல் -சாவதற்கு அஞ்சேல்
காலம் அழியேல்- கீழோர்க்கு அஞ்சேல்
போர் தொழில் பழகு -தோல்வியில் கலங்கேல் புதியன விரும்பு – வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு- உண்மைக்கு அஞ்சேல்
வெடிப்பற பேசு – நன்று கருது
வவ்வுதல் நீக்கு -தவத்தினை நிரப்பு நீ
கற்றது ஒழுகு -கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல்-பேய்களுக்கு அஞ்சேல்
ஞாயிறு போற்று-மந்திரம் வலிமை
சவுரியம் தகுமே -எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்
#ksrpost
11-12-2022.
Comments
Post a Comment