கடக்கும் தொலைவு
நீண்டதாக இருந்தாலும்
சுங்கச் சாவடியில்லாதது
தமது பயணத்தில்
சுகமாக இருந்ததாய்
சந்திராயன் சொன்னான்
பள்ளம் மேடான
சாலைகள் கூட
நிலாவை அடையும் வரை
எங்கும்
பார்க்கவில்லையென
அவன் சொன்னது
அதிசயமாய் இருந்தது
சிறுநீர் கழிக்க
ஐந்து ரூபாய் வசூலிக்கும்
சாலையோர
சிற்றுண்டி விடுதிகள்
ஒன்றுகூட
காணவில்லை என
சந்திராயன் சொன்னது
சரித்திர முக்கியத்துவமானது
வழியில் காசு வாங்க
ஒரு கடவுள் கூட
உண்டியல்
வைத்திருக்கவில்லை
எனச் சொன்னது
நம்ப முடியாத ஆச்சரியம்
அனைத்து
ஆவணங்களும்
சரியாக இருந்தும்
போக்குவரத்து விதி
மீறலென போலீஸ்
பிடிக்காததை
சந்திராயன் சொல்லி
சிரித்தான்
செல்கிற வழிகளில்
விண்வெளி
இடங்களை
வீட்டு மனைகளாக்கி
விலை பேசி விற்க
ரியல் எஸ்டேட்
நிறுவனங்களின்
அறிவுப்பு பலகையை
பார்க்காதது
சந்திராயனுக்கு ஷாக்
உற்சாக பானம்
அருந்திவிட்டு
உருண்டு புரண்டு கிடக்கும்
எந்த பரமாத்மாக்களையும்
தான் செல்லும்
வழியில் பார்க்காதது சந்திராயனுக்கு சற்று
சௌகரியக்குறைவுதான்
நிலவின்
தென்துருவத்தில்
இறங்கி
வெகு நேரமாயிற்று
இன்னும் கூட
பாட்டி வந்தபாடில்லை
பேரப்புள்ளையை
ஆரத்தி எடுக்க
என வருத்தம் வேறு
அவனுக்கு
ஆங்காங்கே இரைந்து
கிடக்கிறது
அவளது கன்னக்குழியில்
கால் வைத்த
சந்திராயன் எடுத்த
புகைப்படத்தில்
அவள் சுட்ட வடைகள்..
Comments
Post a Comment