Skip to main content

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மந்திரம் சொல்லி கூப்பிடுங்கள் அன்னை சரஸ்வதியின் அருள் கிடைக்கும்

 சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினமே வீடு வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத்தூய்மை செய்து கொள்ளவும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.

பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள் பேனாக்கள் பணப்பெட்டி முதலியவற்றை வைத்து முன்போல் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன்மீது வீட்டு உமயோகக் கருவிகளாகிய அரிவாள்மனை கத்தி அரிவாள் கடப்பறை மற்றும் ஆயுதங்களைக்கழுவி வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.

விவசாய உபயோகக் கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே வைத்துக் கழுவி அலங்கரிக்கலாம். மாடு கன்றுகளையும் அதன் தொழுவத்திலேயே குளிப்பாட்டி சந்தனம் குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களையும் அவ்வாறே தூய்மை செய்து அலங்கரிக்கவும். குங்குமம் சந்தனம் விபூதி உதிரிப்பூக்கள் பூச்சரங்கள் மாலைகள் பொரிகடலை சர்க்கரை சுண்டல் இனிப்புவகைகள் பழங்கள் வெற்றிலைப் பாக்கு சூடம் பத்தி சாம்பிராணி குத்து விளக்குகள் கைமணி தீர்த்த பாத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளவும்.

பூஜைக்கு ஏற்றாற் போல் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு விளக்கேற்றி மணியடித்து பூஜையைத் துவக்கவும். மஞ்சள் பொடியில் அல்லது பசுசாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்பில்லினால் 'ஓம் கணபதயே நமஹ' என்று அர்ச்சனை செய்து தூபம் காட்டி பழம் வெற்றிலைப் பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும்.

கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம்.

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நாளைய தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. ஆயுதங்களுக்கு பூஜை செய்வதற்குரிய முகூர்த்த நேரமாக அக்டோபர் 23 ம் தேதி பகல் 12.30 முதல் 2 மணி வரை நல்ல நேரமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை செய்ய மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நல்ல நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களின் படிப்பு தொழில் வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க சரஸ்வதிபூஜையும் ஆயுதபூஜையும் விநாயகரிடம் வேண்டிக் கொண்டு முதலில் புத்தகங்களை பூக்களால் 'ஓம் ஸ்ரீஸரஸ்வதி தேவ்யை நமஹ' என்று அர்ச்சிக்கவும். எழுதுகோல்களில் 'ஓம் லேகினீ சக்தயே நமஹ' என்றும், அரிவாள் அரிவாள்மனை கத்தி இவைகளை 'ஓம் கட்கினீ சக்தயே நமஹ' என்றும், மண்வெட்டியில் 'ஓம் குந்தாளி சக்தயே நமஹ' என்றும், ஏர்கலப்பையில் 'ஓம் ஹலாயுத சக்தயே நமஹ' என்றும் வணங்கலாம்.

பசுமாட்டை 'ஓம் கோமாதா தேவ்யை நமஹ' என்றும், காளையை 'ஓம் ரிஷபதேவாய நமஹ' என்றும், இருச்கர நான்குசக்கர மற்றும் மாட்டுவண்டிகளை 'ஓம் த்வரிதா சக்தயே நமஹ' ஓம் சகட தேவதாயை நமஹ என்றும் வணங்கலாம். வாசல் நிலை, கதவுகள் ,ஜன்னல்கள் எங்கும் 'ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்ம்யை நமஹ' என்றும், இயந்திரங்கள் மோட்டார்கள் எல்லாவற்றிலும் 'ஓம் ஸ்ரீதுர்க்காதேவ்யை நமஹ' என்றும் அர்ச்சனை செய்து மணியடித்தவாறு சாம்பிராணி தூபம் எங்கும் எல்லாவற்றிற்கும் காட்டவும்.

ஒருதட்டில் நிவேதனப் பொருட்களை வைத்து எடுத்துக்கொண்டு எங்கெல்லாம் பூஜை செய்தீர்களோ அங்கெல்லாம் சென்று மணியடித்தவாறு நீரினால் மூன்றுமுறைச்சுற்றி நிவேதனம் செய்து விட்டு புத்தகங்கள் எழுதுகோல்கள் ஆயுதங்களுக்கும் நிவேதனம் செய்யவும். தேங்காய் உடைத்து பழம் வெற்றிலைப் பாக்குகளுடன் நிவேதிக்கவும். பிறகு சூடம் ஏற்றி புத்தகங்கள் துவங்கி முன்போல் மணியடித்தவாறு எல்லாவற்றிற்கும் தீபாராதனை செய்து வழிபடவும்.

*🙏🕉️சரஸ்வதியை 108 போற்றி கூறி வணங்கலாம்*🕉️🙏

ஓம் அறிவுருவே போற்றி

ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி

ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி

ஓம் அறிவுக்கடலே போற்றி

ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி

ஓம் அன்ன வாகினியே போற்றி

ஓம் அகில லோக குருவே போற்றி

ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி

ஓம் ஆசான் ஆனவளே போற்றி

ஓம் ஆனந்த வடிவே போற்றி

ஓம் ஆதாரசக்தியே போற்றி

ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி

ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி

ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி

ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி

ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

ஓம் கலை ஞானச் செல்வியே போற்றி

ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

ஓம் குணக் குன்றானவளே போற்றி

ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

ஓம் சாந்த சொரூபினியே போற்றி

ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

ஓம் சாரதாம்பிகையே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சித்தியளிப்பவளே போற்றி

ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

ஓம் சுத்தஞான வடிவே போற்றி

ஓம் ஞானக் கடலானாய் போற்றி

ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

ஓம் ஞானேஸ்வரியே போற்றி

ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

ஓம் ஞான ஆசிரியையே போற்றி

ஓம் ஞானத்தின் காவலே போற்றி

ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

ஓம் தகைமை தருபவளே போற்றி

ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

ஓம் தாயான தயாபரியே போற்றி

ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

ஓம் நவமி தேவதையே போற்றி

ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

ஓம் நன்னெறி தருபவளே போற்றி

ஓம் நலம் அளிப்பவளே போற்றி

ஓம் நாவிற்கு அரசியே போற்றி

ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

ஓம் நா நயம் அருள்வாய் போற்றி

ஓம் நான்மறை நாயகியே போற்றி

ஓம் நாவில் உறைபவளே போற்றி

ஓம் நாதத்தின் தலைவியே போற்றி

ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

ஓம் பண்ணின் இசையே போற்றி

ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

ஓம் பிரணவ சொரூபமே போற்றி

ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

ஓம் பூரண வடிவானவளே போற்றி

ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

ஓம் புத்தகத்தில் உறைபவளே போற்றி

ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

ஓம் மங்கல வடிவானவளே போற்றி

ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

ஓம் மூல மந்திர வடிவினளே போற்றி

ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி

ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

ஓம் மேதையாக்குபவளே போற்றி

ஓம் மேன்மை தருபவளே போற்றி

ஓம் யாகத்தின் பலனே போற்றி

ஓம் யோகத்தின் பயனே போற்றி

ஓம் வழித்துணை வருவாய் போற்றி

ஓம் வரம் அருள்பவளே போற்றி

ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

ஓம் வாக்கின் நாயகியே போற்றி

ஓம் வித்தக வடிவினளே போற்றி

ஓம் வித்யா லட்சுமியே போற்றி

ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

ஓம் வெள்ளை மனத்தாலே போற்றி

ஓம் வெண் தாமரையினாலே போற்றி

ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

பிறகு குடும்பத்தினர்கள் மற்றும் அங்கிருப்பவர்கள் எல்லோர் கையிலும் புஷ்பம் கொடுத்து போடச்சொல்லி எல்லோரும் நமஸ்காரம் செய்து வழிபடவும். விபூதி குங்குமம் மற்றும் பொரிகடலை இனிப்புகள் ஆகியவற்றை எல்லோருக்கும் விநியோகித்து ஆரத்தியெடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.💐💐🌹🤲👣🙇‍♂️🕉️🙏🙏

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*