*நவம்பர் 2 – 1815 - கணித மேதை ஜார்ஜ் பூலின் பிறந்த நாள்*
1815-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று இங்கிலாந்தில் பிறந்த கணித மேதை ஜார்ஜ் பூல் இத்தகைய சாதனை பட்டியலில் இடம் பெற்றவர்.
ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஜார்ஜ் பூல் இன்றைய கணினி அறிவியலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வரும் பூலியன் கணிதத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
இவர் கணினி அறிவியல் துறையைத் தோன்றக் காரணமானவர்களில் ஒருவராகக் ஜார்ஜ் பூல் கருதப்படுகிறார்.
கணிதம் மற்றும் அறிவியல் கற்கத் தேவையான பயிற்சியைக் கொடுத்து, பிற்காலப் படிப்பிற்கு குழந்தைகளை ஆயத்தம் செய்ய இயலும் என்ற சிந்தனைக்கு முன்னோடி கணிதக்கல்வியாளர் மேரி எவரெஸ்ட் பூல்.
இவர் ஜார்ஜ் பூலின் மனைவியாவர்.
ஜார்ஜ் பூலின் பல படைப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும் அவரது மனைவி மேரி பெரும் உதவி புரிந்தார் என்பது வரலாற்று உமையாகும்.
ஜார்ஜ் பூலும் தன் பங்குக்கு அவரது மனைவியின் ஆய்வு பணிகளுக்கு உதவிகள் புரிந்துள்ளார்.
ஜார்ஜ் பூலின் மிகப் பெரிய சாதனை படைப்பு அவரது 'லாஸ் ஆஃப் தாட்' என்பதாகும்.
பிராபபில்டி தியரி என்ற ஜார்ஜ் பூலின் கோட்பாடு பல முந்தைய கோட்பாடுகள் பலவற்றில் உள்ள குறைகளை களைந்தது.
மேலும், பூலியன் தத்துவம் தான் இன்று கணினிகள், தேடு பொறிகள் ஆகியவை இயங்குவதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது
Comments
Post a Comment