Skip to main content

தேவகனி

🍋🍋🍋🍋🕉️☘️🔯🍋🍋🍋🍋

*தேவ கனி என்றால் என்ன?*
*உங்கள் வீட்டில் உள்ள கெட்ட* *சக்தியை விரட்ட இந்த ஒரு பழம்* *போதும்...*
*இப்படி செய்து பாருங்கள்...*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
        *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘*

கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழத்தை என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

எலுமிச்சை கனியை நல்ல சக்தியை பெறவும், தீய சக்தியை ஏவி விடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எலுமிச்சம் பழத்தை கோவிலில் கொடுக்கும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வலுபெற்று இருக்கும்.

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

வீட்டில், தொழிற் கூடங்களில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்டவும் நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சையை பயன்படுத்தலாம்.

எலுமிச்சம் பழத்திற்கு தேவ கனி என்ற பெயர் உண்டு. 
இதனை தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்றும் கூறலாம். எலுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அத்துடன் எலுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் இது தேவ கனியாக சொல்லப்படுகிறது.

🍎🍏🍊🍋🥭🍑🥥🍍🥭🍇🫐

நம் மண்ணின் முக்கனிகளான 
மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சைக்கு ஏன் என்று தோன்றுகிறதல்லவா, 

அது ஏனென்றால் மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு, பலாவில் வியர்வை குற்றம் உண்டு, வாழையில் புள்ளி குற்றம் உண்டு, ஆனால் எலுமிச்சை மட்டும் எந்த குற்றத்திற்கும் உடன்படவில்லை என்று நம் முன்னோர்கள் எலுமிச்சையை தேவகனி என்று பெயரிட்டுள்ளார்கள்.

🔯❇️🔯❇️🔯❇️🔯❇️🔯❇️🔯

நல்ல சுப மங்கள காரியமாக நாம் யாரையாவது பார்க்கப் போனால் நம்முடன் எலுமிச்சம் பழத்தை கொண்டு போனால் அந்த காரியம் நிச்சயம் வெற்றியடையும்.


எலுமிச்சம் கனி மாலை
தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. 
கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். 

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

ஆதிபராசக்தி, துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், காளியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். 

துர்கை, பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை அணிவித்து வழிபட்டால் நீண்ட நாள் தடைபட்ட செயல்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

🍎🍏🍊🍋🍇🍍🥭🫐🥥🍓🍑

வெற்றி நிச்சயம் ;-
எலுமிச்சம் பழத்திற்கு இருக்கும் சக்தி அளப்பரியது. மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். சுப காரியதிற்கு செல்லும் போதோ, வெற்றியை நோக்கி செல்லும் போதோ இந்த கனிகளை அம்மன் கோவில் வாசல் முன்னர் இருக்கும் திரிசூலத்தில் சொருகி விட்டு போனால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

தீய சக்திகளை அகற்றும் எலுமிச்சை
ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைவுபாடு ஏற்படும், உறவுகளின் இடையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது, எனவே எதிர்மறை ஆற்றலை கண்டறிந்து அதை வெளியேற்ற வேண்டும். 

மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள், கருப்பு நிறத்தில் மாறினால், அதை தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும். மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.

🐘🐘🐄🐄🦚🦜🦚🐄🐄🐘🐘

எதிர்மறை சக்திகள் வெளியேறும்
நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக வெட்டி, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி வீசி விட வேண்டும். 

இந்த முறைகளை பின்பற்றும் போது, வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நீங்கி வளம்பெறலாம். இந்த பரிகாரம் செய்யும் போது நாம் வீட்டில் தனியாக எலுமிச்சையை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

🌐🌀💠🔱⚜️🔱💠🌀🌐

அம்மன் கோவில் பிரசாதம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சை அனைத்தும் பிரசாதமாகத் தரப்படுகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு எலுமிச்சை சாறை பிரசாதமாக கொடுக்கிறார்கள். இதைப் பருகினால் கர்ப்பமாவார்கள் என்பது ஐதீகம்.

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சிலர் அப்படியே போட்டு விடுவார்கள். அது தவறு கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் எலுமிச்சம் பழத்தை என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக்கூடாது என்றும் பார்க்கலாம்.


எப்படி பயன்படுத்தலாம்
கோவில்களில் சாமி கும்மிடும் போது சிலர் எலுமிச்சை வாங்கிக் கொடுப்பார்கள். சாமி பாதத்தில் வைத்து எடுத்த கனியை பிரசாதமாக பெறப்படும் இந்த எலுமிச்சை தெய்வ அருளை பெற்றது என்பது நம்பிக்கை.

💜💙💚🧡💛💛💛🧡💚💙💜

கோவிலில் கொடுக்கும் எலுமிச்சையை நாம் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். 
நாம் அந்த பழத்தை பயன்படுத்த வேண்டும்.


இனிப்பு சேர்த்து குடிக்கலாம் :-
பிரசாதமாக வாங்கிய பழத்தை சிலர் வாகனங்களில் வைத்திருப்பார்கள். இரண்டிற்கும் மேற்பட்ட பழங்கள் கிடைத்தால் அதை நாம் ஜூஸ் போட்டு குடிக்கலாம். 
தேன், சர்க்கரை மட்டுமே சேர்த்து சாப்பிட வேண்டும் மறந்தும் கூட உப்பு சேர்த்துக்கொள்ளக்கூடாது. 

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

அந்த எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாமே தவிர அதில் எக்காரணத்தை கொண்டும் உப்பு கலந்து குடிக்கக் கூடாது. 

நாம் வீட்டில் சாதாரணமாக வாங்கும் எலுமிச்சையுடன் சோடா.. உப்பு கலந்து குடிப்பார்கள். ஆனால் கண்டிப்பாக கோவிலில் கொடுக்கும் எலுமிச்சையுடன் மட்டும் உப்பு சோடா சேர்க்கக்கூடாது. 
இனிப்பு கலந்துதான் குடிக்க வேண்டும்.

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

திருஷ்டி சுத்தக்கூடாது :-
கோவிலில் இருந்து பிரசாதமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுவரும் எலுமிச்சையை திருஷ்டி சுத்தி போட பயன்படுத்தக் கூடாது. 

வீட்டில் உள்ள எலுமிச்சையை மட்டுமே திருஷ்டி சுத்த பயன்படுத்த வேண்டும். கோவிலில் கொடுத்ததை கண்டிப்பாக திருஷ்டி சுத்திப்போட பயன்படுத்தக்கூடாது.

💜💙💚🧡💛✳️💛🧡💚💙💜

தெய்வீகமான எலுமிச்சக்கனி பற்றிய மேலும் சுவாரஸ்யமான பல ஆன்மீக தகவல்கள் உண்டு...

உங்கள் நல்லாசியுடன் மீண்டும் தொடரும்...

🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

*"ஓம் நமச்சிவாய வாழ்க"*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
        *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*என்றும் இறைபணியில்...*
*மு.சண்முக ஐயப்பன்.மும்பை*
🟪🟦🟩🟧🟨🟨🟨🟧🟩🟦🟪

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*