Skip to main content

Posts

Showing posts from December, 2023

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் டிசம்பர் 27

ஒற்றைக்கல் மரகத நடராஜர்

*இராமநாதபுரம் உத்ரகோச மங்கை சிவலாயத்தில் உள்ள ஒற்றைக்கல் மரகத நடராஜர் இவர்*. இன்று ஒரு நாள் மட்டும் சந்தனம் காப்பு கலைக்கப்பட்டு இப்படி காட்சி தருவார் அதுவும் இரவு 12 .30 மணி வரை மட்டுமே 🙏 ஒம் நமசிவாய 🙏

இந்தியாவின் மிகபெரிய கோயில் எது?

_**_ _*தெரிந்து கொள்வோம்‼️*_ _*33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி)*_ _*நிலப்பரப்பில்*_ _*திருவாரூரில்*_ _*அமைந்துள்ள,*_ _*தியாகராஜர்*_ _*கோயில்தான் இந்தியாவின்*_  _*மிகப் பெரிய*_ _*கோயிலாகும்!*_ 🏵️ 9 ராஜ கோபுரங்கள், 🏵️ 80 விமானங்கள், 🏵️ 12 பெரிய மதில்கள், 🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள், 🏵️ 15 தீர்த்தக்கிணறுகள், 🏵 3 நந்தவனங்கள்,  🏵️3 பெரிய பிரகாரங்கள், 🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 🏵️ 86 விநாயகர் சிலைகள், 🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது.  சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். _*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*_  தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு

கீதா ஜெயந்தி

கீதா ஜெயந்தி 23.12.2023 இந்து புராண நம்பிக்கையின்படி, பகவத் கீதை ஒரு மிகவும் புனிதமான நூல். இந்து இதிகாசமான மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, கீதை என்னும் புனித பிரசங்கம் பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையாக பாண்டவ இளவரசன் அர்ஜுனனுக்கு விவரிக்கப்பட்டது. இந்த ஆண்டு கீதா ஜெயந்தி 22 டிசம்பர் 2023 அன்று கொண்டாடப்படுகிறது. கீதா ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை பிறந்தது. இப் புனித நூலான கீதையின் 5160வது ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.  மனிதகுலத்திற்கு இன்றும் கூட கீதைஎவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் பற்றி படித்த புரோகிதர்கள் மற்றும் அறிஞர்களுடன் பாமரர்களும் கலந்து உரையாடும்போது அறிந்து கொள்ளுகிறோம். ஸ்ரீமத் பகவத் கீதை இந்துக்களின் புனித புத்தகம் மற்றும் கீதா ஜெயந்தி சமரோ ஸ்ரீமத் பகவத் கீதையின் பிறப்புக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை இந்துக்களுக்கு மிகவும் புனிதமானது மற்றும் மகத்தான மத ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா முக்கியமாக ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவில் கொண்

தனுஷ்கோடி

வரலாற்றில் இன்று டிசம்பர் 22,1964 வங்கக்கடலில் ஏற்பட்ட புயலால், 49 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்,(டிச.,22) நள்ளிரவில் தனுஷ்கோடி அழிந்த நாள் டிசம்பர் 22  அழிந்து போன வணிக நகரம் தனுஷ்கோடி, தற்போது புயலின் எச்சங்களாக காட்சியளிக்கிறது.   இலங்கையில் ராவணனை கொன்று, சீதையை மீட்டு வந்தபோது, ராமர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்கோடி (வில், அம்பு) என, ராமாயணத்தில் குறிப்பிட்டு உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ள இந்நகரம், 100 ஆண்டுக்கு முன்பு வணிக நகரமாக விளங்கியது. ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி நகரம் தான் பிரசித்தி பெற்று இருந்தது. 1914 ல், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடிக்கு "போட் மெயில்' என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் நடைபெற்றன. இந்நகரை, கடல் அலைகள், காணாமல் செய்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதே நாளில், அதாவது, 1964 டிச., 22 ல், இரவு 12.30 மணிக்கு, கடலில் ஏற்பட்ட புயலால், ராட்சத அலைகள் எழுந்து, தனுஷ்கோடியை தாக்கின. தூக்கத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், புயலி

ஒமிக்ரான் XBB

 புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB என்கிற கொரோனா வைரஸின் பிரிவு, வித்தியாசமான, உயிரிழ்ப்பு ஏற்படுத்தும், சரியாக கண்டு பிடிக்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் முக கவசம் அணியும் படி அறிவுறுத்தப் படுகிறார்கள்.      கோவிட்-ஒமிக்ரான் XBB ன் அறிகுறிகளாவன:-      1. இருமல் இருக்காது      2. காய்ச்சல் இருக்காது.      கீழ்கண்டவைகள் அதிகமாக இருக்கும் :-      3. மூட்டு வலி      4. தலை வலி.      5. கழுத்து வலி.      6. மேல் முதுகு வலி.      7. நிம்மோனியா.      8. பொதுவாக பசி இருக்காது.    உண்மையில், கோவிட்-ஒமிக்ரான் XBB  வைரஸ் என்பது டெல்டா வைரஸை விட 5 மடங்கு உக்கிர்மானது மற்றும் அதன் இறப்பு விகிதமும் அதிகம்.      இந்த நிலை வெகு விரைவில் அதீத உச்சத்தை அடையும், சில சமயங்களில் வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் இருக்காது.     நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்போம்!    இந்த வகையான வைரஸ், மூச்சுக் குழாயில் தங்காமல், நேரடியாக WINDOW  என்கிற நுரையீரல் பகுதியை, வெகு குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும்.     கோவிட்-ஒமிக்ரான் XBBயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு காய்ச்சலோ, வலியோ இல்லை.  ஆனால் மார்பு X-Ray மூலமாக பார்

டிசம்பர் 22 - தேசிய கணித தினம் - கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள்

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* *டிசம்பர் 22 - தேசிய கணித தினம் - கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள்*     உலகமே போற்றி வியந்து பார்க்கும் கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள் இந்தியாவில், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணிதத்தில் பின்தங்கியிருந்த இந்தியாவை தலைநிமிரச் செய்து, உலக அளவில் கணித மேம்பாட்டுக்கு வித்திட்டவர் சீனிவாசா ராமானுஜர்.                                                                                                                                                                                                                                                                                               1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜர். இந்த நாட்டின் ‘பிரில்லியன்ட் மைண்ட்ஸ்’ என்று கூறப்படும் பிரமிக்க வைக்கும் திறமை கொண்ட நபர்களில் ஸ்ரீனிவாச ராமானுஜருக்கு தனி இடம் உண்டு.                                                                                                        

எண்ணம் போல் வாழ்க்கை !

 (படித்ததில் பிடித்தது.) ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தான். அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு., அவர் பாதம் கழுவி பின் குருவை பணிந்து வணங்கி நின்றான். அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார். அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான்.  நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான். குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே., அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு., கன்னங்களை தட்டிக்கொடுத்தார். அவனது கண்களில் முணுக்கென எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு., என் சிஷ்யன் கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்திய குரு நான் உனக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்., பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார். ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான். அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான்.  ரொம்ப களைப்பு., பசி., தாகம்., கொஞ்சம் பயம் வேறு. சோர்ந்து போய் ஒர