*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*டிசம்பர் 22 - தேசிய கணித தினம் - கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள்*
உலகமே போற்றி வியந்து பார்க்கும் கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள் இந்தியாவில், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணிதத்தில் பின்தங்கியிருந்த இந்தியாவை தலைநிமிரச் செய்து, உலக அளவில் கணித மேம்பாட்டுக்கு வித்திட்டவர் சீனிவாசா ராமானுஜர்.
1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜர். இந்த நாட்டின் ‘பிரில்லியன்ட் மைண்ட்ஸ்’ என்று கூறப்படும் பிரமிக்க வைக்கும் திறமை கொண்ட நபர்களில் ஸ்ரீனிவாச ராமானுஜருக்கு தனி இடம் உண்டு.
சீனிவாச ராமானுஜரின் வியக்கவைக்கும் கணித அறிவை அனைவரும் தெரிந்து கொள்வதற்காகவும், இளைஞர்களிடையே கணிதம் பற்றிய ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும் ராமானுஜரின் பிறந்த தினத்தை தேசிய கணித தினமாக மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ராமானுஜரின் அற்புதமான பணி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு கணிதம் எவ்வளவு முக்கியமாக இருந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தக் கணித அறிவு ஜீவி பற்றி நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் பொன்மொழிகள்., பெரிதாக உதவியும் ஆதரவும் இல்லாமல் தன்னுடைய கணிதத் திறனை மேம்படுத்திய ராமானுஜர், 13 வயதிலேயே எந்த உதவியும் இன்றி மிகவும் சிக்கலான Loney’s Trigonometry கணக்குகளுக்கு தீர்வு கண்டார். கணிதத்தில் இவருடைய அறிவைப் பார்த்து, பள்ளியில் இவரிடம் யாருமே பழகவில்லை மற்றும் ஒரு போட்டியாளராகத் தான் நினைத்தனர். எனவே, ராமானுஜருக்கு பள்ளி காலத்தில் நண்பர்களே இல்லை
கணிதத்தில் மிகச் சிறந்து விளங்கிய ராமானுஜருக்கு மற்ற பாடங்களைப் படிக்க முடியவில்லை. எனவே மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற முடியாததால், இவரால் படிப்பை முடித்து டிகிரி பெற முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ‘நாமக்கல்’ என்ற ஒரு இந்து பெண் கடவுள், கனவில் தனக்குக் கணித சூத்திரங்களையும் கேள்விகளையும் கொடுத்து வந்ததாகவும், விழிப்புடன் இருக்கும் போது அதற்குத் தீர்வு கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1918 ஆம் ஆண்டில் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாக கௌரவிக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் இவர்.
GH ஹார்டி, 1729 எண்ணை மிக மிகச் சாதாரணமான, சுவாரஸ்யமே இல்லாத ஒரு எண்ணாக கூறியிருந்தார். ஆனால் கணிதமேதை ராமானுஜர் அந்த ஏன் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்.
1729 = 13 + 123 = 93 + 103
“இல்லை. இது மிகவும் சுவாரஸ்யமான எண். இது இரண்டு கியூப் எண்களின் கூட்டலை, இரண்டு விதமாக வெளிப்படுத்தும் போது கிடைக்கும் மிகச்சிறிய எண் ஆகும்” என்று தெரிவித்தார். கணிதத்தில் மட்டுமல்ல, வார்த்தை விளையாட்டிலும் தேர்ந்தவர் என்று ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தினார்.
இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics. என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.
இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (magic squares), தொடர் பின்னம் (continued fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (prime and composite numbers), எண் பிரிவினைகள் (number partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (elliptic integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.
இராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
1914ஆம் ஆண்டுக்கும், 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு தனது 32வது வயதில் மறைந்தார்
Comments
Post a Comment