🌜🌛🌜🌛🌜🌛
*செயல் சிறிது* *பலன் பெரிது*
🌝🌚🌝🌚🌝🌚
நம் அன்றாட வாழ்க்கையில் ....
ப்பூ...
இவ்வளவுதானா...
இதெல்லாம் ஒரு பெருசா? என்று...
பல செயல்களை புறக்கணிப்போம்.
ஆனால் அன்றாடம் அந்த செயல்களில் ...
கவனம் வைப்போமேயானால்...
சிறிதென தள்ளி வைக்கப்பட்ட செயல்...
பெரிதளவு பலனை கொடுக்கும்.
காலை எழுந்தவுடன் முதல் வேலையாக ...
படுக்கையை ஒழுங்கு செய்தல்.
முதல் நாள் இரவு படுக்கச் செல்லும் முன்பே ...
அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளுக்கான ...
பட்டியலை வரிசைப்படுத்துதல்.
அவ்வாறு வரிசைப்படுத்தும் போது...
நமது வாழ்வின் லட்சியத்தை எட்டுவதற்கான ...
செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்.
செய்ய வேண்டிய பணிகளுக்கு ....
கால நிர்ணயம் செய்தல்.
அன்றாடம் படிப்பதற்கு ...
நேரம் ஒதுக்குதல்
உடலுக்கு ஏற்ற சத்துள்ள முழுமையான ...
உணவு வகைகளை உட்கொள்ளுதல்.
*தம்* *கட்டிங்* இரண்டையும் தவிர்த்தல் .
எங்கும் எதிலும் பெருந்தன்மையுடன் நடத்தல்.
மனதை மகிழ்வாக வைத்துக் கொள்வதற்காக...
ஏதாவது ஒரு பொழுதுபோக்குக்காக ...
நேரம் ஒதுக்குதல்.
வாழ்வுக்கான பயணத்தை ...
சரியான திசை வழியில் மேற்கொள்ளுதல்.
ஒவ்வொரு வாரமும் செய்துள்ள பணிகளை ...
சுய ஆய்வு செய்தல்.
நம்முள் பொதிந்துள்ள திறமைகளை ...
வெளிக் கொணரத்தக்க வகையில் உள்ள ...
மனிதர்களின் நட்பைப் பேணுதல்.
நம்மால் எதை செய்ய முடியுமோ...
அதை மட்டுமே கூறி ...
அவ்வாறு கூறியதை செய்து முடிப்பதிலும் உறுதியாக இருங்கள்.
அன்றாடம் ஏதாவது ஒரு சிறு உதவியாவது...
எவராவது ஒருவருக்கு செய்தாக வேண்டும் என்ற ...
தினசரி சபதத்தை மேற்கொள்ளுதல்.
எவ்வளவு கடினமான பணியில் ஈடுபட்டிருந்தாலும் ...
தனது குடும்பத்துக்கும் ஓரளவாவது ...
நேரம் ஒதுக்குதல்.
எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும்..
அந்தப் பணி நிலையில் உச்சபட்ச ...
உயர் நிலையைத் தொடுதல்.
மனித நேயத்தின் மாண்புணர்ந்து செயல்படுதல்
உடல் நலம் பேண உரிய பயிற்சிகளை மேற்கொள்ளல்
மேற் சொல்லப்பட்டவைகளை ...
எவரும் நம் மீது திணிக்கத் தேவையில்லை..,
நாமே இவற்றின் மதிப்பு உணர்ந்து ...
வாழ்ந்து காட்டுவோம்
🍃🍃🍃🍃🍃🍃
Comments
Post a Comment