*
தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி. தமிழ் நட்சத்திரங்களில் 12வது உத்திரம். பங்குனி, உத்திரம்,பெளர்ணமி இணையும் நாளைதான் பங்குனி உத்திரம் என்று குறிப்பிடுவோம். அன்று மிகவும் விசேஷமான நாள். காரணம், நாம் பூஜிக்கும் கடவுள்களான சிவன்- பார்வதி, முருகன்-தெய்வானை, ராமன் – சீதை அவர்களின் திருமண வைபோகம் நடைபெற்றது. மேலும் லட்சுமி பாற்கடலில் அவதரித்த தினமும் அன்றுதான்.
*மன்மதனை எரித்து உஷ்ணத்தில் இருந்த சிவனை சாந்தப்படுத்த அவரை பார்வதி மணந்தார். மன்மதனுக்கு அளித்த தண்டனையால் பாதிக்கப்பட்ட ரதிக்கு
‘உன் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான்’ என பார்வதி வரம் தந்த நாள்.
*கொள்ளிட ஆற்றங்கரையில் ஸ்ரீ புலீஸ்வரி அம்மனின் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே சன்னதியில் ஏழு அம்மன்கள் உள்ளனர். அதில் புலீஸ்வரி என்பது வைஷ்ணவி. இங்குள்ள ஸ்தல மரம் வருடத்திற்கு ஒரே நாளான பங்குனி உத்திரம் அன்று மட்டுமே பூக்கும்.
*திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தும்புரு தீர்த்தத்தில் அன்று நீராடுவது மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுபட உதவும் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
*ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் ஓடும் காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்வர். முத்துக்குமார சுவாமி-வள்ளி தெய்வானை தம்பதியினராக உலா வந்து மக்களுக்கு தரிசனம் தரும் நாள். அன்று பக்தர்கள் முருகனுக்கு பஞ்சாமிர்தம் தயாரித்து, அபிஷேகம் செய்வது வழக்கம்.
*ஆன்மீக பக்தர்கள் இந்த நாளை பசுவாகிய ஆன்மா, பதியாகிய சிவனிடம் இணைவதாக கூறுவர்.
*இன்று பலர் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு பால்-பழம் மட்டும் சாப்பிடுவார்கள். இதனை ‘கல்யாண கந்தரவிரதம்’ என அழைப்பர்.
🙏🏻🙏🏻
Comments
Post a Comment