இந்தாண்டில் யுகாதி பண்டிகை
*09 04 2024* செவ்வாய்க்கிழமை வருகிறது அதன் சிறப்பு என்ன தெரிந்து கொள்வோம்......
புத்தாண்டு :
தெலுங்கு மற்றும் கன்னட வருட பிறப்பையே யுகாதி பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோம். இது தமிழ் நாட்டிகாட்டியின்படி பங்குனி மாதத்தின் கடைசி வாரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு என்றாலும் ஆந்திரா மாநிலம் மட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்துக்களின் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு புத்தாண்டும் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கணக்கிடப்படுகின்றன.
யுகாதி கொண்டாட்டம் :
யுகாதி கொண்டாட்டம் :
எந்த மதம், எந்த கலாச்சாரமாக இருந்தாலும் புத்தாண்டு என்றாலே அது சிறப்புக்குரிய, கொண்டாட்டத்திற்குரிய முக்கியமான நாளாக தான் கருதப்படுகிறது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இந்த நாளை கொண்டாட முன்கூட்டியே தயாராகி விடுவார்கள். ஜனவரி 01ம் தேதியான ஆங்கில புத்தாண்டுடன், ஆண்டின் பல மாதங்களில் பல விதமான புத்தாண்டுகள் கொண்டாடப்படுவது வழக்கம். அது போல் சைத்ர மாதத்தின் முதல் தேதியை இந்துக்களின் புத்தாண்டாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதையே நாம் யுகாதி பண்டிகை என சொல்கிறோம்.
இந்தியாவில் யுகாதி கொண்டாட்டம் :
இந்தியாவில் யுகாதி கொண்டாட்டம் :
இந்து புத்தாண்டின் முதல் நாள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் பட்வா என்றும், காஷ்மீரில் நவ்ரஹ் என்றும், கொங்கனில் சன்வட்சர் பட்வோ என்ற பெயரிலும், மேற்குவங்கத்தில் பொய்லா போய்ஷாக் என்ற பெயரிலும், அசாமில் பிஹூ என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் யுகாதி என்ற பெயரிலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு ஏப்ரல் 09ம் தேதி இந்துக்களின் புத்தாண்டான யுகாதி கொண்டாடப்பட உள்ளது.
யுகாதி என்றால் என்ன ?
யுகாதி என்றால் என்ன ?
சைத்ர நவராத்திரியின் துவக்க நாளாகவும் இந்த ஆண்டு யுகாதி திருநாள் அமைந்து விட்டதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. இந்துக்களின் புத்தாண்டில் முதல் பண்டிகையாக சைத்ர நவராத்திரியும், அதைத் தொடர்ந்து ராம நவமியும் கொண்டாடப்பட உள்ளது. யுகாதி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு புதிய ஆண்டின் துவக்கம் என்று பொருள். யுகா என்றால் யுகம் அல்லது வயது அல்லது ஆண்டு என்றும், ஆதி என்றால் துவக்கம் என்றும் பொருள். புதிய வாழ்க்கை அல்லது யுகத்தை புதிதாக துவங்குவதற்கான நாள் என்பது இதன் பொருள். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலகத்தை படைக்க துவங்கியதாகவும், அதனால் தான் இதை புத்தாண்டாக கொண்டாடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இது மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
யுகாதி பச்சடி :
யுகாதி பச்சடி :
யுகாதி நாளே வசந்த காலத்தின் துவக்க நாளாகவும், குளிர் காலத்தின் முடிவாகவும் கருதப்படுகிறது. அதனாலேயே இந்த நாளில் யுகாதி பச்சடி வைப்பது மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இது வேப்பம்பூ, மாங்காய், வெல்லம், காரம், உப்பு உள்ளிட்ட அறுசுவைகளையும் சேர்த்து செய்யப்படுவதாகும். இந்த நாளில் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதுண்டு. யுகாதி நாளில் பங்சாங்கம் படிப்பதும், கேட்பதும் மிகவும் விசேஷமானதாகும். புதிய ஆரம்பத்திற்கான நாளாக இது கருதப்படுவதால் செல்வ வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை இனி வரும் காலங்களில் கிடைக்க வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கம்.
தெரிந்து கொள்வோம்......
🙏உங்கள் சனாதன நேசன் கே எஸ் குமாரசாமி குருக்கள் ஆர் குண்ணத்தூர்🙏
🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment