Skip to main content

Posts

Showing posts from November, 2021
பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் ! 1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது. 5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது. 6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது. 7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை ) 8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச
வெங்காயம் பூண்டு காரகுழம்பு மோர்குழம்பு பீர்கங்காய் பால்கூட்டு புளி சாதம் லெமன்சாதம் கறிவேப்பிலை சாதம் புதினா சாதம் முட்டை சாதம் மிளகு ரசம் மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் (கடலைமாவு சட்னி சப்பாத்திக்கு) வெங்காய சட்னி வேர்கடலை சட்னி பூண்டு சட்னி தேங்காய் சட்னி தேங்காய்பால் சாதம் அவரக்காய் பொரியல் வெண்டைகாய் பொரியல் முளைக்கீரை பூண்டு மசியல் முருங்கைகீரை பொரியல் பிரண்டை துவையல் புதினா துவையல் இதுக்கெல்லாம் தக்காளி தேவைப்படாது..கொஞ்சநாளைக்கு சமாளிங்க தக்காளி 🍅🍅 விலை குறையும் வரை புதிய வகை உணவுகள் உண்டு மகிழுங்கள் *அமிர்தம்கேட்டரிங்* *சிறுமுகை* *9865036487*
*அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள் தந்த இசை வடிவ திருக்குறள்!*👇🏾
*கடல் மட்டம் உயர்தல், வெள்ளப்பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள் : இந்தியாவிற்கு எச்சரிக்கை!!* டெல்லி : பருவநிலை மாறுதலால் அதிகப்படியாக கடல் மட்டம் உயர்தல், வெள்ளப்பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வானிலை மாறுதல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு கடந்த 23ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ள பருவநிலை ஆய்வு வல்லுநர் ஸ்வப்னா பனிக்கல், கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளார். குறிப்பாக இந்திய கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கை அவசியம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். 1870ம் ஆண்டில் தொடங்கி 2000ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் கடல் மட்டம் 1.8 மிமீ உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் 1993ல் தொடங்கி 2017ம் ஆண்டு வரை இந்த அளவு 2 மடங்காக 3.3 மிமீ அளவிற்கு கடல் மட்டம் உயர்ந்திருப்பதை ஸ்வப்னா பனிக்கல் சுட்டிக் காட்டியு
*சபரிமலை_18_படிக்கட்டுகளும்* *அதன்_மகத்துவமும்* *முதல்_படி* *பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.* *இரண்டாம்_படி* *பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.* *மூன்றாம்_படி* *கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.* *நான்காம்_படி* *பாவ – புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.* *ஐந்தாம்_படி* *நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.* *ஆறாம்_படி* *கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.* *🌹பக்தியுடன்🌹* *சோழ.அர.வானவரம்பன்* *+91-8072055052* *ஏழாம்_படி* *இந்த
தங்காளி மீம்ஸ்
*நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி* இனி வரும் காலத்தில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி அத்தியாவசியம்! அந்தக் காலத்தில் ஆன்மிகத் தலங்களுக்குப் பாத யாத்திரை, கிரிவலம், மலைமேல் நடப்பது எனப் பலரும் நடையாய் நடந்தது உண்டு. இன்றைக்கு மோட்டார்களும் எஞ்சின்களும் படுவேகத்தில் இயங்கவைக்கும் நிலையில், நடைபயிற்சி எனும் சிறந்த பழக்கத்தை ஏறக்குறைய மறந்தேவிட்டோம்! *உடலுக்குள் அவலங்கள்* உடலுக்குத் தேவையான அளவு அசைவு களைக் கொடுக்காததால், எவ்வளவு உடல் உபாதைகள் நமது உடலுக்குள் குடியிருக் கின்றன தெரியுமா? ரத்தக்குழாய்களில் தடிமனாகப் படிந்துள்ள கொழுப்புப் திட்டுக்கள், பானையைப் போன்ற வயிறு, சூரிய ஒளி பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் வைட்டமின் – டி குறைபாடு, நெகிழ்வாக இருக்க வேண்டிய மூட்டுப் பகுதிகள் அசைவின்றிக் கடினமாக மாறிவிட்ட அவலம், உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் திறன் குறைபாடு, உறக்கமின்மை எனும் மனர
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. . மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன் வரவில்லை. “ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது ” என்று குட்டிக் குரங்கின் காது படவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன . தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. “ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே”. குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உ
*குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்…* *வியாழக்கிழமை* மற்றும் *குருபெயர்ச்சி* காலத்தில் யாரைப் பூஜிப்பது அல்லது வணங்குவது? நவக்கிரக குருவையா அல்லது ஞான குருவையா(தட்சிணாமூர்த்தி)? சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மகிழ்ச்சி தான் இருந்தாலும் இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா? இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பவர் *சிவவடிவம்*.. குருபகவான் என்பவர் *கிரக வடிவம்*. இவர் *சிவன்*, அவர் *பிரகஸ்பதி*. *தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.* குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை
*சோறு வரும் வழி:* 01. வயல் காட்டைச் சீர்செய்தல் 02. ஏர் பிடித்தல் 03. உழவு ஓட்டுதல் 04. பரம்படித்தல் 05. விதை நெல் சேகரித்தல் 06. விதை நேர்த்தி செய்தல் 07. விதைகளை நீரில் ஊற வைத்தல் 08. நாற்றங்காலில் விதைத்தல் 09. நாற்றாக வளருதல் 10. நாற்று எடுத்தல் 11. முடிச்சு கட்டுதல் 12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல் 13. நடவு நடுதல் 14. களையெடுத்தல் 15. உரமிடுதல் 16. எலியிடம் தப்புதல் 17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல் 18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல் 19. கதிர் முற்றுதல் 20. கதிர் அறுத்தல் 21. கட்டு கட்டுதல் 22. கட்டு சுமந்து வருதல் 23. களத்துமேட்டில் சேர்த்தல் 24. கதிர் அடித்தல் 25. பயிர் தூற்றல் 26. பதறுபிரித்தல் 27. மூட்டை கட்டுதல் 28. நெல் ஊறவைத்தல் 29. நெல் அவித்தல் 30. களத்தில் காயவைத்தல் 31. மழையிலிருந்து பாதுகாத்தல் 32. நெல் குத்துதல் 33. நொய்யின்றி அரிசியாதல் 34. அரிசியாக்குதல் 35. மூட்டையில் பிடித்தல் 36. விற்பனை செய்தல் 37. எடை போட்டு வாங்குதல் 38. அரிசி ஊறவைத்தல் 39. அரிசி கழுவுதல் 40. கல் நீக்குதல் 41. அரிசியை உலையிடல் 42. சோறு வடித்தல் 43. சோறு சூடு தணிய வைத்தல் 44. சோறு இல
*“முத்தைத்தரு பத்தித் திருநகை…” பாடல்: அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும்* 👇👇👇👇👇👇 *உடல் குலுங்க குலுங்க சிரித்தார் டி.எம்.எஸ். “என்னய்யா சொல்கிறீர்கள் ?இந்த பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று இங்கே இருக்கும் ஒருவருக்குமே தெரியாதா ?”* ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் டிஎம்எஸ்ஸின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள். “என்ன பாடல் அது ஜான் ?” *அருணகிரிநாதர் பட பாடல் பதிவு நேரம் அது. (1964)* சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது. *“சொல்லுங்கள் ஐயா, அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும் ? அந்தப் பாடலை கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும் ?”* சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது. ஏனெனில் அவர்களுக்கு தெரியும். எந்த ஒரு பாடலையும் அதன் அர்த்தம் தெரியாமல், உணர்வுகள் புரியாமல் ஒருபோதும் பாட மாட்டார் டிஎம்எஸ். மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்த பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ். *“முத்தைத்தரு பத்தித் திருநகை* *அத்திக்கிறை சத்திச் சரவண* *முத்த
*⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism…* ⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism… ⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism… ⚪இட்லிய ‘சுட்டது’ யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism… ⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism… ⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism… ⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism… ⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism… ⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism. ⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism. ⚪இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism… ⚪இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism. ⚪last one⚪ ⚪இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!! ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா….என்று என்மேல் கடுப்பாகி..என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது டெர்ரரிஸம்.. 😀😀😀 ( யாரோ…. சிந்தனைவாதி எழுதியது)
படிங்க….பிடிக்கும்….. சென்னை பெருங்களத்தூர். மாலை நேரத்தை விழுங்கி இரவு மெல்ல தலை நீட்டத் தொடங்கி இருந்தது. மப்பும் மந்தாரமுமான மழைக்கால குளிரில் வெளியே தலை நீட்டாமல் நிலவு , இருளைப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தது. விடிந்தால் தீபாவளி. ஊருக்குச் செல்வதற்காக காத்துக் கிடந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பெருங்களத்தூர் பஸ்நிலையம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. பஸ்நிலையத்திற்கு முன்னூறு நானூறு மீட்டர் முன்னதாகவே ஏரிக்கரையை ஒட்டி ஒரு முஸ்லிம் , மலிவான துணிகளை கடையாய் பரப்பி வைத்திருந்தார். அவர் கடை வரை பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் பேரம்பேசி துணிகளை வாங்கிச் சென்றார்கள். அரைமணி நேரமாய் அந்த வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் மெல்ல அவரிடம் கேட்டார். “நானும் அரைமணி நேரமா பாக்குறேன்… நீங்க நூத்தம்பது ரூபா சொல்லி அவங்க நூறு ரூபாய்க்கு கேட்டாக் கூட குடுத்தீங்க. சரி … ஆனா கடைசியா ஒருத்தர் நீங்க சொன்ன நூத்தம்பது ரூபாய குடுத்தப்போ நீங்க நூறை மட்டும் எடுத்திட்டு ஐம்பதை திருப்பிக் குடுத்தீங்களே ஏன்? ” “இது ஒரே விலைனு போர்டு
நீதிபதி சந்துரு ‘உங்களுக்கு சொத்தெல்லாம் சேர்த்து வைக்க முடியாதுப்பா… பதிலா எவ்வளவு முயற்சி செய்தாவது உங்களை படிக்க வைச்சுடறேன்…’ இவை என் அப்பா சொன்ன வார்த்தைகள். இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கும் சொற்கள். 1951ம் ஆண்டு திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் பிறந்தேன். அப்பா, கிருஷ்ணசாமி. அம்மா, சரஸ்வதி. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. எனக்கு ஐந்தரை வயதாகும்போது இன்சோம்னியா பிரச்னையால் அம்மா காலமாகிவிட்டார். உடனே மறுமணம் செய்து கொண்டு எங்களை ஊரில் விட்டுவிடும்படி உறவினர்கள் அப்பாவிடம் சொன்னார்கள். அவர் மறுத்துவிட்டார். தனி ஆளாக எங்களை வளர்த்து ஆளாக்கினார். நல்ல கல்வி எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சென்னைக்கு மாற்றலாகி எங்களை அழைத்து வந்தார். முதலில் வட சென்னை. பிறகு தி.நகர். அங்கு இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எங்களை அப்பா சேர்த்தார். சமையல் உட்பட வீட்டு வேலைகள் அனைத்தையும் அப்பாவே செய்வார்.ராஜகோபால், சுந்தர் என இரண்டு அண்ணன்கள், சகுந்தலா என ஒரு அக்கா, குமார் என ஒரு தம்பி என நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அது இந்திய – சீன யுத்த நேரம். உணவு, எரிபொருள் என எல்லாமே தட்டுப்பாடு. ரேஷன் கடையி
அண்ணாத்த அவியல் தேவையான பொருட்கள் : முள்ளும் மலரும் -¾ kg திருப்பாச்சி_200g சிறுத்தை -50 g வீரம் -100 g வேதாளம் – 100 g விஸ்வாசம் – சுவைக்கு ஏற்றவாறு. *செய்முறை :* முள்ளும் மலருமை எடுத்து அதன் பழைய பச்சை வாசனை எல்லாம் போக நன்றாக கழுவவும். பின் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கழுவிய முள்ளும் மலருமை போட்டு கிளறவும். பொன்னிறமாக வந்தவுடன் திருப்பாச்சி, சிறுத்தை, வீரம், வேதாளம் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். பதமாக வந்தவுடன் கடைசியில் சுவைக்கு ஏற்றவாறு கொஞ்சம் விஸ்வாசத்தைப் போட்டு நன்றாக கிளறி இறக்கவும். *சுவையில்லா அண்ணாத்த ரெடி🤷‍♀️😀*