Skip to main content

Posts

Showing posts from December, 2019

உலகத்தமிழ் நாட்காட்டி

தற்போதைய தமிழ் நிராயண ஆண்டை அடிப்படையாக கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் இதன் அமைப்பு மாறும். ஆங்கில ஆண்டுக்கான தமிழ் தேதி யம் மொத்த நாட்களும் மாறும். ஒரு மாதத்திற்கான மொத்த நாட்கள் 29,30,31 மற்றும் 32 ஆகும். இது குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு புதிய நிரந்தர நாட்காட்டி தமிழுக்காக அறிமுகப்படுத்துகிறோம். இது சாயன (tropical year) ஆண்டை அடிப்படையாக கொண்டது. மொத்த நாட்கள் 31 மற்றும் 30 ஆகும்.
தமிழ் சர்வதேச திருவள்ளுவர் (தசதி) நாட்காட்டி தசதி நாட்காட்டி என்பது தமிழ் சர்வதேச திருவள்ளுவர் நாட்காட்டி என்பதன் சுருக்கம் ஆகும். தற்போதைய தமிழ் நாட்காட்டி 12 மாதங்களை கொண்டிருக்கும். அது கிரிகோரியன் நாட்காட்டியை போல் நிரந்தர மாறாத நாட்காட்டி அல்ல. தமிழில் ஒரு மாறாத நாட்காட்டி தேவைப்படுகிறது. தசதி நாட்காட்டியில் 13 மாதங்கள் உள்ளன. ஆண்டுக்கு 365 நாட்கள். 13 மாதங்களை பிரித்தால் மாதம் ஒன்றுக்கு 28.077 நாட்கள் வரும். ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் (சரியாக 4 வாரங்கள்) வரும். முதல் மாதம் மிகை மாதம் ஆகும் (ஆங்கிலத்தில் லீப்).மிகை மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களும் மிகை ஆண்டில் 30 நாட்களும் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 முதல் நாள் ஆகவும் திருவள்ளுவர் ஆண்டை மையப்படுத்தியும் உருவாக்கப்படுகிறது.28 நாட்கள் கொண்ட மாதம் மதி என அழைக்கப்படுகிறது. முதல் மதி மிகைமதி ஆகும்.ஆகும்.திருக்குறளில் வரும் 13 இயல்களும் 13 மாதங்களாக (மதி) உள்ளது. 1. பாமதி (பாயிரவியல்) – ஜன 15 2. இல்மதி (இல்லறவியல்) – பிப் 13/14* 3. துறமதி   (துறவறவியல்) – மார் 13 4. ஊழ்மதி (ஊழியல்) – ஏப் 10 5. அரசுமதி (அரசியல்) – மே 8 6
திருவள்ளுவரும் 13ஆம் எண்ணும் இயல் 13 அதிகாரம் 133 குறள் 1330 திருவள்ளுவர் நாட்காட்டி மாதங்கள் 13 ஆங்கில நாட்காட்டி திருவள்ளுவர் நாட்காட்டி வித்தியாசம் 13+1 நாட்கள் திருவள்ளுவர் ஆண்டு கிமு 31. அதை திருப்பி போட்டால் கிடைக்கும் எண் 13.

மாதத்தின் புதிய அலகு மதி

.சூரிய நாட்காட்டி படி ஒரு மாதம் ஒரு ஆண்டின் 12இல் ஒரு பங்கு (31 அல்லது 30 நாட்கள்) ஆகும். சந்திர நாட்காட்டி படி ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்கள் கொண்டிருக்கும்.. ஒரு சாயன மாதம் – 27.33 நாட்கள் ஒரு நிராயன மாதம் – 27.321661 நாட்கள் (approx 27 1/3) ஒரு பௌர்ணமி மாதம் (புவியின் பார்வையில்) – 29.53 நாட்கள் திருவள்ளுவர் நாட்காட்டியில் 12 மதிகள் உள்ளன. திருவள்ளுவர் நாட்காட்டி 13 மாதங்கள் கொண்டது.ஒரு மாதம் 28 நாட்கள் ஆகும். அதை அளக்க புதிய அலகு தேவை. மதி என்ற புதிய அலகை அறிமுகப் படுத்துகிறோம் ஒரு மதி – 28 நாட்கள் மிகை மதி – 29 நாட்கள் பெரு மதி – 30 நாட்கள். முதல்மதியான பாமதி சாதாரண ஆண்டில் 29 நாட்கள் (அதாவது மிகை மதி ஆக) இருக்கும் மிகை ஆண்டில் (லீப் ) 30 நாட்கள் இருக்கும் (பெரு மதி). திருவள்ளுவர் நாட்காட்டி மாதங்கள் (மதிகள்) முதல் மதியான பாமதிக்கு சாதாரண ஆண்டில் 29 நாட்களும் மிகை ஆண்டில் 30 நாட்களும் இருக்கும். பிற மதிகளுக்கு  தலா 28 நாட்கள் இருக்கும் சிறப்புகள்: 1. இது எல்லா ஆண்டிலும் மாறாத ஒரு நிரந்தர நாட்காட்டி ஆகும். 2. இதை எல்லா மதத்தவரும் பயன்படுத்தலாம் 3. எல்லா மாதமும் ஒரே நாளில் பிறக்கும்
Logo Designed for Tanganyika Keepers
Logo Designed for King Aquarium