*💐💐💐🙏🏻🌺🌺🌹"இன்றைய சிந்தனை"..( 24.09.2023)..* ......................... *"கணவன்-மனைவி உறவு என்பது''..* .................................. தெளிந்த எண்ணமும், எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் தன்மை உடைய எந்தக் கணவன், மனைவியும் சண்டை போட விரும்புவது கிடையாது, இருந்தாலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் சண்டை வருகிறது. இப்போது இதெல்லாம் இந்த உலகத்தில் ரொம்ப சாதாரணமாகப் போய் விட்டது.. இதற்கு ஓர் உதாரணம்: எரிச்சலூட்டுகிற மாதிரி ஏதாவது ஒன்றை ஒருவர் சொல்கிறார். உடனே சத்தம் ஏழு வீட்டுக்குக் கேட்கிறது, கோபம் தீப்பொறி போல் பறக்கிறது, குத்தலான பேச்சுகள் உணர்ச்சிப் பிழம்பாகப் பற்றியெரிகின்றன. பிறகு இருவரும் சில வாரம் மௌன விரதம் எடுத்துக் கொள்கிறார்கள், துளிகூட வாய் திறக்க மாட்டார்கள் நாளாக நாளாகக் கோபம் மெதுமெதுவாகத் தணிகிறது, ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இப்பொழுது சமாதானமாகி விடுகிறார்கள். இன்னொரு முறை தகராறு வரும் வரை. குடும்பத்தில் கணவன், மனைவிக்கு சண்டை வந்தாலும் சமாதானமாக இருக்க முடியும். குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசு...